ஒரே மாதத்தில் 12 ஆயிரம் பேர்.. அடுத்தடுத்து காவு வாங்கிய கொரோனா.. கலக்கத்தில் தமிழ்நாடு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த ஒரு மாதத்தில் தமிழகத்தில் சுமார் 12 ஆயிரம் பேர் கொரோனா தொற்றால் உயிழந்துள்ளனர். இந்த ஒரு மாத காலத்தில் தமிழகத்திலேயே அதிகபட்சமாக சென்னையில் தான் 2307 பேர் இறந்துள்ளனர். கோவை, செங்கல்பட்டு, சேலம், காஞ்சிபுரம், வேலூர், கன்னியாகுமரி உள்பட பல்வேறு மாவட்டங்களில் உயிரிழப்பு டபுள் ஆகி உள்ளது.

கடந்த மே 9ம் தேதி 15648 ஆக இருந்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை, ஜூன் 7ம் தேதி நிலவரப்படி 27356 ஆக உயர்ந்துள்ளது. அதாவது கடந்த 30 நாட்களில் மட்டும் 11708 பேர் இறந்துள்ளனர். மே 8ம் தேதி அன்று உயிரிழப்பையும் சேர்த்து கணக்கிட்டு பார்த்தால் 12 ஆயிரத்தை நெருங்குகிறது.

சென்னையில் கடந்த மே 9ம் தேதி 5209 ஆக இருந்த கொரோனா பலி எண்ணிக்கை, ஜூன் 7ம் தேதியான நேற்றைய நிலவரப்படி 7516 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 30 நாளில் 2307 பேர் சென்னையில் மட்டும் உயிரிழந்துள்ளனர். சென்னைக்கு அடுத்தபடியாக செங்கல்பட்டு மாவட்டத்தில் உயிரிழப்பு அதிகமாக உள்ளது.

உயிரிழப்பு எண்ணிக்கை

உயிரிழப்பு எண்ணிக்கை

செங்கல்பட்டு மாவட்டத்தில் கடந்த மே9ம் தேதி 1052 ஆக இருந்த உயிரிழப்பு எண்ணிக்கை, ஜுன் 7ம் தேதியான நேற்று 2103 ஆக உயர்ந்துள்ளது. அதாவது 30 நாளில் மட்டும் 1051 பேர் பலியாகி உள்ளனர். செங்கல்பட்டுக்கு அடுத்தபடியாக கோவையில் 759 (மே 9ல்) ஆக இருந்த எண்ணிக்கை நேற்றைய நிலவரப்படி 1532 ஆக உயர்ந்துள்ளது.

சேலம்

சேலம்

இதேபோல் திருவள்ளூரில் 896 ஆக இருந்த கொரோனா உயிரிழப்பு எண்ணிக்கை 1518 ஆக உயர்ந்துள்ளது. சேலத்தில் 598ல் இருந்து 1130 ஆக உயர்ந்துள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் 631ல் இருந்து 1060 ஆகவும் உயர்ந்துள்ளது. மதுரையில் 593 ஆக இருந்த எண்ணிக்கை 981 ஆக உயர்ந்துள்ளது.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி

கடந்த மே 9ம் தேதி வேலூரில் 437 ஆக இருந்த கொரோனா பலி எண்ணிக்கை 845 ஆக உயர்ந்துள்ளது. இதேபோல் கன்னியாகுமரியில் 358 ஆக இருந்த எண்ணிக்கை 835 ஆக உயர்ந்துள்ளது. திருச்சியில் 268 ஆக இருந்த எண்ணிக்கை 686 என்ற அளவிற்கு அதிகரித்துள்ளது. தஞ்சையில் 339 ஆக இருந்த எண்ணிக்கை 570 என்கிற அளவில் உயர்ந்துள்ளது.

 12 ஆயிரம் பேர்

12 ஆயிரம் பேர்

மேலே சொன்ன மாவட்டங்கள் எல்லாமே பெருநகரங்களை உள்ளடக்கிய மாவட்டங்கள் ஆகும். கடந்த 30 நாட்களில் சுமார் 12 ஆயிரம் பேர் இறந்தள்ளார்கள் என்றால் அதில் 7 ஆயிரம் பேர் மேலே சொன்னை, சென்னை, கோவை, செங்கல்பட்டு, திருச்சி, வேலூர், கன்னியாகுமரி, தஞ்சை, திருச்சி, காஞ்சிபுரம் உள்ளிட்ட 9 மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆவர். மற்ற மாவட்டங்களிலும் உயிரிழப்பு அதிகமாக உள்ளது. கடந்த மே9ம் தேதியில் இருந்து தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் இருக்கிறது. 30 நாள் ஊரடங்கில் தொற்று குறைந்துள்ளது. ஆனால் உயிரிப்பு அந்த அளவிற்கு குறையவில்லை என்பது அதிர்ச்சியான உண்மையாகும்.

ஆரம்பத்தில் சிகிச்சை

ஆரம்பத்தில் சிகிச்சை

உயிரிழப்பு குறைய, கொரோனா பாதித்தவர்கள் ஆரம்ப நிலையிலேயே சிகிசைக்கு செல்வது தான் தீர்வு என்கிறார்கள் மருத்துவர்கள். அதாவது நோய் தொற்று அறிகுறி தெரிந்த உடனேயே பரிசோதனைகள் செய்து சிகிச்சையை ஆரம்பிப்பது உயிரிழப்பை குறைக்கும் என்கிறார்கள் மருத்துவர்கள். '

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+