கிளாம்பாக்கத்தில் பஸ்ஸுக்காக காத்திருந்த 16 வயது சிறுமி கடத்தல்! ஆட்டோவில் இருந்த மூவர் யார்?
சென்னை: சென்னை கிளாம்பாக்கத்தில் பேருந்துக்காக காத்திருந்த 16 வயது சிறுமியை ஆட்டோவில் கடத்த முயன்றவர்களை போலீஸார் துரத்திச் சென்ற போது சிறுமியை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இறக்கிவிட்டுவிட்டு அந்த மர்ம நபர்கள் தப்பியோடிவிட்டனர். அவர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.
மேற்கு வங்கத்தை சேர்ந்தவர் 16 வயது சிறுமி. இவர் சேலத்தில் இருந்து சென்னை வந்ததாக தெரிகிறது. இரவு 11 மணிக்கு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் எதிரே மாதவரம் பேருந்துக்காக காத்துக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது.

அப்போது அங்கு வந்த ஆட்டோ டிரைவர், அந்த சிறுமியை வலுகட்டாயமாக கடத்தினாராம். மேலும் சிறிது தூரத்தில் அதே ஆட்டோவில் வேறு இருவரும் ஏறி, சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது.
இதனால் சிறுமி சப்தம் போட்டதை அடுத்து சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து போலீஸார் அந்த ஆட்டோவை பின்தொடர்ந்தனர். அதற்குள் சிறுமியை கோயம்பேடு பகுதியில் இறக்கிவிட்டுவிட்டு ஆட்டோவில் வந்த மூவரும் தப்பியோடிவிட்டனர்.
சிறுமியை மீட்ட காவல் துறையினர் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். தப்பியோடிய மூவரையும் சிசிடிவி கேமரா உதவியுடன் தேடி வருகிறார்கள்.
-
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
ஸ்டாலினையே தோற்கடித்த கொளத்தூர்.. சேகர்பாபு தான் காரணம்? குமுறிய உபிகள்.. கள ஆய்வில் கசிந்த தகவல்! -
ட்விஸ்ட்.. தமிழக பாஜக தலைவர் மாற்றம்? நயினாருக்கு பதில் இவரா? ரேசில் 4 பேர்.. டிக் அடிக்கும் டெல்லி! -
எங்க காணோம்..கடைசி நேரத்தில் காலைவாரிய கயல்விழி அழகிரி! தவெகவில் இன்னும் இணையாதது ஏன்? மெகா டிமாண்ட் -
அண்ணாமலை புரிதல் கொண்டவர்.. அரசியலுக்கு வருவதை வரவேற்கிறேன்.. பாராட்டி தள்ளிய ராகவா லாரன்ஸ் -
ஒரு இடம் விடக்கூடாது.. சென்னையில் தெரு தெருவாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. என்ன காரணம்? -
உலகத்திற்கே 'ஞாயிறு' மிக முக்கியமான நாள்.. கையெழுத்திடும் ஈரான்.. டிரம்ப் மிகப்பெரிய அறிவிப்பு -
பாரதிராஜா இறப்பின் போது தனியாக இருந்த காரணம்! கங்கை அமரன் கோபப்பட்ட பின்னணி.. தம்பி விளக்கம் -
அம்மா தான் முக்கியம்! செய்தியாளர் சந்திப்பை பாதியிலேயே நிறுத்தி போன் பேசிய நிதிஷ் ரெட்டி -
தம்பி வா.. தலைமையேற்க வா? அதிமுகவில் எடப்பாடி மிதுன்! முனுசாமியை விட்டு பல்ஸ் பார்த்த பழனிசாமி!












Click it and Unblock the Notifications