சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

மண்டையை பிளக்கும் கத்தரி வெயில்.. இன்று 11 இடங்களில் சதமடித்த வெயில்.. எங்கு அதிகம் தெரியுமா

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகம் கத்தரி வெயில் தொடங்கி சில நாட்கள் மட்டுமே ஆகியுள்ள நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் வெயிலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது.

புவி வெப்ப மயமாதல் உள்ளிட்ட பல காரணங்களால் வெயிலின் தாக்கம் ஒவ்வொரு ஆண்டும் அதற்கு முந்தைய ஆண்டைவிட மோசமாக மாறி வருகிறது. இதன் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது

கத்தரி வெயில் காலத்தில் மட்டுமே வெயில் காலத்தில் மட்டுமே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் என்ற நிலை மாறி, இப்போதெல்லாம் மார்ச் மாதமே வெயில் தாக்கம் மோசமடைய தொடங்கிவிட்டது.

 கத்தரி வெயில்

கத்தரி வெயில்

இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்தரி வெயில் கடந்த மே 4ஆம் தேதி தொடங்கியது. இந்த கத்தரி வெயில் காலம் மே 4 முதல் வரும் 28ஆம் தேதி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. இந்த காலகட்டத்தில் வெளியின் தாக்கம் இயல்பை விட சில டிகிரி வரை கூடுதலாக இருக்கும் என்பதால் மதிய நேரங்களில் பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 மிரட்டும் வேலூர்

மிரட்டும் வேலூர்

இதனிடையே தமிழ்நாட்டில் இப்போது கத்தரி வெயில் தொடங்கி உள்ள நிலையில், மாநிலத்தில் 11 இடங்களில் வெப்ப நிலை சதம் அடித்துள்ளது. அதிகபட்சமாக வேலூர் மாவட்டத்தில் வெப்பம் 105.98 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவாகி உள்ளது. தமிழகத்தில் இன்று பதிவான வெப்பத்தில் வேலூர் மாவட்டத்தில் தான் மிக அதிகம் ஆகும்.

 சதமடித்த வெயில்

சதமடித்த வெயில்

வேலூருக்கு அடுத்து தஞ்சை மாவட்டத்தில் வெப்பத்தின் அளவு 104 டிகிரி பாரன்ஹீட்டாக. அதேபோல திருத்தணியிலும் வெயில் 104 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவு ஆகியுள்ளது. அதைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் 103.1 டிகிரி பாரன்ஹீட் மற்றும் மதுரை நகர்ப் பகுதியில் 101.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. அதேபோல ஈரோடு (101) , கரூர் பரமத்தி (101) ஆகிய நகரங்களிலும் வெயிலின் தாக்கம் சதம் அடித்துள்ளது

 சதமடித்த வெயில்

சதமடித்த வெயில்

வேலூருக்கு அடுத்து தஞ்சை மாவட்டத்தில் வெப்பத்தின் அளவு 104 டிகிரி பாரன்ஹீட்டாக. அதேபோல திருத்தணியிலும் வெயில் 104 டிகிரி பாரன்ஹீட்டாக பதிவு ஆகியுள்ளது. அதைத் தொடர்ந்து மதுரை விமான நிலையத்தில் 103.1 டிகிரி பாரன்ஹீட் மற்றும் மதுரை நகர்ப் பகுதியில் 101.3 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. அதேபோல ஈரோடு (101) , கரூர் பரமத்தி (101) ஆகிய நகரங்களிலும் வெயிலின் தாக்கம் சதம் அடித்துள்ளது

 10 நகரங்கள்

10 நகரங்கள்

இந்த மாவட்டங்களைத் தவிரத் திருச்சி, திருத்தணி, தொண்டி, தூத்துக்குடி நகரங்களிலும் வெப்பம் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தலைநகர் சென்னையைப் பொருத்தவரை அதிகபட்சமாக மீனம்பாக்கத்தில் 99.68 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் நுங்கம்பாக்கத்தில் 97.6 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாகி உள்ளது. மாநிலத்தில் மொத்தம் 11 இடங்களில் நகரங்களில் இன்று வெப்ப நிலை 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டியது. கத்தரி வெயில் காரணமாக வரும் நாட்களிலும் வெப்பத்தின் தாக்கம் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

English summary
11 districts records more heat TN Weather alert: (தமிழ்நாட்டில் இன்று அதிகபட்சமாக வேலூரில் 105 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவாகி இருக்கிறது) Vellore 105 degree farenheit temperature:
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X