அதிமுகவுடன் - திமுக கூட்டணியா? மறுப்பு தெரிவிக்காத முக ஸ்டாலின்.. பெரிய ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ''அதிமுகவுடன் கூட்டணி அமைக்கிறதா திமுக?'' என்ற கேள்விக்கு திமுக தலைவர் முக ஸ்டாலின் மறுப்பு எதுவும் தெரிவிக்கவில்லை. இதனால் தமிழகத்தில் திமுக - அதிமுக கூட்டணி ஆட்சி அமைய உள்ளதா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் ஒரு கட்சி தனித்து ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 118 எம்எல்ஏக்கள் வேண்டும். ஆனால் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் மொத்தம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது. மெஜாரிட்டி கிடைக்கவில்லை.

big-twist-mk-stalin-no-denial-when-asked-about-dmk-forming-an-alliance-with-the-aiadmk

இதனால் விஜய் ஆட்சியமைக்க உரிமை கோரினாலும் கூட ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் அழைப்பு விடுக்கவில்லை. மெஜாரிட்டியை கொண்டு வாருங்கள் என்று கூறியுள்ளார். தற்போதைய சூழலில் விஜய் மெஜாரிட்டிக்கு தேவையான எம்எல்ஏக்கள் இன்றி தவித்து வருகிறார்.

மெஜாரிட்டி இல்லாத தவெக

திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சி தவெகவிற்கு ஆதரவு வழங்கி உள்ளது. இந்த கட்சிக்கு 5 எம்எல்ஏக்கள் உள்ளன. இதனால் தவெக எம்எல்ஏ பலம் அதிகரித்துள்ளது. இருப்பினும் மெஜாரிட்டிக்கு இன்னும் 5 எம்எல்ஏக்கள் தேவையாக உள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விசிகவிடம் உள்ள 6 எம்எல்ஏக்களிடம் ஆதரவு கோரப்பட்டுள்ளது. அவர்கள் இன்னும் ஆதரவு கொடுக்கவில்லை. தங்களின் நிலைப்பாட்டை நாளை அறிவிப்பதாக கூறியுள்ளனர்.

மறுக்காத ஸ்டாலின்

இ்ந்நிலையில் தான் இன்று சென்னையில்திமுக தலைவர் முக ஸ்டாலின் தலைமையில் புதிய எம்எல்ஏக்கள், மூத்த தலைவர்களின் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தை முடித்துவிட்டு முக ஸ்டாலின் வெளியே வந்தார். அப்போது அவரிடம், ''திமுக - அதிமுக கூட்டணி அமைக்கிறதா?'' என்ற கேள்வி முன்வைக்கப்பட்டது.

இந்த கேள்வியை கேட்டு கொண்ட ஸ்டாலின் பதில் எதுவும் சொல்லவில்லை. அதோடு காரின் கண்ணாடியை தூக்கிவிட்டு அவர் புறப்பட்டார். இதன்மூலம் அவர் திமுக - அதிமுக கூட்டணி என்பதை மறுக்கவில்லை. இது தற்போது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை கூட்டி உள்ளது.

திமுக - அதிமுக கூட்டணி முயற்சி

முன்னதாக தவெக மெஜாரிட்டியை நிரூபிக்க தவறினால் திமுக - அதிமுக இணைந்து கூட்டணி ஆட்சிக்கு திட்டமிடுவதாக தகவல்கள் வெளியாகின. அதுமட்டுமின்றி திமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் முக ஸ்டாலின் பேசும்போது வரும் 10ம் தேதி வரை சென்னையிலேயே இருக்கும்படி உத்தரவிட்டு இருந்தார். அதுமட்டுமின்றி கட்சியின் நலனுக்காக சில முடிவு எடுக்க உள்ளதாகவும், அதற்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்று கூறினார்.

கூட்டணி சாத்தியம் அதிகம்

முக ஸ்டாலினின் இத்தகைய செயல்பாடுகள் என்பது தவெக பெரும்பான்மையை நிரூபிக்காவிட்டால் அதிமுக - திமுக இணைந்து கூட்டணி அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளை அதிகரித்துள்ளது. இருகட்சிகளின் இந்த செயல்பாட்டால் தவெக கதிகலங்கிப்போய் உள்ளதோடு தமிழக அரசியலில் அடுத்த என்ன நடக்கப்போகிறது? யார் ஆட்சியை பிடிக்கப்போகிறார்கள்? அடுத்த முதல்வர் யார்? என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி அரசியல் அனலை இன்னும் சூடாக்கி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+