சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

14 வகை மளிகை பொருட்கள்.. ரூ.2000 பணம்.. ரெடியா இருக்கு.. தமிழக ரேஷன் கடைகளில் இன்று முதல் வினியோகம்

Google Oneindia Tamil News

சென்னை: கொரோனா நிவாரணமாக அறிவிக்கப்பட்ட 14 மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு மற்றும் இரண்டாவது தவணையாக 2000 ரூபாய் ஆகியவை நியாய விலைக் கடைகள் மூலம் இன்று முதல் வழங்கப்படுகின்றன.

நிவாரணத்தை வழங்குவதற்காக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தேதி குறிப்பிட்டு ஏற்கனவே டோக்கன் வழங்கப்பட்டுள்ளது.

மக்கள் அவரவருக்கு அளிக்கப்பட்டிருக்கும் தேதியில் நிவாரண பொருட்கள் மற்றும் 2 ஆயிரம் ரூபாயை பெற்றுக் கொள்ளலாம்.

தமிழ்நாடு.. ரேஷன் கடைகளில் 14 வகை மளிகை பொருட்கள்.. ரூ.2000 பணம்.. டோக்கன் சப்ளை ஆரம்பம் தமிழ்நாடு.. ரேஷன் கடைகளில் 14 வகை மளிகை பொருட்கள்.. ரூ.2000 பணம்.. டோக்கன் சப்ளை ஆரம்பம்

இம்மாதம் இறுதி

இம்மாதம் இறுதி

இந்த பொருட்கள் இம்மாதம் இறுதி வரை வழங்கப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நிவாரண பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை மாவட்ட ஆட்சியர்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன.

வெளிச் சந்தை

வெளிச் சந்தை

ரேஷன் கடைகளில் வழங்கப்படும் மளிகை பொருட்களை வெளிச் சந்தையில் விற்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு சார்பில் எச்சரிக்கப்பட்டுள்ளது.

4000 ரூபாய்

4000 ரூபாய்

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நான்காயிரம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவித்திருந்தார். இதன் அடிப்படையில் முதல் தவணையாக 2000 ரூபாயை கடந்த மாதம் வழங்கப்பட்டது. 14 நிவாரண பொருட்கள் அடங்கிய மளிகை பொருட்களை ரேஷன் கடைகளின் வழியாக வழங்கவும் ஸ்டாலின் முடிவெடுத்து அதையும் செயல்படுத்தி வருகிறார்.

பேக்கிங் தாமதம்

பேக்கிங் தாமதம்

2ம் தவணையாக ரூ.2 ஆயிரம் மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பு கடந்த 3ம் தேதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் பொருட்கள் பேக்கிங் செய்வதில் காலதாமதமானதால் 15ம் தேதியான இன்று முதல் ரேஷன் கடைகள் மூலம் 14 வகை மளிகை பொருட்கள் மற்றும் ரூ.2 ஆயிரம் வழங்கப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

English summary
14 ration items in Tamilnadu, and Rs.2000 will be distributed to the people from today for ration card holders.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X