இடைத்தேர்தலை சந்திக்க தயார்.. நாங்கள் ஜெயிப்போம்.. தினகரன் பரபர பேட்டி!
சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது, நாங்கள் இடைத்தேர்தலை சந்திக்க தயார் என்று டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார்.
Recommended Video

சென்னை: சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு எங்களுக்கு பின்னடைவை ஏற்படுத்தாது, நாங்கள் இடைத்தேர்தலை சந்திக்க தயார் என்று டிடிவி தினகரன் பேட்டியளித்துள்ளார்.
18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செல்லும் என்று சென்னை ஹைகோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் தினகரன் தரப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்தி இருக்கிறது.
இந்த நிலையில் டிடிவி தினகரன் சென்னையில் பேட்டியளித்துள்ளார். அதில் தீர்ப்பு குறித்து தாங்கள் அதிர்ச்சி அடையவில்லை என்று தினகரன் கூறியுள்ளார். தினகரன் பேட்டி விவரம்:

எதிர்பாராத தீர்ப்பு
நாங்கள் எதிர்பார்த்த தீர்ப்பு வரவில்லை. ஆனால் இது எங்களுக்கு பின்னடைவு இல்லை. அரசியலில் பின்னடைவு என்று எதுவும் இல்லை. 18 பேருடன் கலந்து பேசி செயல்படுவோம்.

அடுத்து என்ன
அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து 18 பேருடனும் கலந்து பேசுவேன். எங்களுக்குள் பிளவு இல்லை, 18 பேரும் என்ன நினைக்கிறார்களோ அதை செய்வோம். இது எங்களை மேலும் ஒற்றுமைப்படுத்தும்.

18 பேரின் விருப்பத்தை ஏற்று
நாங்கள் அடுத்து செய்ய வேண்டியதை செய்வோம். எனது ஆதரவாளர்கள் என்ன சொல்கிறார்களோ அதை செய்வோம். அவர்கள் என்ன முடிவு செய்கிறார்களோ அதை செய்வேன். நாங்கள் இடைத்தேர்தலில் நிற்போம். 18 தொகுதி மட்டுமல்லாமல் மேலும் காலியாக 2 தொகுதியிலும் நாங்கள் நிற்போம். தேர்தலில் நிற்க அமமுக தயாராகி இருக்கிறது.

துரோகி யார்
துரோகி யார் என்று மக்களுக்குத் தெரியும். தாங்கள் செய்வது பச்சைத் துரோகம் என்பதை ஆளுங்கட்சி உணர வேண்டும். நீதிமன்றத் தீர்ப்பை வைத்து துரோகி யார் என்று முடிவு செய்ய முடியாது. சபாநாயகர் உத்தரவு செல்லும் என்றுதான் ஹைகோர்ட் தீர்ப்பளித்துள்ளது. இடைத் தேர்தலை தமிழக மக்களும், அமமுகவும் எதிர்பார்த்துக் காத்துள்ளோம். இடைத் தேர்தலில் எங்களை நாங்கள் நிரூபிப்போம் என்று அவர் கூறியுள்ளார்.
-
பெரிய திமிங்கலம்! அதிமுகவில் அடுத்த விக்கெட்? திருச்சி வரும் முதல்வர் விஜய்யை சந்திக்கும் சிவிஎஸ்? -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்? -
வேரில் வெந்நீர் ஊற்றும் விஜய்.. கொஞ்சம் கொஞ்சமாய் கருகுதே இரட்டை இலை! உஷாராவது எடப்பாடிக்கு நல்லது! -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
வாழை மரமா? ஆல மரமா? அந்தரத்தில் தொங்குதே அதிமுக! எடப்பாடிக்கு இன்னும் ஒரே ஒரு சான்ஸ் இருக்கு! என்ன? -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
“மாவட்ட செயலாளர் தொலைந்து போக வேண்டும்”.. அதிமுகவை விட்டு வெளியேறும் முக்கிய நிர்வாகி விட்ட சாபம்! -
“EPS மாலையிட்டால்தான் என் ஆத்மா சாந்தியடையும்”.. அதிமுக தொண்டனின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய எடப்பாடி -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
நாளை திருச்சி வரும் விஜய்.. நேரில் சந்திக்கிறாரா விஜயபாஸ்கர்? அதிமுகவில் விழப்போகும் அடுத்த விக்கெட் -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications