சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

7 ரூபாண்ணே.. ம்ஹூம்.. ஆறுக்கு வர மாட்டாங்க.. ஓகேன்னா சொல்லுங்க.. அதிர வைக்கும் ஆடியோ!

ஆசிரியர் பணியிட மாறுதலுக்கு லஞ்சம் கேட்கும் ஆடியோ வைரலாகிறது.

Google Oneindia Tamil News

Recommended Video

    இரண்டு தலைமை ஆசிரியர்கள் பேசும் அதிர வைக்கும் ஆடியோ

    சென்னை: "அண்ணே... 7 ரூபா சொல்றாங்கண்ணே... பேசி முடிச்சிடலாமா?" என்ற 2 தலைமை ஆசிரியர்கள் பேசிய ஆடியோ ஒன்று வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ஆசிரியர் பணி இடமாற்றத்திற்கான லஞ்சம் குறித்த விவகாரம்.

    ஒரு பட்டதாரி டீச்சர் ஒரு ஸ்கூலில் வேலை பார்த்து வருகிறார்போல. அவருக்கு டிரான்ஸ்பர் தேவைப்படுவதால் தன் பள்ளி தலைமை ஆசிரியரின் உதவியை கேட்டிருக்கிறார்.

    ஆனால் இந்த தலைமை ஆசிரியரோ, இது சம்பந்தமாக இன்னொருவரின் உதவியை நாடி இருக்கிறார். அந்த ஒருவர் யார் என்றால், கமிஷன் வாங்கி கொண்டு பல அரசு ஊழியர்களுக்கு டிரான்ஸ்பர், அப்பாய்ண்ட்மெண்ட் பெற்று தருபவர். இவரும் ஒரு தலைமை ஆசிரியர்தான்.

    ரேட் பேசுகிறார்கள்

    ரேட் பேசுகிறார்கள்

    இவர்கள் இருவரும் அந்த டீச்சரின் டிரான்ஸ்பருக்கு பேரம் பேசுவதுதான் இந்த ஆடியோ. இதில் என்ன கொடுமை என்றால், சீட் வாங்கி தருகிறேன் என்று ரேட் சொன்னவரும் ஒரு தலைமை ஆசிரியர்தான்! எங்க போய் முட்டிக்கிறது நாம!!

    கூச்சமே இல்லை

    கூச்சமே இல்லை

    அந்த ஆடியோவில் 7 ரூபாய் என்று சர்வசாதாரணமாக பேசுகிறார்கள். அதாவது 7 லட்சமாம். கணவனை பிரிந்து வேறு ஒரு ஊரில் வேலை பார்த்து வரும் ஒரு பட்டதாரி டீச்சர், கணவனிடமே மீண்டும் செல்ல வேண்டும் என்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதற்காகத்தான் இந்த டீலிங் பேச்சு நடக்கிறது. கொஞ்சமும் கூச்சம் இல்லாமல் பலபேரிடம் பணத்தை வாங்கி கொண்டு டிரான்ஸ்பர் உள்ளிட்ட விஷயங்களை செய்து கொடுப்பவர்கள் போல இருக்கிறது இவர்களின் பேச்சைக் கேட்டால்.

    யாரும் உருவ முடியாது

    யாரும் உருவ முடியாது

    இந்த ஆடியோ பேச்சில் முக்கியமான வரிகள் இடம்பெற்றுள்ளது. அது, "இப்போ நாம போற ரூட் எப்படின்னா ஒரு ஐஏஎஸ் மூலமாக போய்ட்டிருக்கு. சொன்னா கரெக்டா இருக்கும். யாரும் உருவ முடியாது" என்கிறார். அதாவது டிரான்ஸ்பருக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் கமிஷன் பெற்று கொண்டு உதவுவது என்பது தெரியவந்துள்ளது அடுத்த அதிர்ச்சி ஆகும்.

    மதுரை ஐகோர்ட்

    மதுரை ஐகோர்ட்

    இந்த ஆடியோ பேச்சு இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆசிரியர்களின் இட மாறுதல் குறித்து லஞ்சம் ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை நடத்த வேண்டும் என்று ஏற்கனவே மதுரை ஐகோர்ட்டில் கேஸ் ஒன்று போடப்பட்டுள்ளது.

    அதிர்ச்சியில் மக்கள்

    அதிர்ச்சியில் மக்கள்

    இது சம்பந்தமாக பதில் அளிக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறைக்கு கோர்ட் உத்தரவிட்டும் உள்ளது. இந்த நிலையில்தான் இப்படிப்பட்ட ஆடியோ ஒன்று வெளியாகி உள்ளது தமிழகத்தையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.

    English summary
    2 School Head Master's bribery audio goes viral about teacher's transfer
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X