1000 அடி நீர்வீழ்ச்சியில் காதலி.. அடுத்து காதலன் செய்த செயல்.. காட்டிக் கொடுத்த 1 மெசேஜ்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூரில், 5 ஆண்டுகளுக்கும் மேலாகக் காதலித்த பெண்ணுக்கு இன்னொருவருடன் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.. இந்த விஷயம் தெரிந்து நிச்சயிக்கப்பட்டதால் அதிர்ச்சியடைந்த இளைஞர், அவரை 1000 அடி ஆழமுள்ள பள்ளத்தாக்குக்கு அழைத்து சென்றாராம்.. அங்கு என்ன நடந்தது? இந்த சம்பவத்தில் ஒரேயொரு செல்போன் மெசேஜ், மொத்த போலீசாரையும் அதிர செய்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் அருகே உள்ள கர்கோடி பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீபத் தின்கர்.. 25 வயதாகிறது.. இவர் தன்னுடைய தெருவில் வசித்து வந்த என்ஜினியரிங் படிக்கும் தரன்னம் என்ற மாணவியை காதலித்து வந்துள்ளார்.. தரன்னமும், ஸ்ரீபத்தை உயிராக விரும்பியிருக்கிறார். இது 5 வருட காதலாகும்.

Waterfall

நீர்வீழ்ச்சி - ஆயிரம் அடி உயரத்தில் காதலி

இந்நிலையில், தரன்னத்தின் குடும்பத்தினர் தங்கள் பெண்ணுக்கு வேறொரு நபருடன் திருமணம் நிச்சயம் செய்துள்ளனர். அடுத்த மாதமே திருமணம் நடைபெறவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.. இதனால், தன்னுடைய காதலன் ஸ்ரீபத்திடம், தன்னுடைய வீட்டில் திருமணம் ஏற்பாடுகள் நடப்பதால், இனி இந்த காதலை தொடர முடியாது என்றும் தரன்னம் சொல்லியிருக்கிறார்.. இதனால் ஆத்திரமும், ஆவேசமுமடைந்த ஸ்ரீபத், தரன்னமை கொன்றுவிடுவதென்று முடிவு செய்தார்..

இதற்காக சம்பவத்தன்று தரன்னத்தைத் தன்னுடன் சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலுள்ள நாயக்வாடி நீர்வீழ்ச்சிக்கு அழைத்து சென்றுள்ளார்.. சுமார் 1000 அடி ஆழம் கொண்ட அந்த நீர்வீழ்ச்சியில் வறட்சி காரணமாகத் தண்ணீர் இல்லை.. அதனால் மக்கள் நடமாட்டமும் இல்லை..

அதிர்ந்த போலீஸ்

நீர்வீழ்ச்சியின் உச்சியில், தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு ஸ்ரீபத் கேட்டுள்ளார்.. இதற்கு தரன்னம் மறுப்பு சொல்லவும், 2 பேருக்கும் மறுபடியும் கல்யாண தகராறு வெடித்தது.. அப்போது மடக்கென ஸ்ரீபத் தரன்னமை மலை உச்சியிலிருந்து பள்ளத்தில் தள்ளிவிட்டார்.. இதில் உடல் சிதறி காதலி இறந்துவிட்டார்.

இதையடுத்து போலீசார் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்று விசாரணையை துவங்கினர்.. ஸ்ரீபத்திடமும் விசாரணையை துவங்கினார்கள்.. ஆனால் ஸ்ரீபத் தந்த வாக்குமூலத்தை கேட்டு போலீசாரே திகைத்து விட்டார்கள்..

1000 அடி பள்ளத்தாக்கு

அதாவது தரன்னத்துக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது பிடிக்கவில்லை.. இதை என்னிடம் சொல்லி அழுதாள்.. உடனே நாங்கள் 2 பேரும் சேர்ந்து தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்தோம்.. இதற்காக நீர்வீழ்ச்சிக்கும் சென்றோம்.. ஆனால், எனக்கு ஆயிரம் அடி கீழே பள்ளித்தை பார்த்ததுமே பயந்துவிட்டேன்.. தரன்னம் உடனே பள்ளத்தில் குதித்துவிட்டாள்" என்றார்.

ஆனால், ஸ்ரீபத் சொன்ன இந்த வாக்குமூலத்தாவ் போலீசார் குழம்பினார்கள்.. அதனால் ஸ்ரீபத் - தரன்னம் இருவரின் செல்போன் மெசேஜ்களை ஆய்வு செய்தனர்.. அதில், ஸ்ரீபத் சொல்வது மொத்தமும் பொய் என்பது தெரியவந்தது.. இதற்கு உடனடியாக ஸ்ரீபத்தை போலீசார் கைது செய்தனர். 1000 அடி பள்ளத்தாக்கிலிருந்து தரன்னத்தின் உடலும் மீட்கப்பட்டது..

மெசேஜ் காட்டித் தந்தது

இந்த வழக்கு குறித்து துணை போலீஸ் கமிஷனர் விவேக் பாட்டீல் செய்தியாளர்களிடம் சொல்லும்போது, ஸ்ரீபத்தும் தரன்னமும் கடந்த ஐந்தரை வருடங்களாகக் காதலித்து வந்துள்ளனர். தரன்னத்தின் குடும்பத்தினர் அவருக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயித்ததால் ஸ்ரீபத் மனவேதனையில் இருந்துள்ளார்.

2 பேரும் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்ததாக அவர் கூறியிருந்தாலும், செல்போன் மெசேஜ்கள் அதை காட்டி தந்துவிட்டது. கொலைக் குற்றத்துக்கான இந்திய தண்டனைச் சட்டத்துக்குப் பதிலாக இபபோது அமலில் உள்ள பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தின் பிரிவு 103(1)-ன் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். ஸ்ரீபத்தை 5 நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க கோர்ட் உத்தரவிட்டுள்ளது" என்றார்..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+