141 வீடுகளுக்கு சோலார் மின்சாரம்! மத்திய அரசு மானியம், நிறுவனங்களின் நிதியுதவி தரும் சூப்பர் திட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: வீட்டில் மின்சாரத்தை பயன்படுத்தினால் மாதந்தோறும் பில் கட்ட வேண்டும். ஆனால் ஒரு கிராமத்தில் வசிக்கும் மக்கள் இனிமேல் மின்சாரக் கட்டணம் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. அங்குள்ள அனைத்து வீடுகளிலும் சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அந்த கிராமம் எது தெரியுமா?

பிரதமரின் சூர்ய கர் இலவச மின்சாரத் திட்டத்தின் நோக்கம், வீடுகளின் மாடிகளில் சோலார் பேனல்களை அமைத்து சூரிய ஒளி மூலம் மின்சாரம் தயாரிக்க மக்களை ஊக்குவிப்பதுதான்.

PM Surya Ghar Yojana Rooftop Solar Panels Free Electricity

இதற்காக தகுதியுள்ள வீடுகளுக்கு மத்திய அரசு மானியம் வழங்குகிறது. இதன் மூலம் வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தை அவர்களே தயாரித்து பயன்படுத்திக் கொள்ளலாம். தேவைக்கு அதிகமாக தயாராகும் மின்சாரத்தை மின் கட்டமைப்புக்கு அனுப்பும் வசதியும் உள்ளது. இதனால் மின்சாரக் கட்டணச் செலவைக் குறைக்க முடியும்.

சத்தீஸ்கர் சாதனை

இந்த திட்டத்தின் பயனை முழுமையாகப் பயன்படுத்தி ஒரு கிராமமே சோலார் மின்சார வசதியைப் பெற்றுள்ளது. ஆம், சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்டத்தில் உள்ள கைரா கிராமத்தில் மொத்தம் 141 வீடுகள் உள்ளன. இந்த அனைத்து வீடுகளின் கூரைகளிலும் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதன் மூலம் பிரதமரின் சூர்ய கர் திட்டத்தின் கீழ் அனைத்து வீடுகளுக்கும் சோலார் வசதி கிடைத்த முதல் கிராமம் என்ற அடையாளத்தை கைரா பெற்றுள்ளது.

இந்த கிராமத்தில் ஒவ்வொரு வீட்டிலும் தலா 2 கிலோவாட் திறன் கொண்ட சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் 141 வீடுகளிலும் சேர்த்து மொத்தம் 282 கிலோவாட் மின்சாரம் தயாரிக்கும் திறன் கிடைத்துள்ளது.

இந்த திட்டத்தின் சிறப்பு என்னவென்றால், சோலார் பேனல்களை அமைப்பதற்கு கிராம மக்கள் தங்கள் கையில் இருந்து பணம் செலுத்தவில்லை. மத்திய, மாநில அரசுகளின் மானிய உதவியுடன் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள செலவுக்கு நிறுவனங்களின் சமூகப் பொறுப்புணர்வு நிதி (CSR) பயன்படுத்தப்பட்டுள்ளது.

கூடுதல் மின்சாரம்

வீடுகளில் தயாரிக்கப்படும் மின்சாரத்தை குடும்பத்தினர் தங்களுடைய தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம். அதற்கு பிறகும் மின்சாரம் மிச்சமிருந்தால், அதை மின் வாரியத்துக்கு அனுப்பும் வசதியும் உள்ளது. இதன் மூலம் மின்சாரம் வீணாகாமல் பயன்படுத்தப்படுவதுடன், கிராம மக்களின் மின்சாரச் செலவையும் குறைக்க முடியும்.

மற்ற கிராமங்களுக்கும் முன்னுதாரணம்

அரசின் மானிய உதவி மற்றும் நிறுவனங்களின் நிதியுதவியை சரியாக பயன்படுத்தினால், ஒரு கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளுக்கும் சோலார் மின்சார வசதியை ஏற்படுத்த முடியும் என்பதை கைரா கிராமம் காட்டியுள்ளது. இதன் மூலம் வீடுகளின் மின்சாரக் கட்டணச் செலவையும் குறைக்க முடியும்.

பிரதமரின் சூர்ய கர் இலவச மின்சாரத் திட்டம்

பிரதமரின் சூர்ய கர் இலவச மின்சாரத் திட்டத்தின் கீழ் தகுதியுள்ள வீடுகளுக்கு மேற்கூரை சோலார் பேனல்கள் அமைக்க மானியம் பெற முடியும். இந்த திட்டத்தில் பொதுவாக 1 கிலோவாட் சோலார் அமைப்புக்கு ரூ.30,000, 2 கிலோவாட்டுக்கு ரூ.60,000, 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேல் அமைப்புகளுக்கு அதிகபட்சமாக ரூ.78,000 வரை மத்திய அரசு மானியம் வழங்குகிறது.

வீட்டில் சோலார் பேனல் அமைக்க விரும்புபவர்கள் பிரதமரின் சூர்ய கர் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் பதிவு செய்து விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அங்கீகரிக்கப்பட்ட சோலார் நிறுவனங்கள் மூலமாகவே பேனல்களை பொருத்த வேண்டும்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+