பஞ்சாப் தேர்தல்.. மீண்டும் டிக் செய்யப்பட்ட சரண்ஜித் சிங்.. - ராகுல் போடும் மனக்கணக்கு இதுதான்!
சண்டிகர்: பஞ்சாப் சட்டசபைத் தேர்தலில், தலித் சீக்கிய ஓட்டுகளைக் குறிவைக்கும் விதமாக, காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னியைத் தேர்வு செய்திருக்கிறார் ராகுல் காந்தி.
பஞ்சாப், உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்ளிட்ட ஐந்து மாநில சட்டசபைத் தேர்தல் வரும் 10ம் தேதி தொடங்கவுள்ளது. இதற்காக அனைத்து கட்சிகளும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
177 சட்டசபைத் தொகுதிகளைக் கொண்ட பஞ்சாப் சட்டசபைக்கு பிப்ரவரி 20-ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. தேர்தலில் பதிவான வாக்குகள் மார்ச் 10-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

பஞ்சாப்
பஞ்சாபில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சியை தக்கவைத்துக்கொள்ள காங்கிரஸ் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. அதேவேளை, பஞ்சாபில் ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தோடு பாஜக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் களத்தில் இறங்கியுள்ளன. இந்த தேர்தலில் பஞ்சாப் காங்கிரஸூக்கு ஆம் ஆத்மி பலத்த போட்டியைக் கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது.

முதல்வர் வேட்பாளர்
இன்று பஞ்சாபில் நடைபெற்ற டிஜிட்டல் பேரணியில், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியை முதல்வர் வேட்பாளராக அறிவித்திருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இதனால் சரண்ஜித் சிங் தொண்டர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். அதேசமயம், மீண்டும் சீட் மறுக்கப்பட்டிருப்பதால் நவ்ஜோத் சிங் சித்து தொண்டர்கள் சோகத்தில் இருக்கிறார்கள்.

சரண்ஜித் சிங் சன்னி
தேர்தல் நெருங்கவுள்ள நிலையில், மிகுந்த எதிர்பார்புகளுக்கு மத்தியில் காங்கிரஸ் முதல்வர் வேட்பாளராக சரண்ஜித் சிங் சன்னி தேர்வாகி இருக்கிறார். இதற்கு காரணம் சரண்ஜித் தலித் என்று சொல்லப்படுகிறது. பஞ்சாப் மாநிலத்தில் 32 சதவிகிதம் மக்கள் தலித். அவர்களின் வாக்கு வங்கியை மொத்தமாக பெறவே, தலித் சீக்கியரை முதல்வர் வேட்பாளராக ராகுல் காந்தி களமிறக்கியுள்ளார். கடந்த தேர்தலை விட அதிக தலித் வாக்குகளைப் பெறவே இந்தத் திட்டம் என்று தெரியவருகிறது.

மாற்றம்
கடந்த சில தினங்களுக்கு முன்புதான், பஞ்சாப் முதல்வர் சரண்ஜித் சிங் சன்னியின் மருமகன் பூபேந்திர சிங் ஹனி, சட்டவிரோத மணல் கடத்தல் வழக்கில் அமலாக்க இயக்குநரகத்தால் கைது செய்யப்பட்டார். சரண்ஜித் சிங்கின் சகோதரர், சுயேட்சையாக போட்டியிடுகிறார் என சரண்ஜித் சிங்குக்கு எதிராக பல விஷயங்கள் எழுந்தன. இதனால் பஞ்சாப் காங்கிரஸில் மாற்றம் ஏற்பட்டு, நவ்ஜோத் சிங் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதற்கு பதிலாக மீண்டும் சரண்ஜித் சிங்கையே கைகாட்டி இருக்கிறார் ராகுல் காந்தி.
-
அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெற.. மாணிக்கம் தாகூர் தான் முக்கிய காரணமாம்.. சொல்கிறார் விஸ்வநாதன்! -
மதசார்பற்ற கொள்கை.. மாநில உரிமைகளில் சமரசமே கிடையாது.. மீண்டும் அழுத்தமாக சொன்ன முதல்வர் விஜய் -
CBSE: மொபைல்களில் ஸ்கேன் செய்யப்பட்ட விடைத்தாள்கள்! குற்றச்சாட்டுகளை அடுக்கும் ராகுல் காந்தி! -
CBSE: மாம்பழம் பற்றி பேச நேரமிருக்கு.. மாணவர்கள் பற்றி பேச டைம் இல்லையா? மோடிக்கு ராகுல் கேள்வி -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்!












Click it and Unblock the Notifications