Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

3 முறை சறுக்கிவிட்டது.. இனி நடக்க கூடாது.. எடப்பாடி போட்ட 15 + 15 + 12 கணக்கு.. நோட்டமிடும் திமுக

எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் முக்கிய தலைவரான பின், அவர் முதல்வராக இருந்த போதும், அதன்பின்பும் வரிசையாக மூன்று முக்கிய தேர்தல்களில் அதிமுக படுதோல்வி அடைந்தது.

Subscribe to Oneindia Tamil

ஈரோடு: ஈரோடு கிழக்கில் எப்படியாவது வென்றுவிட வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறாராம். கட்சியை தனக்கு கீழ் கொண்டு வருவதற்கு இதைவிட வேறு வழியே இல்லை என்று எடப்பாடி தரப்பு தீவிரமாக நம்புகிறதாம்.

ஈரோடு கிழக்கு சட்டசபை தேர்தலில் அதிமுக சார்பாக கே. எஸ் தென்னரசு போட்டியிடுகிறார். ஓ பன்னீர்செல்வம் தரப்பின் வேட்பாளர் செந்தில் வேட்புமனுவை வாபஸ் பெறுவதாக அறிவித்துவிட்டார். அவருக்கும் சின்னமும் கிடைக்கவில்லை.

இதனால் 10 பேரின் பரிந்துரை இல்லாமல் வேட்புமனு தாக்கல் செய்த செந்திலின் வேட்புமனு தானாக நிராகரிக்கப்பட்டும் விட்டது. இதனால் அதிமுகவின் அதிகாரபூர்வ வேட்பாளராக இரட்டை இலை சின்னத்தின் கீழ் ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் முன்னாள் எம்எல்ஏ கே. எஸ் தென்னரசு போட்டியிடுகிறார்.

எடப்பாடி உறுதி

எடப்பாடி உறுதி

கிட்டத்தட்ட பாஜகவிடம் கறார் காட்டி, தைரியமாக எடப்பாடி பழனிசாமி இந்த தேர்தலில் களமிறங்கி உள்ளார். இடையில் சின்னம் போனால் கூட போகட்டும் என்ற அளவிற்கு அவர் துணிச்சலாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தேர்தல் மூலம் தனது தலைமை பண்பை நிரூபிக்க எடப்பாடி பழனிசாமி திட்டமிட்டு இருக்கிறாராம். இந்த தேர்தலில் மட்டும் வென்றுவிட்டால் அதிமுகவை கைப்பற்றிவிடலாம். அதிமுகவில் உட்கட்சி மோதலே இருக்காது. நம்முடைய கைக்கு கட்சி மொத்தமாக வந்துவிடும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியாக நம்புகிறாராம்.

 எடப்பாடி நம்பிக்கை

எடப்பாடி நம்பிக்கை

எடப்பாடி பழனிசாமி அதிமுகவில் முக்கிய தலைவரான பின், அவர் முதல்வராக இருந்த போதும், அதன்பின்பும் வரிசையாக மூன்று முக்கிய தேர்தல்களில் அதிமுக படுதோல்வி அடைந்தது. லோக்சபா தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. அதன்பின் சட்டசபை தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுக படுதோல்வி அடைந்தது. இப்படி வரிசையாக எடப்பாடி தோல்விகளை சந்தித்து வருகிறார். 3 முறை சறுக்கிவிட்டது.. இந்த முறை சறுக்க கூடாது என்பதில் எடப்பாடி பழனிசாமி தீர்க்கமாக இருப்பதாக கூறப்படுகிறது.

மீட்டிங்

மீட்டிங்

இந்த நிலையில்தான் நேற்று இரவோடு இரவாக எடப்பாடி பழனிசாமி ஈரோட்டில் நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை செய்தார். இந்த ஆலோசனையை முடித்துவிட்டு ரோட்டு கடை ஒன்றில் டீ குடித்துவிட்டு எடப்பாடி பழனிசாமி சேலத்திற்கு புறப்பட்டு சென்றார். இந்த ஆலோசனையில் ஈரோட்டில் எப்படி வெல்வது என்பது தொடர்பாக முக்கியமான சில விஷயங்களை எடப்பாடி பேசி இருக்கிறாராம். அதன்படி ஈரோடு கிழக்கில் 17 சதவிகிதம்தான் அங்கே கவுண்டர்கள் இருக்கிறார்கள். 36 சதவிகிதம் செங்குந்த முதலியார்கள் இருக்கிறார்கள். 17 சதவிகிதம் மைனாரிட்டிகள் இருக்கிறார்கள். 6 சதவிகிதம் அருந்ததியர்கள் இருக்கிறார்கள். இதில் கவுண்டர்கள் வாக்குகளை விட மற்றவர்களை சேர்த்தால் அதிக வாக்குகள் வருகிறது. முக்கியமாக செங்குந்த முதலியார்கள்தான் இங்கு தீர்மானிக்கும் சக்தியாக இருக்கிறார்கள்.

எடப்பாடி

எடப்பாடி

இதை குறிப்பிட்டு பேசிய எடப்பாடி பழனிசாமி, ஈரோடு கிழக்கில் கவுண்டர்கள் மட்டும் முடிவை தீர்மானிக்கும் சக்தி அல்ல. செங்குந்த முதலியார்கள் இருக்கிறார்கள். அவர்களை நாம் எப்படியாவது நம் பக்கம் கொண்டு வர வேண்டும். செங்குந்த முதலியர்களில் 15 சதவிகிதம் பேர் நமக்கு கண்டிப்பாக வாக்களிக்க வேண்டும். அதேபோல் கவுண்டர்களின் 15 சதவிகிதம் பேரின் வாக்குகளை கைப்பற்ற வேண்டும். மைனாரிட்டிகள், அருந்ததியினர்கள் வாக்குகள் 12 சதவிகிதம் வந்தால் நாம் தேர்தல் நல்ல டப் கொடுக்கலாம். வெற்றிபெற கூட வாய்ப்பு இருக்கிறது.

என்ன சொன்னார்?

என்ன சொன்னார்?

இந்த இடைத்தேர்தலில் பெரும்பாலும் மைனாரிட்டிகள் திமுகவிற்குத்தான் வாக்களிப்பார்கள் என்ற எண்ணம் உள்ளது. ஆனால் அவர்கள் ஆட்சியின் மீது அதிருப்தியில் இருக்கிறார்கள். அதிமுக பாஜகவோடு நெருக்கமாக இல்லாமல் விலகி உள்ளது. இதனால் மைனாரிட்டிகள் இனியும் நம் மீது கோபத்தில் இருக்க மாட்டார்கள். தாழ்த்தப்பட்ட மக்கள் விசிக கூட்டணியால் திமுக பக்கம் போனாலும், அவர்களுக்கு எதிரான அநீதிகளை பேசினால், நாமும் அவர்களின் வாக்குகளை கவர முடியும். அதற்கான பணிகளை செய்தாலே போதும் 42- 45 சதவிகித வாக்குகளை பெற முடியும். ஈரோடு கிழக்கில் எப்போதும் நெக் டூ நெக் முடிவுதான் வந்துள்ளது. அதனால் இவர்களின் வாக்குகளை இழுத்தாள் கண்டிப்பாக வெற்றி பெற முடியும் என்று எடப்பாடி நேற்று நடந்த கூட்டத்தில் பேசி இருக்கிறாராம்.

உறுதி

உறுதி

இனி மீதம் உள்ள நாட்களில் களத்தில் இறங்கி பணிகளை செய்ய எடப்பாடி ரெடியாகி உள்ளாராம். நேரடியாக இவர் வரும் நாட்களில் பிரச்சாரம் செய்ய இருக்கிறார். ஏற்கனவே 111 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவை நேற்று எடப்பாடி பழனிசாமி தரப்பு நியமனம் செய்தது. செங்குட்டுவன் தலைமையில் மாஜி அமைச்சர்கள் படையே அங்கே களமிறக்கப்பட்டு உள்ளது. தங்கமணி, வேலுமணி, தமிழ் மகன் உசேன், நத்தம் விஸ்வநாதன், கே.பி.அன்பழகன், காமராஜ், சி.வி.சண்முகம், பொன்னையன், செம்மலை, சின்னசாமி, சி.விஜயபாஸ்கர், ஓ.எஸ்.மணியன், கடம்பூர் ராஜூ, உதயகுமார், தளவாய் சுந்தரம், வளர்மதி, தம்பிதுரை, செல்லூர் ராஜூ, தனபால், ராஜேந்திர பாலாஜி, ஜெயக்குமார், கே.பி.முனுசாமி, டுமலை ராதாகிருஷ்ணன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, சேவூர் ராமச்சந்திரன் திண்டுக்கல் சீனிவாசன், பொள்ளாச்சி ஜெயராமன், என்று மொத்தமாக மாஜின் அமைச்சர்களின் படை இங்கே மொத்தமாக களமிறக்கப்பட்டு உள்ளது. இவர்கள் தங்கள் வேலைகளை துரிதப்படுத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி தரப்பு உத்தரவிட்டு இருக்கிறதாம்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+