சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"கைமாறும்" கணக்கு.. கிளம்பி வந்த "2 புள்ளிகள்" யார்.. அசராத எடப்பாடி பழனிசாமி.. நோ சாய்ஸ் போல

எடப்பாடி பழனிசாமி தன் பிடிவாதத்தில் தொடர்ந்து இருப்பது பாஜகவை குழப்புகிறதாம்

Google Oneindia Tamil News

சென்னை: ஒருங்கிணைந்த அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து பிடிவாதம் பிடித்து வரும்நிலையில், மேலிடம் அளவுக்கு அதிகமாகவே குழம்பி போயுள்ளதாம்.. அதேசமயம், எம்பி தேர்தலில் எடப்பாடி பழனிசாமி என்ன தான் செய்ய போகிறார்? என்ற எதிர்பார்ப்பும் எழுந்து வருகிறது.

எப்படித்தான் எடப்பாடி பழனிசாமியை சமாதானம் செய்வது? எப்படித்தான் வழிக்கு கொண்டு வருவது என்பது தெரியாமல் மண்டை காய்ந்து போயுள்ளதாம்.

காரணம், எடப்பாடிக்கு டெல்லி மேலிடம் ஒரு கொக்கியை போட்டால், அதை பிடுங்கி வீசிவிட்டு, இன்னொரு செக்கை எடப்பாடியே வைக்கிறாராம்..

டிசம்பர் 24ஆம் தேதி எம்.ஜி.ஆர். நினைவுநாள் மரியாதை! ஓ.பன்னீர்செல்வத்தை முந்திய எடப்பாடி பழனிசாமி! டிசம்பர் 24ஆம் தேதி எம்.ஜி.ஆர். நினைவுநாள் மரியாதை! ஓ.பன்னீர்செல்வத்தை முந்திய எடப்பாடி பழனிசாமி!

செல்லூரார்

செல்லூரார்

கடந்த வாரத்தில் நடந்த ஜி20 மாநாடு, நேற்றைய தினம் குஜராத் முதல்வர் பதவியேற்பு என 2 விதமான நிகழ்ச்சிகள் நடந்துள்ளதில், 2 விதமான தாக்கங்கள் தமிழக அரசியல் களத்தை அதிர வைத்து வருகின்றன. அதிமுக தலைமையில் தான் கூட்டணி என்பதை ஏற்கனவே எடப்பாடி பழனிசாமி பல வகைகளில் தெளிவுபடுத்தி விட்டார்... "தமிழகத்தில் பாஜக வளர்ந்து வரும் கட்சிதான்.. அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் மட்டுமே, எம்பி தேர்தலில் பாஜக வெற்றி பெறும்" என்று மூத்த தலைவர் செல்லூர் ராஜூவும் சொல்லிவிட்டார்.

 இன்விடேஷன்

இன்விடேஷன்

எங்களுடன் கூட்டணி வரும்போதுதான், பாஜகவுக்கு அங்கீகாரம் கிடைக்கும் என்று மாஜி ஜெயக்குமாரும் தெளிவுபடுத்திவிட்டார்.. நாற்பதும் நாமே என்று கூட்டணி இல்லாத அதிமுகவை, தம்பிதுரையும் சொல்லிவிட்டார்.. தனித்து நின்றாலும் அதிமுக வெற்றி பெறும் என்று செங்கோட்டையனும் சொல்லிவிட்டார்.. போதாக்குறைக்கு நேற்றைய தினம், குஜராத் பதவியேற்பு விழாவுக்கு அழைப்பு வந்தும், எடப்பாடி பழனிசாமி அதனை புறக்கணித்தும் விட்டார்.. இத்தனை முறை தங்கள் நிலைப்பாட்டை எடப்பாடி தரப்பு சொல்லியும், பாஜக அதற்கு சம்மதிக்கவில்லை என்றே தெரிகிறது...

 2 தூதுவர்கள்

2 தூதுவர்கள்

அதனால்தான் 2 நாட்களுக்கு முன்புகூட, பாஜக மேலிடம் இன்னொரு முயற்சியை எடுத்துள்ளது.. 2 முக்கியமான நபர்களை, டெல்லியில் இருந்து அனுப்பி எடப்பாடி பழனிசாமியிடம் சமாதானம் பேசப்பட்டதாம்.. ஒருங்கிணைந்த அதிமுக என்ற பேச்சையும் அவர்கள் எடப்பாடியிடம் எடுத்துள்ளதாக தெரிகிறது.. 2 தூதுவர்கள் நேரில் சந்தித்து வலியுறுத்தியும்கூட, எடப்பாடி கறாராக நோ சொல்லிவிட்டாராம்.. பெருமளவு கட்சியும், நிர்வாகிகளும் தன் பக்கம் உள்ளபோது, தன்னை மட்டுமே கட்சியின் தலைமையாக அங்கீகரிக்க வேண்டும் என்பதையும், ஓபிஎஸ், சசிகலா, தினகரனுக்கு இடமில்லை என்பதையும், தினகரன் இல்லாமல், பாஜகவுடன் கூட்டணி அமைக்க தயாராக என்பதையும், மீண்டும் ஒருமுறை அழுத்தமாக தன் நிலைப்பாட்டை சொல்லிவிட்டாராம் எடப்பாடி.

 சாய்ஸூம் சாய்ஸூம்

சாய்ஸூம் சாய்ஸூம்

அதுமட்டுமல்ல, குஜராத்துக்கு சென்றிருந்தால்கூட, அங்கேயும் ஓபிஎஸ்ஸையும், தன்னையும் ஒருங்கிணைந்து செயல்படும்படி மேலிடம் அழுத்தம் தரும் என்பதால்தான், நிகழ்ச்சிக்கு போகாமல் தவிர்த்ததாகவும் காரணம் சொல்லப்படுகிறது.. ஆக, எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் தொடர்வதுபோலவே, மேலிடத்தின் அழுத்தமும் தொடந்து கொண்டுதான் இருக்கிறது.. இதில் ஓபிஎஸ்ஸுக்கு இப்போது வரை உள்ள நம்பிக்கை என்னவென்றால், பாஜக மேலிடமும், தேர்தல் ஆணையமும் தன்னை கைவிடாது என்று நம்புகிறார்..

 சான்ஸ் சாய்ஸ்

சான்ஸ் சாய்ஸ்

நேற்றைய தினம் குஜராத்தில், ஜேபி நட்டாவிடமும் சில விஷயங்களை ஓபிஎஸ் பேசியதாக தெரிகிறது.. காவித்துண்டை ஓபிஎஸ் கழுத்தில் அணிந்து கொள்ளாவிட்டாலும்கூட, அவர் பாஜகவின் அபிமானி என்பதில் மேலிடத்துக்கு சந்தேகம் இல்லை.. அதேசமயம், தென்மண்டலத்தில் பாஜக காலூன்ற வியூகங்கள் அமைத்து வரும்நிலையில், தன்னை தவிர்த்துவிட வாய்ப்பே இல்லை என்றும் ஓபிஎஸ் பெருத்த நம்பிக்கையுடன் இருக்கிறாராம்.. அதுமட்டுமல்ல, அதிமுக முகாமில் புதிய மாற்றங்களுக்கு, நட்டா - ஓபிஎஸ்ஸின் சந்திப்பு விரைவில் வித்திடும் என்றும் சொல்கிறார்கள்.

 காவித்துண்டு

காவித்துண்டு

கூட்டணி தொடர்பாக, பிடிவாதம் பிடிப்பதும், செக் வைப்பதும், பெரும்பாலான மாநிலங்களில் பாஜகவாகவே இருந்து வரும்நிலையில், எடப்பாடியிடம் மட்டும் அந்த கணக்கு உல்டாவாகி இருப்பது வியப்பை தந்து வருகிறது.. எனினும், பிரிந்தவர்கள் அனைவரும் ஒன்று சேர போகிறார்களா? இந்த கட்சிகள் கூட்டணி வைக்க போகின்றனவா? எடப்பாடி பாஜகவை கழட்டி விடப்போகிறாரா? அல்லது பாஜக, எடப்பாடி பழனிசாமியை கழட்டி விடப்போகிறதா? 6 மாத காலமாகவே நீடித்து வரும் எடப்பாடி பழனிசாமியின் பிடிவாதம் முடிவுக்கு வரப்போகிறதா? அல்லது ஓபிஎஸ்ஸின் "காவித்துண்டு" வெற்றி பெறுகிறதா? என்பதெல்லாம் தினம் தினம் குழப்பமாகவே ஓடிக் கொண்டிருக்கிறது.

English summary
2 + 3 Strategies: When will the AIADMK issue end and what will BJP Do the next
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X