ஜஸ்ட் பாஸ்.. "தெரியாதவங்க தெரிஞ்சிக்குங்க".. என்ன சொல்றாரு ஸ்டாலின்.. யாரு 2 "புள்ளி".. அதிரும் பாஜக
சென்னை: முதல்வர் ஸ்டாலினின் அரவக்குறிச்சி மற்றும் ஈரோடு மாவட்ட பேச்சுக்கள் மிகுந்த கவனத்தை ஈர்த்து வருகிறது. என்ன காரணம்?
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் தமிழக மின்சாரத்துறை சார்பில் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்கும் திட்டத்தை தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
அப்போது முதல்வர் பேசியபோது, மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜியை அளவுக்கு அதிகமாகவே புகழ்ந்திருந்தார்.
கோவை கார் வெடிப்பு சம்பவம் எதிரொலி.. உருவாகும் மாநில தீவிரவாத தடுப்புப் பிரிவு.. ஸ்டாலின் அதிரடி

குஷி + சந்தோஷம்
முதல்வர் பேசியபோது, "இதற்கு முன்பு இந்தியாவில் வேறு எந்த மாநில அரசுகளும் செய்யாத சாதனையை தமிழக அரசு செய்திருக்கிறது. இந்த சாதனையை தலைநிமிர்ந்து சொல்ல வைக்கக் காரணமாக மின் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்களை மனமார நான் பாராட்டுகிறேன்.. எத்தனையோ முறை நான் செந்தில் பாலாஜியை பாராட்டியிருக்கிறேன்.. பல்வேறு நிகழ்ச்சிகளில் வாழ்த்தியும் பேசியிருக்கிறேன்.. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், டார்கெட் வைத்து செயல்படக்கூடியவர்.. குறிக்கோளுடன் அந்த காரியத்தை முடித்தே தீருவார்..

ஹேப்பி எண்ட்
நான் முன்பு சொன்னபோது, சிலருக்கு புரியாமல்கூட இருந்திருக்கலாம்.. அப்படி புரியாதவர்களுக்கும் இன்று புரிந்திருக்கும் என்று நான் நம்புகிறேன்.. ஒரு இலக்கை தனக்கு தானே வைத்துக் கொண்டு, அதை முடித்துக் காட்டக்கூடிய வல்லவர்களில் ஒருவர்தான், செந்தில்பாலாஜி என்பதை மீண்டும் ஒருமுறை நினைவுபடுத்துகிறேன்.. அவருக்கு துணை நிற்கக்கூடிய அதிகாரிகள், அலுவலர்கள் அத்தனை பேரையும் பாராட்டுகிறேன்.. முதல்வர் என்ற முறையில் இதை சொல்லவில்லை.. ஒட்டுமொத்த விவசாயிகளின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பேசியுள்ளார்.

எவரெஸ்ட் கணேசன்
முன்னதாக, ஈரோட்டில் ஈரோடு தெற்கு மாவட்ட திமுக துணைச் செயலாளர் செந்தில்குமார் இல்ல திருமண வரவேற்பு விழாவில் பங்கேற்ற, முதல்வர் ஸ்டாலின் பேசியபோது, திமுக இளைஞரணி வளர்ச்சிக்காக நான் சுற்றுப்பயணம் செய்தபோது, ஈரோடு அமைப்பாளராக இருந்தவர் எவரெஸ்ட் கணேசன்.. அவர் என்னுடைய கொங்கு மாவட்ட சுற்றுப் பயணங்களின்போது துணையாக இருந்தவர். அவரது தம்பிகளில் ஒருவராக செயல்பட்டவர் இந்த செந்தில்குமார்..

ஆக்டிவ் நபர்
முரண்டு பிடிக்கும் சுபாவம் கொண்டவர். விளைவுகளை பற்றி கவலைப்படாமல் நினைத்ததை செய்ய வேண்டும் என்று நினைப்பவர். செந்திலின் தந்தை 1977-ல் திமுக வார்டு செயலாளராக பணிபுரிந்தார். செந்தில் குமார் 1980-81ல் இளைஞரணி உறுப்பினராக சேர்ந்து வார்டு செயலாளர், மாணவரணி, மாவட்ட பொருளாளர் பதவிகளை வகித்து தற்போது மாவட்ட துணை செயலாளராக பதவி வகித்து வருகிறார். நாளைக்கு இதைவிட பெரிய பொறுப்புகள் அவருக்கு வரும்.. வரவேண்டும்.. செந்தில் குமார் படிப்படியாக வளர்ந்து சிறந்த செயல்வீரராக விளங்குகிறார் என்றார்.

ஜஸ்ட் பாஸ்
முதல்வரின் இந்த 2 பேச்சுக்களும், கொங்கு மண்டலத்தை உற்றுநோக்க வைத்து வருகிறது.. காரணம், விரைவில் எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், கொங்குவில் முதல் கவனத்தை, முதல்வர் செலுத்தி தொடங்கிவிட்டதாகவும், அதற்காகவே 2 பலம்பொருந்திய நிர்வாகியை அடையாளம் காண்பித்து வரவேற்றுள்ளதாகவும் கணிக்கப்படுகிறது.. கடந்த தேர்தலில், ஸ்டாலினை மிகவும் அப்செட்டுக்குள்ளாக்கியது கொங்கு மண்டல வாக்குகளின் சறுக்கல்கள்தான்.. சற்று கவனத்துடன் செயல்பட்டிருந்தால், தேர்தல் முடிவில் திமுக "ஜஸ்ட் பாஸ்" ஆக வேண்டிய நிலைமையே ஏற்பட்டிருக்காது என்று பலமுறை நெருக்கமானவர்களிடம் ஸ்டாலின் வருத்தப்பட்டதாகவும் செய்திகள் வந்தன..

தகரும் கோட்டை
எனவே, இந்த ஒரு வருடமாகவே, கொங்குவில் தீவிர கவனம் செலுத்தியதன் விளைவாக, கடந்த சில மாதங்களாகவே, அதிமுக கோட்டையான கொங்கு, திமுக பக்கம் சாய துவங்கி உள்ளது.. இப்போது எம்பி தேர்தல் வரஉள்ள நிலையில், கொங்குவில் 100 சதவீத வெற்றிக்கான அடித்தளம் அமைக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.. ஏற்கனவே, சீனியர்கள் நேருவும், செந்தில் பாலாஜியும் இந்த பணியை மேற்கொண்டு வந்தாலும் வரப்போகும் தேர்தலில், கொங்கு மண்டல பொறுப்பு இவர்களுக்கு மீண்டும் வரக்கூடும் என்கிறார்கள்.. இந்த லிஸ்ட்டில் செந்தில்குமாரும் இணைந்துள்ள நிலையில், அதிமுகவும், பாஜகவும் அப்படியே இடிந்து போய் கிடக்கின்றனவாம்..!!