எடப்பாடிக்கு "பச்சை துரோகம்".. இந்த 2 பேர்தான் எல்லாத்துக்கும் காரணம்.. தூக்க முடிவு?.. கவனித்த பாஜக
சென்னை: பாஜகவுடனான கூட்டணி உறவை முறித்துள்ள நிலையில், 2 பேர் மீது எடப்பாடி பழனிசாமி படுகோபத்தில் இருக்கிறாராம்.. என்னதான் நடக்கிறது அதிமுக கூடாரத்தில்?
அதிமுக + பாஜக இடையேயான கூட்டணி முறிந்துவிட்டதாக அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது... பாஜகவுடனான கூட்டணி முறிந்ததை கொண்டாடும் வகையில், அதிமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். மேலும் சமூக வலைதளங்களில் #நன்றி_மீண்டும்வராதீர்கள் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்தனர்.

அதிமுக - பாஜக: அதிமுகவை போலவே, தமிழக பாஜகவினரும் அதிமுக விலகலை பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடி வருகிறார்கள்.. கூட்டணியில் இருந்து அதிமுக விலகியது தொடர்பாக தமிழக தலைவர்கள் கருத்து தெரிவிக்க வேண்டாம் என்றும், பட்டாசு வெடிக்க வேண்டாம் என்றும் பாஜக மாநில அமைப்பு பொதுச் செயலாளர் கேசவ விநாயகம் உத்தரவிட்டுள்ளார்..
இந்நிலையில், பாஜகவுடன் கூட்டணியை அதிமுக முறித்துக்கொண்டதை அடுத்து ஓபிஎஸ், தினகரன் ஆகியோர் தனித்தனியாக ஆலோசனை நடத்திக்கொண்டிருக்கிறார்களா.. அதேபோல, சசிகலாவின் முகாமும் பரபரப்பாகிவிட்டதாம்..
கிளம்புங்கள்: நேற்று இரவு 7 மணி வரை தலைமைக்கழகத்தில் இருந்திருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.. சீனியர் லீடர்களுடன் விவாதித்தபடி இருந்த எடப்பாடி பழனிசாமி, "எல்லோரும் கிளம்புங்கள், இனி வருகிற ரியாக்ஷன்களை எதிர்கொள்வோம். எதுவாக இருந்தாலும் எனது கவனத்துக்கு கொண்டு வாருங்கள்" என்று மட்டும் உத்தரவிட்டாராம்..
எடப்பாடி அங்கிருந்து கிளம்பும் வரை, அவருடன் கே.பி.முனுசாமியும் இருந்திருக்கிறார். அப்போது, தம்பிதுரையின் டெல்லி லாபியில் பல துரோகங்கள் நடந்துள்ளது என்று கே.பி.முனுசாமியிடம் சொல்லி வருத்தப்பட்டாராம் எடப்பாடி பழனிச்சாமி.
தம்பிதுரை: குறிப்பாக, தம்பிதுரை மூலமாகத்தான் நமது கட்சியைச் சேர்ந்த 2 விஐபிகளை டெல்லி கையாண்டிருப்பது எனக்கு சமீபத்தில்தான் புரிந்தது. அதை விசாரிக்க நான் முயற்சித்தபோதுதான், 2 விஐபிகளும் ரகசியமாக டெல்லி செல்வதை அறிந்தேன். அதனால்தான் கடைசி நேரத்தில் உங்களையும், சிவி சண்முகத்தையும் லிஸ்ட்டில் இணைத்தேன். தேர்தல் நேரத்தில் கூட்டணியிலிருந்து அவர்களை (பாஜக) வெளியேற்றலாம் என்றுதான் நாம் திட்டமிட்டிருந்தோம். இது, நமக்கு எல்லோருக்கும் தெரிந்ததுதானே!
ஆனால், டெல்லியின் அதிகாரத்தை வளர்க்கக்கூடாது.. துரோகிகளையும் வளரவிடக் கூடாது என்று முடிவு செய்ததால்தான் உடனடி இந்த முடிவை எடுக்க வேண்டியிருந்தது" என்று கே.பி.முனுசாமியிடம் பகிர்ந்து கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிச்சாமி.
இந்த விஷயத்தையெல்லாம் எடப்பாடி பழனிசாமி, மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் சொல்லாத விஷயங்களாகும். ஆனால், இது தெரியாமல், அந்த வடமாவட்ட அதிமுக முன்னாள் அமைச்சரும் 2 நாளைக்கு முன்பு எடப்பாடி பழனிசாமி மீது கோபப்பட்டுள்ளார்.
அதிமுக புள்ளி: அதாவது, பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று அறிவித்து விட்டு, பாஜக தலைமையை சந்திக்க டெல்லிக்கு சீனியர்களை அனுப்பி வைத்துவிட்டீர்களே என்று எடப்பாடி பழனிசாமியிடம் கேட்டுள்ளார்.
"இங்க ஒரு பயலும் மதிக்க மாட்டேங்கிறாங்க. இத தெரிஞ்சும் தங்கமணி, வேலுமணியை எதற்கு டெல்லிக்கு அனுப்புனீங்க ? கூட்டணி இல்லைன்னு சொல்லிட்டோம். கூட்டணி வேண்டும்னா பாஜகதானே சென்னைக்கு நம்மளை தேடி வரவேண்டும்? அதுக்கு மாறாக, நாம டெல்லிக்கு வந்தது மரியாதையாக இல்லை " என்று கடுமையாக தனது ஆதங்கத்தைக் கொட்டினாராம்.
எடப்பாடி பழனிசாமி: அதற்கு எடப்பாடி பழனிசாமி, "தங்கமணியும் வேலுமணியும் ரகசியமாக டெல்லி வந்து பாஜக தலைவர்களை சந்திக்கத் திட்டமிட்டிருந்தனர். இதை தெரிந்து அவர்களை நான் தடுக்க நினைத்தேன்.. ஆனால் என்னால் முடியவில்லை.
எனினும், இவர்கள் மட்டும் டெல்லி தலைவர்களை தனியாக சந்தித்து, அதன்மூலம் கட்சிக்குள் குழப்பத்தை உருவாக்கக் கூடாது. அதனால்தான், நத்தம் விஸ்வநாதன் பெயரையும், உங்கள் பெயரையும் சேர்த்து சொன்னேன்.. நீங்கள் 5 பேரும் சேர்ந்து, பாஜக தலைவர்களை ஒன்றாக சந்தியுங்கள் என்று சொன்னேன்" என்றாராம் எடப்பாடி பழனிசாமி. இதற்கு பிறகுதான், அந்த வடமாவட்ட புள்ளி சமாதானமானாராம்.
எதிர்பார்த்தபடியே, நேற்றைய தினம் கூட்டணி முறிவு என்று சொன்னதும், பல தலைவர்கள் மகிழ்ச்சி அடைந்துவிட்டார்களாம்.. எனினும், சம்பந்தப்பட்ட அந்த 2 விஐபிக்கள் மீது படுகோபத்தில் எடப்பாடி உள்ளதால், எந்நேரமும் அவர்கள் கட்சியில் இருந்து வெளியேற்றப்படலாம் என்று தெரிகிறது.
என்னாகும்: ஆனால், அப்படியே அந்த 2 பேரையும் வெளியேற்றினாலும், அவர்கள் பாஜகவில் இணைய எப்போதோ ஆயத்தமாகிவிட்டார்கள் என்றும் தகவல்கள் கசிகின்றன.. தேர்தல் நெருங்க நெருங்க பல்வேறு யூகங்களும், சர்ச்சைகளும் கிளம்பி உள்ளதால், தமிழக அரசியல் களமே பரபரப்பாகி கொண்டிருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!
-
3வது இடம்.. 2026ல் மண்ணைக் கவ்விய அதிமுக! தோல்விக்கு என்ன காரணம்? உங்க கருத்தை சொல்லுங்க மக்களே! -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்! -
இன்னமும் ஒத்துக்க மாட்றாங்க பாருங்களேன்! அதிமுகவை விழுங்கும் தவெக! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
“அதிமுக எனும் கப்பல் மூழ்காது.. விஜய் மூழ்க விடமாட்டார்”.. ஆதவ் அர்ஜுனா பேச்சு! -
சட்டசபை தேர்தலில் அதிமுக வெற்றி, பாமக போட்ட பிச்சை! சி.வி.சண்முகம் காட்டம் -
காங்கிரசுக்கு நீங்க ஏன் உயிர் கொடுக்குறீங்க விஜய்? கடுப்பான பாஜக.. கோபத்தின் உச்சிக்கே போன அமித் ஷா -
இனிமே நம்மதான்..பக்காவாய் காய் நகர்த்தும் பாஜக! டெல்லியில் எகிறும் செல்வாக்கு! மோடி போட்ட பலே ப்ளான் -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
Gautami: அதிமுகவில் இருந்து விலகினார் நடிகை கவுதமி! அதிர்ச்சியில் எடப்பாடி பழனிசாமி -
விஜய், உதயநிதி, அண்ணாமலைக்கு செக்! அதிமுகவில் களமிறங்குகிறாரா எடப்பாடி பழனிசாமி மகன் மிதுன்? -
எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்.. சிவி சண்முகத்தை அடுத்து சி. விஜயபாஸ்கரும் பரபர ட்வீட் பதிவு -
எடப்பாடி பழனிசாமிக்கு விழுந்த அரசியல் அடி.. தவெகவுக்கு தாவ ரெடியாகும் முக்கிய புள்ளி! இதுதான் காரணமா












Click it and Unblock the Notifications