Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"அது" வேற தந்து.. ரூமெல்லாம் சிதறி கிடந்த "வஸ்து".. கண்ணீர் பெண்களின் ஆவி.. காமப்பிண்டம் ஜிலேபி பாபா

ஜிலேபி பாபாவுக்கு 14 வருட சிறை தண்டனையை ஹரியானா கோர்ட் வழங்கி உள்ளது

Subscribe to Oneindia Tamil

சண்டிகர்: கோயிலில் சாமியாராக இருந்து, பின்பு பாலியல் குற்றவாளியாக மாறி, இன்று 14 வருடம் சிறை தண்டனையை பெற்றிருக்கும் ஜிலேபி பாபாவின் கதை, அனைவரையும் வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தி வருகிறது.

100க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் ஜிலேபி பாபாவை குற்றவாளி என ஹரியானா நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஹரியானா மாநிலம் ஃபதேஹாபாத்தில் உள்ள தோஹ்னாவை சேர்ந்தவர் ஜிலேபி பாபா.. 63 வயதாகிறது.. இவர் 100க்கும் மேற்பட்ட பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்து மிரட்டியதாக பகீர் குற்றச்சாட்டுகள் கிளம்பின.

 ஜிலேபி கடை

ஜிலேபி கடை

இந்நிலையில்தான், அவரது ஒரு வீடியோ வெளியானது.. ஒரு பெண்ணை மயக்கமடைய செய்து, அவரை பாலியல் வன்கொடுமை செய்யும் அந்த வீடியோவை பார்த்ததும் பொதுமக்கள் அதிர்ந்தனர்.. இதற்கு பிறகுதான், கடந்த 2019ம் ஆண்டு ஜூலை 19ம் தேதி தோஹானா நகர போலீசார் ஜிலேபி பாபாவை கைது செய்தனர். பிறகு அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கிட்டத்தட்ட 120 ஆபாச வீடியோக்களையும் கைப்பற்றினர்.. இதை அடுத்து ஜிலேபி பாபா ஹரியானா நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அங்கு அவரை ஹரியானா நீதிமன்றம் குற்றவாளி என தீர்ப்பளித்துள்ளது.

 ஜிலேபி கடை

ஜிலேபி கடை

அதிலும், 2 சிறுமிகளை பாலியல் பலாத்காரம் செய்ததற்காக போக்சோ வழக்கில் அவருக்கு 14 ஆண்டு சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பெண்களை பலாத்காரம் செய்த வழக்கில் 5 ஆண்டு சிறைதண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. தற்போது யார் இந்த ஜிலேபி பாபா? என்று இவரை பற்றின தகவல்கள் இணையத்தில் பரவி கொண்டிருக்கின்றன.. இவரது இயற்பெயர் அமர்புரி.. 23 வருடங்களுக்கு முன்பு பஞ்சாபின் மான்சா நகரில் இருந்து, தோஹானாவுக்கு வந்துள்ளார்.. இவருக்கு திருமணம் ஆகிவிட்டது.. 4 பெண் குழந்தைகளும், 2 ஆண் குழந்தைகளும் இருக்கிறார்கள்.. ஆனால், இவரது மனைவி இறந்துவிட்டார்..

 கோயில் குருக்கள்

கோயில் குருக்கள்

13 வருடங்களாகவே, ஒரு ஜிலேபி கடையை நடத்தி வந்திருக்கிறார்.. அப்போது கடைக்கு வந்த கஸ்டமர் ஒருவரிடம், வசியம் செய்வது, மந்திரம் தந்திரத்தை கற்றுக் கொண்டுள்ளார்.. அந்த வித்தை தெரிந்துகொண்டபிறகு, அமர்புரி, அடுத்த சில நாட்களில் தோஹானாவில் இருந்து காணாமல் போனார். பிறகு கொஞ்ச காலம் கழித்து, ஒரு வீட்டை கட்ட தோஹாவுக்கு மறுபடியும் திரும்பினார்.. அந்த வீட்டை ஒட்டி, மிகப்பெரிய கோயில் ஒன்றையும் கட்டினார் அமர்புரி.. பாபா பாலகினாத் என்ற பெயரில் கோயிலை கட்டினார்.. அந்த கோயிலுக்கு அவரே குருக்களாகவும் இருந்தார்..

 கோலம் சாமியார்

கோலம் சாமியார்

சாமியார் கோலத்தில் அமர்புரி வந்து நிற்கவும், ஏராளமான பெண்கள், அவரை பின்பற்ற ஆரம்பித்தனர்.. அப்போதுதான் எல்லாரும் அவரை ஜிலேபி பாபா என்று அழைக்க ஆரம்பித்தார்கள்.. குறுகிய காலத்திலேயே அளவுக்கு அதிகமாகவே பிரபலம் அடைந்தார் ஜிலேபி பாபா.. அந்த நேரம்தான், பாலியல் புகார்கள் இவர் மீது மெல்ல வெடித்து கிளம்பின.. மற்றொருபுறம், பதேஹாபாத் கோர்ட்டில் பல்வேறு பாலியல் ரீதியிலான வழக்குகள் குவிய ஆரம்பித்தன.. அதற்கு பிறகு, அவரது குடியிருப்பில் போலீசார் நடத்திய சோதனையில் பல ஆபாச வீடியோக்கள் சிக்கின. கடந்த 2018ல், கோவிலுக்குள்ளேயே ஒரு பெண்ணை பலாத்காரம் செய்துள்ளார் ஜிலேபி பாபா.

அடங்கலயே

அடங்கலயே

அந்த பெண், நேரடியாக போலீசுக்கே ஆதாரத்துடன் சென்றுவிட்டதால், வேறு வழியில்லாமல் கைதானார் ஜிலேபிபாபா. ஆனால், ஜாமீனில் வெளிவந்துவிட்டார்.. அப்போதும், அவர் அடங்கவில்லை.. தன்னை நம்பி வந்த பல பெண்களை நாசம் செய்துள்ளார்.. பல பெண்கள் பேய் பிடித்திருப்பதாக சொல்லி, பேயை விரட்டுமாறு சாமியாரிடம் வருவார்களாம்.. அப்போது, பாதிக்கப்பட்ட பெண்கள் எல்லாருக்குமே ஒரு திரவத்தை கட்டாயம் தந்து நினைவிழக்க செய்வாராம். பெரும்பாலான பெண்களை நாசம் செய்ய காரணமாக இருந்தது, இந்த போதை வஸ்து மட்டும்தானாம்.

வஸ்துக்கள்

வஸ்துக்கள்

சித்துவேலைகள் மாந்திரீகம், வசியம் செய்வது இப்படி எத்தனையோ வித்தைகளை காட்டி, தன் வலையில் விழ வைத்து, அவைகளை வீடியோவும் எடுத்து வைத்துக் கொண்டு மிரட்டி வந்துள்ளார்.. ஜிலேபி பாபா குறித்து போலீசார் சொல்லும்போது, "ஜிலேபி பாபா, எந்த ஒரு பெண்ணையும் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்குவதற்கு முன்பு, அந்த பெண்ணுக்கு போதை வஸ்துகளை கொடுத்து சுய நினைவை இழக்க செய்துவிடுவார்.. இதுதான் அவரது பழக்கம்.. அந்த பெண்கள் மீது ஆவி புகுந்திருப்பதாக சொல்லி, பயத்தின் காரணமாக, அவர்களை சூனிய பூஜைகளில் சுய விருப்பத்துடன் கலந்து கொள்ள வைத்துள்ளார்..

உடலுறவு

உடலுறவு

தந்திர வித்யா சடங்குகளின்போது, அவர் அவர்களை மயக்கமடையச் செய்து, அதற்கு பிறகு வன்புணர்வு செய்து வீடியோ எடுத்து மிரட்டி பணம் பறித்து வந்திருக்கிறார்.. அதுமட்டுமின்றி, வீடியோக்களை கசியவிட்டு விடுவதாக மிரட்டி தன்னுடன் உடலுறவில் ஈடுபடும்படியும் வற்புறுத்தியுள்ளார். இப்படி ஒருமுறை, ஜிலேபி பாபா ஒரு பெண்ணுடன் உடலுறவு கொள்ளும் வீடியோ, வைரலானதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்... அவரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், அவர் 120 பெண்களை பாலியல் வன்புணர்வு செய்யும் ஆபாச வீடியோக்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அவரது ரூமில் போதை மாத்திரைகள், பூஜை பொருள்களையும் பறிமுதல் செய்துள்ளோம்" என்றனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+