சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தமிழ்நாட்டில் 10,12ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு கட்டாயம் உண்டு.. எப்போது தெரியுமா.. அமைச்சர் அதிரடி

மாணவர்களுக்கு பொதுத்தேர்வு எப்போது என்று அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.. அத்துடன் அந்த தேர்தல்கள் எப்போது நடக்க வாய்ப்புள்ளது என்றும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் கொரோனா தொற்று பாதிப்பு இன்னும் முழுமையாக குறையவில்லை.. மற்றொருபக்கம் ஒமிக்ரான் பரவலும் வேகமெடுத்து வருவதால், மறுபடியும் லாக்டவுன் போடும் நிலைமைக்கு தமிழகம் வந்துள்ளது.

இதனால் பள்ளி கல்லூரிகளையும் திறக்க முடியாத சூழல் உருவாகிவிட்டது.. கடந்த சில தினங்களுக்கு முன்பு அரசு சார்பில் ஒரு அறிவிப்பு வெளியாகி இருந்தது..

தமிழக பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. நச் அறிவிப்பு.. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடிதமிழக பள்ளிகளுக்கு பறந்த முக்கிய உத்தரவு.. நச் அறிவிப்பு.. அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி

விடுமுறை

விடுமுறை

அதில், அதிகரித்து வரும் கொரோனா பெருந்தொற்று பரவல் காரணமாக மாணவர்களின் நலன் கருதி வரும் 31ம் தேதி வரை 10, 11 மற்றும் 12 உள்ளிட்ட அனைத்து வகுப்புகளுக்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது.. மூன்றாவது அலை அதிகரித்துவரும் நிலையில் 10, 11, 12ம் வகுப்புகளின் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்துவதை தவிர்க்கவும், ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவுறுத்தியிருந்தது..

ஆலோசனை

ஆலோசனை

எனவே, 10, 11, 12ம் வகுப்புகளின் மாணவர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் 12ம் வகுப்பு திருப்புதல் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதேசமயம் ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும்" என்று அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டிருந்தது... ஆனாலும், 10, 11, 12 ஆகிய வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்துவது பற்றி பள்ளிக் கல்வித்துறை தொடர்ந்து ஆலோசனை நடத்தி வருகிறது..

நிர்வாகம்

நிர்வாகம்

பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை சேகரிக்க வேண்டிய பொறுப்பு, அந்தந்த பள்ளிகளிடமும் ஒப்படைக்கப்பட்டுள்ளதையடுத்து, அந்த பணிகளும் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன... இந்நிலையில், தமிழகத்தில் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

 கண்டிப்பாக நடைபெறும்

கண்டிப்பாக நடைபெறும்

இன்று செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், 10 ,11, 12ம் வகுப்புகளுக்கு பாடங்களை முடிக்க வேண்டியுள்ளது. அதனால், பொதுத்தேர்வு அவசியம்... அதன் அடிப்படையில் மே மாத தொடக்கத்திலோ இறுதியிலோ பொதுத்தேர்வு நடைபெறலாம்... மே மாதம் ஆக இருந்தாலும் பொதுத்தேர்வு கண்டிப்பாக நடைபெறும்... ஊரடங்கு குறித்த ஆலோசனை கூட்டத்தில் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யப்படும்" என்று தெரிவித்துள்ளார்.. இதையடுத்து பள்ளி மாணவர்கள், தங்களின் தேர்வுகளுக்கு தயாராகி வருகிறார்கள்..!

English summary
10th and 12th class Public examination will be held, TN Minister Anbil Mahesh
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X