மொட்டை மாடியில் "மாறிய" ஜோடிகள்.. பண்ணை வீட்டில் பயங்கர ஷாக்.. மாணவியிடம் சீக்ரெட் விசாரணை
குளச்சல் பங்களாவில் நடந்த மதுவிருந்து குறித்து, சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகிறார்கள்
கன்னியாகுமரி: பண்ணைவீட்டு பங்களாவில் நடந்த பர்ட்டே பார்ட்டி மற்றும் படுக்கை பகிர்வுகள் குறித்த தகவல்கள் கூடுதலாக வெளியாகி உள்ள நிலையில், ஜாயின்ட் சரக்கு பார்ட்டி கல்லூரி மாணவியிடம் 2 மணி நேரம் சிபிசிஐடி ரகசிய விசாரணை நடத்தி உள்ளனர்.
நாகர்கோவிலில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் மெயின் ரோட்டில் உள்ளது சுல்தான் கடை பகுதி.. இங்கு வசித்து வந்த மாணவர் பெயர் விக்ரம் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) 18 வயதுகூட இன்னும் இவருக்கு முடியவில்லை.
குளச்சல் பகுதியை சேர்ந்த மாணவி ரம்யா.. (பெயர் மாற்றப்பட்டுள்ளது).. இவர்கள் 2 பேருமே 6 வருடமாக காதலித்து வந்துள்ளனர்..

பைக் நண்பர்கள்
ஆனால், ரம்யாவின் குணமோ மெல்ல மெல்ல மாறியது.. நிறைய ஆண் நண்பர்களுடன் ஊர் சுற்றி வந்த நிலையில், விக்ரம் இதனால் உடைந்து போயுள்ளார்.. ரம்யாவை கண்டித்தும் அவர் திருந்தவில்லை. இந்த சமயத்தில்தான், ரம்யா தன் பிறந்தநாளுக்கு, நண்பர்களுக்கு பார்ட்டி தருவதாக, விக்ரமுக்கு தகவல் கிடைத்துள்ளது.. அங்கு சென்று பார்த்தால், ஆண் நண்பர்கள், பெண் தோழிகள் என அனைவரும் அரைகுறை ஆடையில், மதுபோதையில் ஆட்டம் போடுவதை கண்டு ஆத்திரம் அடைந்தார் விக்ரம்.. உடனடியாக மரக்கட்டையை எடுத்து, ரம்யாவை தாக்கியதுடன், அந்த கும்பலையும் விரட்டி விட்டு, தப்பிவிட்டார்.

ஆணுறை
இந்த விவகாரம் போலீசுக்கு சென்ற நிலையில், விசாரணை துவங்கியது.. அப்போதுதான், பர்த்டே பார்ட்டி நடந்த சம்பந்தப்பட்ட பங்களாவின் அறைகளிலும், மொட்டை மாடியிலும், கிழித்து வீசப்பட்ட டிரஸ்கள், சிகரெட் துண்டுகள், மது பாட்டில்கள், ஸ்நேக்ஸ், ஆணுறைகள், என சிதறிக்கிடந்துள்ளதை போலீசார் கண்டுபிடித்தனர்.. குளச்சலில் பர்ணட்டிவிளை பகுதியில் உள்ள இந்த பங்களா, ரம்யாவின் பெரியப்பாவுக்கு சொந்தமான பண்ணை வீடு.. அடிக்கடி இரவு நேரங்களில், பங்களாவில், சரக்கு பார்ட்டி நடந்துள்ளது.. ரம்யாவும், ஆண் நண்பர்கள், சில தோழிகள் கஞ்சா அடித்துள்ளனர்.

"ஜாய்ன்ட்"
ரம்யா அந்த ஆண் நண்பர்களுடன் ஜாலியாக இருப்பாராம்.. பிறகு, தன்னுடைய தோழிகளுக்கும் அந்த ஆசையை தூண்டுவாராம்.. பிறகு, அந்த ஆண் நண்பர்களுடன் ஜாலியாக இருக்கும்படியும் தோழிகளிடம் சொல்வாராம்... இப்படி அடிக்கடி அந்த பங்களாவில் நடந்துவந்திருக்கிறது. இதுக்கு பெயர்தான் "ஜாயிண்ட்" (படுக்கை பகிர்வு) என்கிறார்கள். இப்போது இது தொடர்பாக 2 தகவல்கள் வெளிவந்துள்ளன.. இவர்கள் இந்த பங்களாவில் தண்ணி அடித்துவிட்டு, தனக்கு விருப்பமானவர்களுடன் மாறி, மாறி உல்லாசமாக இருப்பார்கள் என்பது தொடர்பான ஒரு ஆடியோவும் வெளியாகி உள்ளதாம்..

பண்ணை வீடு
அந்த பங்களா வீட்டில் என்ன நடக்கிறது என்பதை பாருங்கள் என்பதற்கான வீடியோவும் வெளியாகி உள்ளதாம்.. அந்த வீடியோவில், வீட்டிற்குள் ஆணுறைகள், மது பாட்டில்கள், சிகரெட்டுகள், போதை வஸ்துக்கள் இருப்பது தெரியவந்துள்ளது.. தனித்தனி ரூம்களில் படுக்கைகள் இருந்தன. அதில் ஆண்கள், பெண்களுக்கான ஆடைகளும் கழற்றி போடப்பட்டு கிடந்தன. இந்த வீடியோவும், செல்போன் ஆடியோவும் தற்போது வெளியாகி பெரும் பரபரப்பை உண்டாக்கி வருகிறது.

லீலைகள்
கல்லூரி மாணவிகள், ஆண் நண்பர்களை வரவழைத்து மது விருந்து அளித்து உல்லாசமாக இருந்தனர் என்ற தகவலை கேட்டதும பல பெற்றோரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.. இது தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்த எஸ்பி உத்தரரவிட்ட நிலையில், முதலில், சம்பந்தப்பட்ட கல்லூரிக்கு சென்று விசாரணை நடத்தியுள்ளனர் போலீசார்.. ஆனால், அங்கு யாருமே இது பற்றி வாய் திறக்கவில்லையாம்.. சம்பவத்தன்று நடந்த லீலைகளை வீடியோவாக செல்போனில் பதிவு செய்தவர்கள் யார் என்றும் தெரியவில்லை.. ஆனால், அதில் மாணவிகள் மற்றும் அவர்களின் ஆண் நண்பர்கள் அரை நிர்வாண நிலையில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.. அந்த வீடியோ பதிவு செய்யப்பட்ட செல்போன் எங்கிருக்கிறது என்பது தொடர்பாகவும் விசாரணை நடந்து வருகிறது.

பண்ணை வீடு
விக்ரமை இப்போது தீவிரமாக தேடி வருகிறார்கள்.. அவரை பிடித்து விசாரித்தால்தான் அனைத்து உண்மைகளும் வெளியே வரும் என்றும் போலீசார் நம்புகிறார்கள்.. இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி போலீசாரும் ரகசிய விசாரணை நடத்தி வருகிறார்கள்... பங்களா வீட்டில் தாக்குதலுக்கு உள்ளான மாணவியிடமும், அவரது தந்தையிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரித்துள்ளனர். சுமார் 2 மணி நேரம் வரை விசாரணை நடந்திருக்கிறது.. ஆனால், சோஷியல் மீடியாவில் பரவி வரும் தகவல்கள் எல்லாமே பொய் என்று இருவரும் சொன்னார்களாம்.

அப்பா + மதபோதகர்
கேக் வெட்டி கொண்டாடப்பட்ட பார்ட்டியை, யாரோ இப்படி வேண்டுமென்றே திசை திருப்புகிறார்கள், எந்த தவறும் நடக்கவில்லை என்று சத்தியம் செய்யாத குறையாக போலீசாரிடம் அடித்து சொல்லி உள்ளனர் மாணவியும், அவரது தந்தையும்.. உடனே சில வீடியோ ஆதாரங்களை சிபிசிஐடி போலீஸ் தரப்பில் காட்டியிருக்கிறார்கள்.. அந்த வீடியோவை பார்த்துவிட்டு, அப்பாவும், மகளும் எந்த பதிலுமே அவர் சொல்லவில்லையாம்.. மாணவியின் தந்தை ஒரு மதபோதகர் என்கிறார்கள்.

மதபோதகர்
சமீபகாலமாகவே, குமரி மாவட்டத்தில் எப்படி இந்த அளவுக்கு கலாச்சார சீரழிவு ஏற்பட்டுள்ளது? ஏன் அதிக அளவு பாலியல் குற்ற சம்பவங்களும் இந்த பகுதிகளில் நிறைய நடக்கிறது? என்ற கேள்விகள் பொதுமக்களிடம் எழுந்துள்ளன.. இப்படியான சமூக சீரழிவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது.. இப்படித்தான், நாகர்கோவில் காசி, மாணவிகளையும், குடும்ப பெண்களையும், சீரழித்து நாசம் செய்தார்.. இந்த வழக்கும் சிபிசிஐடி வசம் தான் உள்ளது... இப்போது, ஜாயின்ட் சரக்கு பார்ட்டி விவகாரமும் விஸ்வரூமெடுத்து வருவது, குமரியில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த பெற்றோர்களின் அடிவயிற்றிலும், நெருப்பை அள்ளிக்கொட்டி கொண்டிருக்கிறது...!












Click it and Unblock the Notifications