"1000 ரூபாய்".. மகளிர் உரிமைத் தொகை வருது.. அக்கவுண்ட் ஓப்பன் பண்ணியாச்சா? தமிழ்நாடு அரசு செம ஏற்பாடு
சென்னை: தமிழகத்தில் குடும்ப தலைவிக்கு ரூ.1000 உரிமைத்தொகைக்கு, நிபந்தனைகள் உண்டு என்று தெரிவிக்கபட்டுள்ளதால் பெண்கள் இதனால் சந்தேகமும், குழப்பமும் அடைந்துள்ளனர்.
பெண்களுக்கு 1000 ரூபாய் அறிவிப்பு குறித்து கடந்த மார்ச் மாதம் 20ம் தேதி நிதியமைச்சர் அறிவித்தார்.. மகளிர் உரிமை தொகை மாதம் ஆயிரம் ரூபாய் அறிஞர் அண்ணாவின் பிறந்தநாளான செப்டம்பர் மாதம் முதல் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவிப்பும் வெளியிட்டிருந்தது..

புரட்சி ஏற்படுத்தும் இந்த திட்டத்திற்காக 7 ஆயிரம் கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் மகளிர் உதவித் தொகைக்கு தகுதியானவர்கள் குறித்த வரைமுறைகள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.. ஆனால், தகுதி அடிப்படையில் இல்லாமல் அனைவருக்குமே உரிமைத்தொகையை வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் கோரிக்கையை வைத்து வருகின்றன.
உரிமைத்தொகை: எனவே, தமிழகத்தில் 1 கோடி மகளிருக்கு மாதம், 1000 ரூபாய் உரிமை தொகை வழங்கும் திட்டம், வரும் செப்டம்பர் முதல் செயல்படுத்தப்பட உள்ள நிலையில், இதற்கு தகுதியான பயனாளிகள் தேர்வுகள் முழுவீச்சில் நடந்து கொண்டிருக்கின்றன.. இதனிடையே, இந்த உரிமைத்தொகையை தமிழக அரசு எதன்மூலம், எப்படி தரப்போகிறது? நேரடியாகவே வங்கிக்கணக்கு உரிமைத்தொகை சென்றுவிடுமா? என்றெல்லாம் சந்தேகம் கிளம்பி வருகிறது.
மைக்ரோ ஏடிஎம் கருவிகள்: எப்படிப்பார்த்தாலும், மகளிர் உரிமை தொகையை, மாநில தலைமை மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் சார்பில், ரேஷன் கடைகளில், மைக்ரோ ஏடிஎம் கருவிகள் வாயிலாக பட்டுவாடா செய்ய, தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.. எனினும் உரிமைத்தொகை வழங்குவதற்கான அனைத்து முன்னேற்பாடுகளையும் துரிதமாக கையில் எடுத்துள்ளது.
அந்தவகையில், குடும்பத்தில் வங்கி கணக்கு இல்லாதபட்சத்தில் குடும்ப தலைவி பெயரில் அஞ்சல்துறையில் சேமிப்பு கணக்கு தொடங்க, சிறப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இன்றையதினம் சேலம் மாவட்டத்தில் முகாம் நடத்தப்பட்டது.. செல்லக்குட்டிகாடு, சாமியப்பா நகர், நாழிக்கல்பட்டி, நிலவாரப்பட்டி, கொழிஞ்சிப்பட்டி, நாட்டாமங்கலம், காட்டூர், அரசமரத்துகாட்டூர், தம்மநாயக்கன்பட்டி, மல்லுார் பகுதிகளில் அஞ்சல் கணக்கு தொடங்க முகாம் நடந்துள்ளது..
நாளையும் முகாம்: நாளைய தினம், அ.கொண்டலாம்பட்டி, பனமரத்துப்பட்டி, வாழக்குட்டப்பட்டி, மல்லுார், மூக்குத்திபாளையம், திப்பம்பட்டி, திப்பம்பட்டி, அம்மாபாளையம் பகுதிகளில் இந்த முகாம் நடக்க உள்ளது.. நாளை மறுதினம் எங்கெங்கு முகாம் நடக்க போகிறது என்ற அறிவிப்பும் வெளியாகி உள்ளது.. செப்டம்பர் மாதம் துவங்குவதற்குள், இந்த முகாம்களை மாவட்டங்களில் நடத்திவிடுவது என்ற முனைப்பில் தமிழக அரசு தீவிரமாகி உள்ளது.
-
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக -
நடிகர் வாகை சந்திரசேகருக்கு கிடைத்த கௌரவம்.. பல வருட உழைப்புக்கு அங்கீகாரம்! குவியும் பாராட்டு -
எலக்ட்ரானிக் சிட்டி டூ ஓசூர் ரோடு இனி 5 நிமிட ரேஸ்! பெங்களூரு நம்ம மெட்ரோவின் அந்த ப்ளூ லைன் கணக்கு -
சூர்யவன்ஷியிடம் வம்பிழுத்த இலங்கை வீரர்கள்.. டீ-சர்ட்டை பிடித்து தள்ளி.. மைதானத்தில் பரபரப்பு!












Click it and Unblock the Notifications