சென்னையின் நான்கு முக்கிய சாலைகள் அடியோடு மாறப்போகிறது.. தமிழக அரசு முக்கிய முடிவு
சென்னை: சென்னையின் 4 முக்கிய சாலைகளை நவீன நகர்ப்புற போக்குவரத்துக் காரிடார்களாக மாற்றுவதற்கு தமிழக அரசு தயாராகி வருகிறது. சென்னை நகரின் போக்குவரத்தை மேம்படுத்த CUMTA அமைப்பு இரண்டு முக்கியமான திட்டங்களை முன்னெடுத்துள்ளது. இதற்காக விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிக்க நான்கு ஆலோசனை நிறுவனங்கள் ஏலம் கோரியுள்ளன. அதேபோல் 41 மெட்ரோ நிலையங்களைச் சுற்றியுள்ள பயண முறைகளை ஆய்வு செய்ய கும்டா ஒரு தனி ஒப்பந்தத்தை வழங்கியுள்ளது.
சென்னை மாநகரம் மிகப்பெரிய அடர்த்தியுடன் மும்பை போல் வளர்ந்து வருகிறது. எதிர்காலத்தில் போக்குவரத்து கட்டமைப்புகளில் செய்ய வேண்டிய மாற்றம் என்ன. மக்கள் மெட்ரோ ரயில், புறநகர் மின்சா ரயில், பேருந்து, விமானம் என எப்படி செல்வார்கள்.. அவர்களுக்கு தேவையான இணைப்பு வசதிகளை வரும் காலத்தில் எப்படி எல்லாம் கொடுக்க வேண்டும். அதற்கு எந்த சாலைகளை எல்லாம் இன்னும் அகலப்படுத்த வேண்டும். எந்த சாலைகளில் எந்த மாற்றம் கொண்டுவர வேண்டும் என்று தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காகவே கும்டா என்ற ஒரு அமைப்பை (சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையம்) உருவாக்கி வைத்துள்ளது.
இந்த சூழலில் சென்னை ஒருங்கிணைந்த பெருநகரப் போக்குவரத்து ஆணையத்தின் (CUMTA) திட்டத்தின் கீழ் சென்னையில் உள்ள நான்கு முக்கிய சாலைகளை, முன்மாதிரியான நகர்ப்புற போக்குவரத்துத் தடங்களாக ( மேம்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க, நான்கு ஆலோசனை நிறுவனங்கள் ஒப்பந்தப்புள்ளிகளைச் சமர்ப்பித்துள்ளன.

கும்டா ஆவணங்களின்படி, ஒப்பந்தப்புள்ளிகளைச் சமர்ப்பித்துள்ள நிறுவனங்கள்:
1. கேபிடல் என்ஜினிரியரிங் கன்சல்டன்சி சென்னை பிரைவேட் லிமிடெட்
2. ஐடெக் லிமிடெட்
3. டெக்னோஜெம கன்சல்டன்ட்ஸ் பிரைவேட் லிமிடெட்
4. ஸ்வஸ்டிக் பிரைம் கன்சல்டன்ஸ்ட் பிரைவேட் லிமிடெட்
இந்த நான்கு நிறுவனங்களின் ஒப்பந்தப்புள்ளிகளும் கட்டண மதிப்பீடு, முன்தகுதி மற்றும் தொழில்நுட்ப மதிப்பீடு ஆகியவற்றுக்காக ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. தொழில்நுட்ப ஒப்பந்தப்புள்ளிகள் நவம்பர் 5ஆம் தேதி திறக்கப்பட இருக்கிறது.
இந்தத் திட்டம் மேற்கொள்ளப்பட உள்ள நான்கு சாலைகள்:
- தரமணி இணைப்புச் சாலை (Taramani Link Road)
- மார்மலாங் பாலம் - வாலாஜா சாலை (Marmalong Bridge-Wallajah Road)
- வேளச்சேரி - தாம்பரம் சாலை (Velachery-Tambaram Road)
- கிராண்ட் சதர்ன் டிரங்க் சாலை (GST Road)
ரயில் நிலையங்கள், பறக்கும் ரயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்கள், பேருந்து முனையங்கள், பேருந்து நிறுத்தங்கள் ஆகியவற்றை இணைக்கும் முக்கிய போக்குவரத்துத் தடங்களாக இந்தச் சாலைகளை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது
குறிப்பாக, பயணிகள் தங்களது பயணத்தின் கடைசிப் பகுதியை எளிதாகக் கடந்து செல்லும் வகையில் வசதிகளை மேம்படுத்துவதுடன், பல்வேறு போக்குவரத்து முறைகளை ஒருங்கிணைப்பதற்கும் முக்கியத்துவம் அளிக்கப்பட உள்ளது.
இதற்கிடையே, சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களின் பயணிகள் வருகைப் பகுதிகளுக்கான பிக் டேட்டா அடிப்படையிலான பயணத் தொடக்கம் மற்றும் சேருமிட விவர அட்டவணையை தயாரிப்பதற்கான ஆலோசனை ஒப்பந்தத்தை ஸ்ட்ரீட் சர்ஜ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட் ( Street Surge Technologies Private Limited) நிறுவனத்துக்கு கும்டா வழங்கியுள்ளது.
இந்த ஒப்பந்தத்திற்கான குறைந்தபட்சத் தொகையை (L1) குறிப்பிட்ட நிறுவனமாக Street Surge Technologies தேர்வு செய்யப்பட்டுள்ளது. அந்நிறுவனம் ஜிஎஸ்டி வரி நீங்கலாக ரூ.19.75 லட்சத்துக்கு ஒப்பந்தப்புள்ளி அளித்துள்ளது. நவம்பர் 4ஆம் தேதி ஒப்பந்தம் வழங்கப்பட்ட நிலையில், 60 நாட்களுக்குள் பணிகளை முடிக்க வேண்டும் எனக் காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை மெட்ரோ ரயில் முதற்கட்டத் திட்டத்தின் கீழ் தற்போது செயல்பாட்டில் உள்ள 41 மெட்ரோ ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பயணிகளின் போக்குவரத்துத் தேவைகள் குறித்து பிக் டேட்டா அடிப்படையில் ஆய்வு நடத்த கும்டா திட்டமிட்டுள்ளது. இதற்காக, ஸ்மார்ட்போன் செயலிகள் மற்றும் மொபைல் நெட்வொர்க் மூலம் கிடைக்கும் தனிநபர்களை அடையாளம் காண முடியாத வகையில் மாற்றப்பட்ட இருப்பிடத் தரவுகள் சேகரிக்கப்பட உள்ளன. இந்த ஆய்வின் மூலம் மெட்ரோ ரயில் நிலையங்களுக்கான இணைப்புப் பேருந்து சேவைகளை மேம்படுத்துவதுடன், பயணிகளின் கடைசிக் கட்டப் போக்குவரத்தில் உள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து அவற்றைச் சரிசெய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.
மெட்ரோ ரயில் நிலையங்களில் டெண்டர் எடுத்த நிறுவனம் 41 மெட்ரோ நிலையங்களிலும் பயணிகள் எங்கிருந்து வருகிறார்கள், எங்கே செல்கிறார்கள் என்பதை ஆராய்ந்து கும்டா நிறுவனத்திற்கு தகவல் தரப்போகிறது. ஸ்மார்ட்போன் செயலிகள் மற்றும் மொபைல் நெட்வொர்க்குகள் மூலம் கிடைக்கும் தனிநபர்களை அடையாளம் காண முடியாத வகையில் மாற்றப்பட்ட இருப்பிடத் தரவுகளை தரப்போகிறது. ஒவ்வொரு மெட்ரோ நிலையத்துக்கும் பயணிகள் எந்தெந்த பகுதிகளில் இருந்து வருகிறார்கள், எங்கு செல்கிறார்கள் என்ற தகவலை ஆய்வு செய்து அரசுக்கு தரப்போகிறது.
இந்த ஆய்வு எதற்கு என்றால், குறிப்பிட்ட மெட்ரோ நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் எந்த இடங்களில் இருந்து அதிகமானோர் பயணம் செய்கிறார்கள் என்பதை கண்டுபிடிப்பது தான். இந்த ஆய்வு எதற்கு என்றால், மெட்ரோ நிலையங்களுக்குச் செல்ல போதிய பேருந்து வசதி இல்லாத பகுதிகளைக் கண்டறிந்து, புதிய பீடர் பஸ் சேவைகளை கொண்டுவருவதற்கு தான். சிம்பிளாக சொல்வது என்றால், 41 மெட்ரோ ரயில் நிலையங்களை ஆய்வு செய்து, எங்கு எல்லாம் மக்களுக்கு தேவையான மினி பஸ்களை இயக்க வேண்டும் என்பதை கண்டுபிடித்து அரசுக்கு சொல்ல வேண்டும்.




Click it and Unblock the Notifications
