தமிழகத்தில் இன்று மேலும் 1,132 பேருக்கு கொரோனா பாதிப்பு- 10 பேர் மரணம்; 1210 பேர் டிஸ்சார்ஜ்
சென்னை: தமிழகத்தில் இன்று 1,132 பேருக்கு புதியதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்திய அளவில் கொரோனா பாதிப்பில் தமிழகம் 4-வது இடத்தில் இருந்து வருகிறது. தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை மட்டும் மேலும் 1,132 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

தமிழக கொரோனா மரணங்கள்
இதனையடுத்து தமிழகத்தில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கையானது 8,01,161 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் இன்றும் 10 பேர் உயிரிழந்துள்ளனர். தமிழகத்தில் மொத்த கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 11,919 ஆகும்.

டிஸ்சார்ஜ், ஆக்டிவ் கேஸ்கள்
கொரோனா சிகிச்சைக்குப் பின் இன்று மட்டும் 1,210 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இதுவரை குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 7,79,291 ஆகும். தற்போதைய நிலையில் கொரோனாவுக்காக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை (ஆக்டிவ் கேஸ்கள்) 9,951 மட்டுமே.

சென்னை, கோவையில் பாதிப்பு
மாவட்டங்களைப் பொறுத்தவரையில் சென்னை, கோவையில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு நீடித்து வருகிறது. சென்னையில் அதிகபட்சமாக 359 பேருக்கு இன்று கொரோனா உறுதியானது. கோவையில் 117 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. சென்னையில் மட்டும் 375 பேர் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டும் உள்ளனர்.

சென்னை கொரோனா மரணங்கள்
சென்னையில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2,20,560; கோவையில் 50,677; செங்கல்பட்டு மாவட்டத்தில் 48,855 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள். கொரோனா மரணங்களில் சென்னையில் மட்டும் 3,929; செங்கல்பட்டு மாவட்டத்தில் 732 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
-
தமிழகத்தில் ஒரே நேரத்தில் 60 சார் பதிவாளர் அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறை ரெய்டு! -
காங். துரோகம்.. மனக்காயத்தில் தொண்டர்கள்! இந்திய கூட்டணி கூட்டத்தில் பங்கேற்க மாட்டோம்! - திமுக -
தமிழ்நாட்டின் முதல் சட்டமன்ற பெண் செயலாளராக சாந்தி நியமனம்.. யார் இவர்? இவருடைய பவர் என்ன? -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
மேகதாது அணை: முதல்வரானதும் டி.கே.சிவகுமார் அதிரடி! முடிவெடுக்க வேண்டியது தமிழ்நாடு இல்லை! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications