எடப்பாடி, ஓபிஎஸ்ஸால் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்கள் 1,17,000 பேர்: கேசிபி சொன்ன கணக்கு!
சென்னை : எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வத்தால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே 1,17,000 பேர், தற்போது நிலவும் அசாதாரணமான சூழ்நிலையில் ஒன்றுபட்ட அதிமுக என்பது தான் காலத்தின் தேவை என கே.சி.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
அதிமுக கட்சிக் கட்டுப்பாட்டை மீறியதாக ஓபிஎஸ் - ஈபிஎஸ் இருவராலும் கூட்டாக கட்சியை விட்டு நீக்கப்பட்டவர் அதிமுக முன்னாள் எம்.பி கேசி பழனிசாமி. எம்.ஜி.ஆர் காலத்திலேயே எம்.எல்.ஏவாக இருந்த கேசி பழனிசாமி, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட நிலையில், தன்னை யாரும் கட்சியில் இருந்து நீக்க முடியாது எனக் கூறி, அதிமுக நிர்வாகி போலவே தற்போதும் மிகத் தீவிரமாகச் செயல்பட்டு வருகிறார்.

தமிழ்நாடு முழுவதும் பயணித்து பல இடங்களில் ஆலோசனைக் கூட்டங்களை நடத்தி வருகிறார் கேசி பழனிச்சாமி. காணொளிக் காட்சி வாயிலாகவும் அவ்வப்போது தொண்டர்களுடன் அவ்வப்போது உரையாடி வருகிறார். அதிமுகவுக்கு தலைமை தாங்க ஓபிஎஸ், ஈபிஎஸ் இருவருக்குமே தகுதி இல்லை என்று தொடர்ந்து பேசி வருகிறார் கேசிபி.
எடப்பாடி பழனிசாமி தலைமையை விரும்பாத அதிமுக தொண்டர்களை ஒன்றிணைத்து, பொதுச்செயலாளர் தேர்தலை நடத்தப்போவதாக கூறியிருந்தார் கேசி பழனிசாமி. இந்நிலையில், அதிமுக வழக்குகளில் எடப்பாடி பழனிசாமிக்கு சாதகமான தீர்ப்புகள் வந்த நிலையில், அதிமுகவின் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்றுள்ளார் ஈபிஎஸ். இதனால், கிட்டத்தட்ட எடப்பாடி பழனிசாமியின் கையில் வந்துள்ளது அதிமுக.
இந்நிலையில், இதுதொடர்பாக பேசியுள்ள கே.சி.பழனிசாமி, "அதிமுக என்பது எம்.ஜிஆரா உருவாக்கப்பட்ட திராவிடக் கட்சி. தொண்டர்களால் வலிமையான கட்சியாக உருவானது அதிமுக. குடும்ப ஆட்சிக்கும், லஞ்சம் - ஊழலுக்கும் எதிராகத் தொடங்கப்பட்ட கட்சி. தற்போது அதிமுக என்பது திராவிடமா - இந்துத்துவா கொள்கையா என்ற இரண்டிற்கும் இடையே மாட்டிக்கொண்டு விழிக்கிறது. தற்போதைய தலைமையிடம் கொள்கைத் தெளிவு இல்லை.
புதிய உறுப்பினர்கள் சேர்க்கை என்பது ஒருபுறமிருக்க எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகிய இருவரால் கட்சியிலிருந்து நீக்கப்பட்ட உறுப்பினர்கள் மட்டுமே 1,17,000 பேர். மேலும் இருவரின் நடவடிக்கைகள் பிடிக்காமல் தாமாக கட்சியிலிருந்து விலகிய உறுப்பினர்களும் பலர். தற்போது நிலவும் அசாதாரணமான சூழ்நிலையில் ஒன்றுபட்ட அதிமுக என்பது தான் காலத்தின் தேவை" எனத் தெரிவித்துள்ளார்.
-
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
2016 சட்டமன்ற தேர்தலில்.. அதிமுகவின் இன்பதுரை வெற்றி செல்லாது.. உயர்நீதிமன்றம் அதிரடி! -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
எடப்பாடி பழனிசாமிக்கு நிம்மதி.. IT விசாரணை கோரிய வழக்கை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் -
SP Velumani: எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு..சீண்டிய எடப்பாடி சீறிய வேலுமணி..வழியனுப்பகூட வரலையே -
இன்ஸ்டாவில் பொய் செல்லி.. ஆட்சிக்கு வந்துட்டாரு விஜய்! யாரும் கலங்க வேண்டாம்.. ஆறுதலாக பேசிய கேடிஆர் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications