தமிழகத்தில் 19 ஐஏஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்.. 3 மாவட்டங்களுக்கு புதிய கலெக்டர்கள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் 19 ஐஏஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர், தென்காசி, கரூர் ஆகிய மாவட்டங்களின் கலெக்டர்கள் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். தென்காசி மாவட்டத்திற்கு முதல் முறையாக பெண் ஆட்சியர் பணியமர்த்தப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக மோனிகா ராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் ஆட்சியராக பிரசன்னா ராமசாமியை தமிழக அரசு நியமித்துள்ளது. நெல்லை மாநகராட்சி ஆணையராக பிரியா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

நிர்வாக காரணங்களுக்கு தமிழக அரசு அவ்வப்போது ஐ.ஏ.எஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்வது வழக்கம். அந்த வகையில், பல்வேறு துறைகளில் ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

IAS officers transferred in Tamil Nadu new Collectors appointed for 3 districts

திருப்பூர், தென்காசி, கரூர் மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். திருப்பூர் மாவட்ட ஆட்சியராக முத்துக்குமரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியராக பிரசன்னா ராமசாமி நியமிக்கப்பட்டுள்ளார். தென்காசி மாவட்ட ஆட்சியராக மோனிகா ராணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாடு வாழ் தமிழர் மறுவாழ்வு மற்றும் நலத்துறை இயக்குநராக எஸ். வளர்மதி நியமனம் செய்யப்பட்டுள்ளார். சமூக நலத்துறை மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கூடுதல் செயலாளராக எஸ்.பி கார்த்திகா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

திருப்பூர் ஆட்சியராக இருந்த மனிஷ் நரவானே, ஃபைபர் நெட் கார்ப்பரேஷன் நிர்வாக இயக்குநராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். நெல்லை மாநகராட்சி ஆணையராக பிரியா, சிதம்பரம் சார் ஆட்சியராக வெங்கடேஷ்வரன் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

பட்டுவளர்ச்சி துறை இயக்குநராக சதீஷ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். போக்குவரத்து துணை செயலாளராக இந்துமதி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+