சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்களிடம் விசாரிக்க சென்ற ராஜஸ்தான் போலீஸ்.. ரிசார்ட்டில் பரபரப்பு!
வருமானம் முக்கியமில்லை.. உயிரோடு வாழவிடுவது தான் முக்கியம்.. மின் கட்டணம் குறித்து ஈஸ்வரன்!சண்டிகர்: ஹரியானாவில் ரிசார்ட்டில் தங்கி இருக்கும் சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்களிடம் விசாரணை நடத்த ராஜஸ்தான் போலீஸ் சென்றது பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் அரசியல் தற்போது உச்சகட்ட பரபரப்பில் சென்று கொண்டு இருக்கிறது. அங்கு இன்னும் சச்சின் பைலட் மற்றும் முதல்வர் அசோக் கெலாட் இடையிலான மோதல் முடிவிற்கு வரவில்லை. காங்கிரஸ் இதுவரை இரண்டு முறை நடத்திய எம்எல்ஏக்கள் மீட்டிங் எதிலும் சச்சின் பைலட் கலந்து கொள்ளவில்லை.

தற்போது சச்சின் துணை முதல்வர் பதவி மற்றும் ராஜஸ்தான் காங்கிரஸ் தலைவர் பதவி இரண்டும் பறிக்கப்பட்டு உள்ளது. முதல்வர் அசோக் கெலாட் ஆட்சிக்கு எதிராக திரும்பியதால் காங்கிரஸ் தலைமை இந்த நடவடிக்கையை எடுத்து இருக்கிறது.
தற்போது சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேர் ஹரியானாவில் தனியார் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிரான தகுதி நீக்க வழக்கு இன்று டெல்லி ஹைகோர்ட்டில் விசாரணை செய்யப்படும்.
இந்த நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த காங்கிரஸ் எம்எல்ஏ பன்வார் லால் சர்மா உட்பட சில எம்எல்ஏக்களிடம் வாக்குமூலம் வாங்குவதற்காக இன்று ராஜஸ்தான் போலீஸ் ஹரியானா ரிசார்ட் சென்றது. பன்வார் லால் சர்மா உள்ளிட்ட சில எம்எல்ஏக்கள் அசோக் கெலாட் ஆட்சியை கவிழ்க்க பாஜகவுடன் பேரம் பேசியதாகவும். இது தொடர்பாக வெளியான ஆடியோ குறித்து விசாரிக்க சென்றதாகவும் ராஜஸ்தான் சிறப்பு போலீஸ் படை தெரிவித்து இருந்தது.
ஆட்சி கவிழ்ப்பு சதி குறித்து அந்த எம்எல்ஏக்களிடம் போலீசார் விசாரிக்க சென்றனர். இந்த எம்எல்ஏக்கள் எல்லோரும் சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்கள் ஆவர். இவர்கள் ஹரியானாவில் இருக்கும் பெஸ்ட் வெஸ்டர்ன் ரிசார்ட்டில் தங்கி இருக்கிறார்கள்.
ஆனால் இங்கே சென்ற போலீசார் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை. அங்கே இருந்த ஹரியானா போலீசார், ராஜஸ்தான் போலீசாரை ரிசார்ட் உள்ளே அனுமதிக்கவில்லை.
இதனால் 20 நிமிடம் வெளியே காத்து இருந்த ராஜஸ்தான் போலீசார் சச்சின் பைலட் ஆதரவு எம்எல்ஏக்களை சந்திக்காமலே திரும்பி சென்றனர். கடந்த வெள்ளிக்கிழமையும் இதேபோல் போலீசார் அந்த எம்எல்ஏக்களை சந்திக்க வந்து, பின் ரிசார்ட் உள்ளே நுழைய முடியாமல் திரும்பி சென்றனர்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications