சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"கைமாறுதே".. 16 சீட் எடப்பாடிக்கு.. 9 பன்னீருக்கு.. மிச்சது "அவங்களுக்கு".. இப்ப இப்படி ஒன்னு ஓடுது

எடப்பாடி பழனிசாமியிடம் பாஜக தரப்பு கூட்டணி பேச்சுவார்த்தையை துவக்க உள்ளதாம்

Google Oneindia Tamil News

சென்னை: ஒருங்கிணைந்த அதிமுகவை விரும்பும் பாஜக மேலிடம், தன்னுடைய அடுத்தக்கட்ட காய்நகர்த்தலை மெல்ல துவங்கி உள்ளதாக கூறப்படுகிறது.. இதுகுறித்த ஒரு அனுமான செய்தியும் இணையத்தில் வட்டமடித்து கொண்டிருக்கிறது.

எடப்பாடி பழனிசாமியோ, பாஜகவின் அத்தனை எதிர்பார்ப்புகளையும் நொறுக்கி கொண்டிருப்பதாக சொல்கிறார்கள்... இதையடுத்து, பாஜக மேலிடம் அடுத்தக்கட்ட வியூகத்தை கையில் எடுக்கும் என தெரிகிறது.

அதாவது, எடப்பாடி பழனிசாமிக்கு வேண்டிய தொழிலதிபர்கள், நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் வருமான வரித்துறை அதிரடி சோதனை நடத்த வேண்டிய நிலைமையும் வந்துள்ளதாக தெரிகிறது..

தேர்தல் ஆணையம் வைத்த 'திடீர்’ ட்விஸ்ட்! எடப்பாடி கையில் அதிமுக? எல்லாம் ஓகே.. ஆஹா! கதை முடிஞ்சுதா? தேர்தல் ஆணையம் வைத்த 'திடீர்’ ட்விஸ்ட்! எடப்பாடி கையில் அதிமுக? எல்லாம் ஓகே.. ஆஹா! கதை முடிஞ்சுதா?

 பாயும் கத்திகள்

பாயும் கத்திகள்

இப்போதுகூட விஜயபாஸ்கர், வேலுமணி, தங்கமணி உள்பட பலரது பிடி, பாஜவின் கைகளில்தான் உள்ளது... இவர்களில் பலருக்கு வருமான வரித்துறையின் வழக்கும் உள்ளது... சிலருக்கு உறவினர்கள், பினாமிகளின் கம்பெனிகள் மீதும் வழக்கு உள்ளது... இதனால், அதிமுக சீனியர் தலைவர்கள் தங்களை வழக்குகளில் இருந்து காப்பாற்றிக் கொள்ள பாஜக என்ன சொன்னாலும் செய்யத் தயாராக உள்ளனர்... ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, என்ன செய்தாலும் பரவாயில்லை, அதிமுக ஒருங்கிணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை, தேவைப்பட்டால் பாஜவை எதிர்த்து அரசியல் செய்யவும் தயார் என்று சீனியிர் தலைவர்களிடம் சொல்லி வருகிறாராம்.

 மாஸ் அலையன்ஸ்

மாஸ் அலையன்ஸ்

இதற்கு இன்னொரு காரணமும்உள்ளது.. நடைபெற உள்ளது எம்பி தேர்தல் என்பதால், இதை பற்றி பெரிதாக எடப்பாடிக்கு கவலை இல்லை என்கிறார்கள்.. இதில் தோற்றாலும், அதிமுகவுக்கு எந்த நஷ்டமும் இல்லை... எனவே, பாஜகவுக்குதான் இந்த தேர்தலால் மிகப்பெரிய சவாலும் நெருக்கடியும் உள்ளது.. எனினும், தான் அமைக்க போகும் மெகா கூட்டணியில், அவர்கள் வந்து இணைந்தால் இணையட்டும்.. இல்லாவிட்டால் சசிகலா, ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் கூட்டணி அமைக்கட்டும்... தான் தனியாக போட்டியிட தயாராக இருப்பதாகவும் எடப்பாடி சொல்லி வருகிறாராம்..

 டபுள் தூது

டபுள் தூது

எந்த வழியில் பாஜக செக் வைத்தாலும், அசராமல் எடப்பாடி உள்ளதால், மேலிடம் குழம்பி போயுள்ளதாகவும் தெரிகிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு தகவல் கசிந்தது.. 2 முக்கியமான நபர்களை, டெல்லியில் இருந்து அனுப்பி எடப்பாடி பழனிசாமியிடம் சமாதானம் பேசப்பட்டதாம்.. ஒருங்கிணைந்த அதிமுக என்ற பேச்சையும் அவர்கள் எடப்பாடியிடம் எடுத்துள்ளதாக தெரிகிறது.. 2 தூதுவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தியும்கூட, எடப்பாடி கறாராக "நோ" சொல்லிவிட்டாராம்..

சிக்னல்

சிக்னல்

பெருமளவு கட்சியும், நிர்வாகிகளும் தன் பக்கம் உள்ளபோது, தன்னை மட்டுமே கட்சியின் தலைமையாக அங்கீகரிக்க வேண்டும் என்பதையும், ஓபிஎஸ், சசிகலா, தினகரனுக்கு இடமில்லை என்பதையும், தினகரன் இல்லாமல், பாஜகவுடன் கூட்டணி அமைக்க தயாராக என்பதையும், மீண்டும் ஒருமுறை அழுத்தமாக தன் நிலைப்பாட்டை எடப்பாடி அப்போது சொன்னதாக தெரிகிறது. குஜராத் முதல்வர் பதவியேற்புக்கும் செல்லாமல், தன்னுடைய இந்த பிடிவாதத்தைதான் எடப்பாடி பழனிசாமி மீண்டும் ஒருமுறை மேலிடத்துக்கு காட்டியதாகவும் சொல்கிறார்கள்..

 வெள்ளைக்கொடி

வெள்ளைக்கொடி

இந்நிலையில்தான் இன்னொரு தகவலும் வட்டமடிக்கிறது.. எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் அவரின் முக்கிய ஆதரவாளர்களான 2 மாஜிக்களிடம் பாஜகவின் 2ம் கட்ட தலைவர்கள் கூட்டணி பேச்சுவார்த்தையை சைலண்ட்டாக துவங்கி உள்ளார்களாம்.. ஒருங்கிணைந்த அதிமுக என்பதில் உறுதியாகவே இருந்து வரும் பாஜக, ஒரு கணிப்பை சொல்லி உள்ளது. அதாவது, ஓபிஎஸ்ஸுடன் இணைந்து தேர்தலை சந்தித்தால், பாஜகவுக்கு 10 தொகுதிகள் மட்டுமே போதும்.. அப்படி இல்லாவிட்டால் அதிமுகவுக்கு வெறும் 16 தொகுதிகள் மட்டுமே ஒதுக்கப்படும், அதில் எடப்பாடி தரப்பு போட்டியிடலாம்.. மற்ற 24 தொகுதிகளில் ஓபிஎஸ்ஸுக்கு 9 ஒதுக்கப்பட்டு, மிச்சமுள்ளவைகளை பாமக, அமமுகவுக்கு ஒதுக்கப்படலாம் என்பதே அந்த யோசனையாம்.. இதில், ஓபிஎஸ் தாமரை சின்னத்தில் போட்டியிடக்கூடுமாம்..

 2 ஆப்ஷன் 2 ஆப்ஷன்

2 ஆப்ஷன் 2 ஆப்ஷன்

இந்த 2 ஆப்ஷன்களுக்கும் எடப்பாடி ஒப்புக்கொள்ளாவிட்டால், இரட்டை இலை சின்னம் முடக்கப்பட்டு விடும் அபாயம் உள்ளதாகவும தெரிகிறது.. இரட்டை இலையை முடக்குவதால், ஓபிஎஸ்ஸைவிட, எடப்பாடி தரப்புக்கு பெருத்த அடியாக இருக்கும் என்கிறார்கள். எடப்பாடிக்கு வேண்டுமானால், இரட்டை இலையை நம்பாமல் அரசியல் செய்யலாம்.. ஆனால், மற்ற தலைவர்கள், சீனியர்கள் இரட்டை இலை இல்லாமல் அதிமுகவில் அரசியல் செய்ய முடியாத சூழல் உள்ளது.. எனவே, எடப்பாடிபழனிசாமி கூட்டணி தொடர்பாக என்ன முடிவெடுக்க போகிறார்? என்பதே எதிர்பார்ப்பாக எகிறி வருகிறது.

English summary
10 + 15 seats: When will the AIADMK issue end and What is Edappadi Palanisami going to decide
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X