மோடி அரசின் 100 நாட்களில் தமிழ்நாட்டுக்கு எத்தனை திட்டங்கள் தெரியுமா? மத்திய அமைச்சர் எல்.முருகன்
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் 100 நாட்களில் தமிழ்நாட்டுக்கு வந்தே பாரத் ரயில்கள், துறைமுக முதலீடு, தொழில்நுட்ப வளர்ச்சி என பல்வேறு துறைகள் மூலம் முதலீடுகள், திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார். மேலும் இந்திய அளவில் 100 நாட்களில் உள்கட்டமைப்பில் ரூ.3 லட்சம் கோடிமுதலீடு செய்யப்பட்டுள்ளது எனவும் மத்திய அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
இது தொடர்பாக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியதாவது: 100 நாட்களுக்குள், உள்கட்டமைப்பு, விவசாயம், பெண்கள் மேம்பாடு, பழங்குடியினர் நலன், பட்டியல் சமூகத்தினர் நலன், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நலன், ஏழைகளின் மேம்பாடு ஆகியவற்றுக்காக ரூ .15 லட்சம் கோடி முதலீடு செய்யப்பட்டுள்ளது. விவசாயம், ஊரகப் பகுதிகள், நெடுஞ்சாலைகள், ரயில்வே, விமானப் போக்குவரத்து, துறைமுகங்கள் ஆகியவற்றின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

இந்த 100 நாட்களில் உள்கட்டமைப்பில் ரூ.3 லட்சம் கோடிமுதலீடு செய்யப்பட்டுள்ளது. "குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்.எஸ்.பி)5% முதல் 12.7% ஆக உயர்த்தப்பட்டுள்ளது, கூடுதலாக,பிரதமர்-கிசான்திட்டத்தின் 17 வது தவணையிலிருந்து ரூ .20,000 கோடி9.3 கோடி விவசாயிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த முதல் 100 நாட்களில் நாடு முழுவதும்பெண்களுக்குஅதிகாரம் அளிக்கும் வகையில் 3 கோடி வீடுகள்கட்ட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில், இந்த 100 நாட்களுக்குள்,சென்னையிலிருந்து நாகர்கோவிலுக்கும்,மதுரையிலிருந்து பெங்களூருக்கும் இரண்டு வந்தே பாரத் ரயில்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அனுமதி அளித்துத் தொடங்கி வைத்துள்ளார்.
தூத்துக்குடியில், 100 நாள் திட்டத்தின் ஒரு பகுதியாக ஒரு புதிய முனைய துறைமுகம் ரூ. 7,000 கோடி முதலீட்டைப் பெற்றுள்ளது. 11 புதிய நகரங்கள் பண்பலை வானொலி விரிவாக்கத்தின் கீழ் இணைக்கப்பட்டுள்ளன. குறைக்கடத்தி இயக்கத்தில் (செமிகண்டக்டர் மிஷன்) தமிழ்நாடு முக்கிய பங்கு வகித்து, நாட்டின் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்து வருகிறது. மீன்வளத்துறையில், புதிய நீர்வாழ் பூங்காக்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
100 நாட்களில் நடைபெற்றுள்ள இந்த சாதனைகள், சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் அதிகாரம் அளிப்பதில் கவனம் செலுத்தி, பல்வேறு துறைகளில் விரைவான வளர்ச்சிக்கான அரசின் உறுதிப்பாட்டை எடுத்துக்காட்டுகிறது. இவ்வாறு மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் தெரிவித்தார்.
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம்












Click it and Unblock the Notifications