Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மொட்டை மாடியில் 10 வயசு பையன் பண்ண வேலையை பாருங்க.. மோப்ப நாய் வரை சென்று தவித்த போலீஸ்.. சபாஷ் டோனி

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டுக்கு வெளியே விளையாடி கொண்டிருந்த தங்களுடைய 10 வயது மகனை காணாமல் பெற்றோர் பதறிப்போனார்கள்.. இதனால் அக்கம் பக்கத்தில் விசாரித்ததுடன், அந்த தெரு முழுக்க மகனை தேடினார்கள்.. எங்கேயுமே காணவில்லை.. இதனால் பதற்றம் அதிகரித்த நிலையில், போலீசுக்கு சென்று புகார் தந்தனர்.. போலீசாரும் அப்புகாரை பெற்றுக்கொண்டு, உடனடியாக மாயமான சிறுவனை தேட துவங்கினார்கள்.. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுவிட்டது.

டியூஷன் செல்லும் மாணவ, மாணவிகள் திடீரென காணாமல் போவதுண்டு.. தன்னிடம் படிக்கும் மாணவன் மீது டியூஷன் ஆசிரியைக்கு காதல் வருவது, அல்லது மாணவி மீது டியூஷன் ஆசிரியருக்கு காதல் மலர்வது போன்ற விவகாரங்களும் நடப்பதுண்டு..

10 year old boy tuition sniffer dog Tony 10

டியூஷனில் மலர்ந்த காதல்

சமீபத்தில்கூட சென்னை எம்ஜிஆர் நகர் போலீஸ் ஸ்டேஷனில் பெண் ஒருவர் தன்னுடைய 15 வயது மகனை காணவில்லை என்று புகார் தந்திருந்தார்.. அதாவது, டியூஷன் ஆசிரியையின் தங்கை, அந்த சிறுவனுடன் நெருங்கி பழகி வந்தாராம்..

இதுகுறித்து ஏற்கனவே புகார் தந்து, டியூஷன் ஆசிரியையின் 23 வயதான தங்கையை கண்டித்துள்ளனர். ஆனாலும், இந்த சம்பவம் நடந்து 15 நாட்களுக்குள் சிறுவன் காணாமல் போயிருக்கிறான்.. அதுமட்டுமல்ல, அன்றைய தினம் டியூஷன் ஆசிரியையின் தங்கையும் வீட்டில் இல்லை என்பதால் சந்தேகம் வலுத்துள்ளது..

பிறகு இது தொடர்பாக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு, மாயமான சிறுவனை தேடி வந்தனர்.. இறுதியில், புதுச்சேரிக்கு சிறுவனை ஆசிரியையின் தங்கை அழைத்து சென்றது உறுதியானது.. உடனே போலீசார் புதுச்சேரிக்கு சென்று சிறுவனை மீட்டு, அந்த பெண்ணையும் போக்சோவில் கைது செய்திருந்தது நினைவிருக்கலாம்.

டியூஷன் சிறுவன் எங்கே

அதேபோல டியூஷனுக்கு செல்லும் குழந்தைகளை கடத்தும் சம்பவமும் தமிழகத்தில் நடந்துள்ளது.. சிலசமயம் குழந்தைகள் வழிதவறி தொலைந்து போவதும் உண்டு.. எனவேதான், இதனால் டியூஷனுக்கு செல்லும் தங்களது மகன், மகள் வீடு வந்து சேரும்வரை பல பெற்றோர்கள் வயிற்றில் நெருப்பை கட்டிக் கொண்டிருக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது..

இந்நிலையில், உத்தர பிரதேசத்தில் ஒரு வித்தியாசமான சம்பவம் நடந்துள்ளது.. கோரக்பூர் மாவட்டத்தை சேர்ந்த 10 வயது சிறுவனின் பெயர் லக்‌ஷயா பிரதாப் சிங்... நேற்று மாலை 5 மணிக்கு வீட்டுக்கு பக்கத்தில் விளையாடிக் கொண்டிருந்தான் லக்‌ஷயா.. ஆனால் அதற்கு பிறகு நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை.. இதனால் மகனை தேடி பெற்றோர் சென்றனர்.. ஆனால், விளையாடி கொண்டிருந்த இடத்தில் மகன் இல்லாததால் பதறிப்போய்விட்டனர்..


மோப்ப நாய் வந்தது

இதனால் அந்த பகுதி முழுவதும் மகனை தேடினார்கள்.. எங்குமே மகன் கிடைக்காததால், உடனடியாக போலீசுக்கு சென்று புகார் தந்தனர்.. உடனே போலீசாரும், சிறுவன் லக்‌ஷயாவை தேடும் பணியில் இறங்கினார்கள்.. லக்‌ஷயாவின் போட்டோவை அந்த பகுதியிலுள்ள அனைத்து போலீஸ் ஸ்டேஷன்களுக்கும் அனுப்பி வைத்தனர்...

அத்துடன், வாட்ஸ்அப் குரூப்களிலும் லக்‌ஷயாவின் போட்டோவை ஷேர் செய்தனர்.. மேலும், பஸ் ஸ்டாண்டுகள், ரயில்வே ஸ்டேஷன் உள்ளிட்ட பகுதிகளுக்கும் நேரடியாகவே சென்று லக்‌ஷயாவை தேடினார்கள். ஆனால், எந்த பலனும் கிடைக்கவில்லை.. இதனால் அடுத்து என்ன செய்வதென்று யோசித்த போலீசார், உடனே மோப்ப நாயை வரவழைத்து தேடுதல் பணியை ஆரம்பித்தனர்.. இதற்காகவே 'டோனி' என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது..

சபாஷ் டோனி

டோனியிடம் லக்‌ஷயாவின் சட்டையை காட்டி, அதனை மோப்பம் பிடிக்க வைத்தனர். டோனியும் சட்டையை மோப்பம் பிடித்துவிட்டு, இங்குமங்குமாய் தெருவில் வேகமாக ஓடியது.. பிறகு, திடீரென சிறுவனின் வீட்டில் மேல் மாடிக்கு ஓடியது.. அங்கிருந்த அறையின் வெளியே நின்று கொண்டு குரைக்க துவங்கியது..

ஆனால் அந்த அறைக்கதவு உள்பக்கமாக தாழிடப்பட்டிருந்தது.. இதனால் போலீசார் கதவை தட்டினார்கள்.. ஆனால் நீண்ட நேரம் கதவை தட்டியும் யாரும் திறக்கவில்லை.. இதனால் போலீசார் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர்.. அங்கே காணாமல் போனதாக கருதப்பட்ட லக்‌ஷயா தூங்கி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ந்தனர்.

4 மணி நேரமாக சிறுவனை வலைவீசி தேடி கொண்டிருந்தநிலையில், ரூமுக்குள் வந்து எப்போது படுத்து தூங்கினான் என்பது தெரியவில்லை.

அப்பாவியாய் சொன்ன சிறுவன்

பிறகு சிறுவனை எழுப்பி விசாரித்தால், "ஹோம் ஒர்க் செய்து முடிக்கல.. டியூஷன் போகவே பயமா இருந்தது.. அதனால்தான் யாருக்கும் தெரியாமல் இங்கு வந்து ஒளிந்துகொண்டேன்.. டியூஷன் டைம் முடிந்ததுமே வெளியே வந்துடலாம்ன்னு தான் நினைச்சேன்.. ஆனால் என்னையும் அறியாமல் இப்படியே தூங்கிவிட்டேன்" என்று அப்பாவியாக சொல்லியிருக்கிறான்.

இதற்கு பிறகு சிறுவனை பெற்றோரிடம் ஒப்படைத்த போலீசார், மோப்ப நாயை சரியான நேரத்தில் அழைத்து வந்ததால்தான், வேலை எளிதாக முடிந்தது என்று தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+