தாலி எதுக்கு?.. "கற்புக்கரசன்" எங்கே?.. சாதி சாட்டையை சுழட்டியடித்த கிழவன்.. பெரியார் ஒரு சரித்திரம்
பெண்ணுரிமைக்காக போராடிய பெரியார் வரலாற்றில் என்றும் நினைவுகூர்கிறார்
சென்னை: பெரியார் இந்த சமூகத்தின் சொத்து.. அவர் ஏற்படுத்திய சமூக தாக்கமும், அதன்மூலம் பெண்களுக்கு கிடைத்த விடுதலைகளும் ஏராளம்.. இந்த 2 விஷயங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.
2 விதமான அணுகுமுறைகளை ஒரேசமயத்தில் கையாண்டவர்தான் தந்தை பெரியார்.. மூடநம்பிக்கை, பழமைவாதம் போன்றவற்றுக்கு ஆரியர்களே காரணம் என்றும், இதற்கு மூலக் காரணம் இதிகாசங்கள், புராணங்கள், பலியிடுதல் போன்றவற்றை உள்ளடக்கிய இந்து மதம்தான் காரணம் என்பதால், இந்து கடவுள்களுக்கு எதிராக போராடுவது என்று முடிவுக்கு வந்தார் பெரியார்.
மற்றொருபக்கம் அரசியல் ரீதியாக அணுகினார்.. பிரிட்டிஷ் ஆட்சியில் சுமார் 90 சதவீதம் உயர்பதவியும், பொறுப்புகளும் பிராமணர்கள் வசம் இருப்பதாகவும், இதர பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் வெறும் கூலிகளாகவும், அடிமைகளாகவும், வாழ்வதாகவும், இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்றும் உறுதி பூண்டார்.

2 பாயிண்ட்
இந்த 2 நோக்கங்களை தவிர, ஒரே சமயத்தில் பல கடமைகளும் பெரியாரிடம் வந்து சேர்ந்தன... மூடநம்பிக்கை, பழமைவாதம் ஆகியவற்றை ஒழிப்பது, அதன் ஊற்று கண்ணாக விளங்கும் இந்த கடவுள்களையும், வேதங்களையும் எதிர்ப்பது, அரசு துறையில் பிராமணர்களின் ஆதிக்கத்தை குறைப்பது, இடஒதுக்கீட்டின் மூலம் பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் மேம்பாட்டிற்கு பாடுபடுவது, தீண்டாமை, பெண்ணடிமைத்தனம் ஆகிய சமூக அவலங்களுக்கு முடிவு கட்டுவது போன்றவைகளை தன்னுடைய திட்டங்களாக வகுத்துக் கொண்டார். இந்த திட்டங்கள்தான் திராவிட இயக்கத்தின் கொள்கைகளாகவும் உருவாயிற்று. பெரியார் குறித்து எத்தனையோ இருந்தாலும், சமூக தாக்கம் + பெண்ணுரிமை என்ற இந்த 2 விஷயங்களை மட்டும் இங்கு பார்ப்போம்..

முரட்டுத்தனம்
முதலாவதாக, சமூக தாக்கத்தை எடுத்துக் கொண்டால், பெரியாரின் அனல் கக்கும் பிரச்சாரங்கள்தான், திராவிடர் கழகத்துக்கு அடிவேராக அமைந்தது.. தீவிர பிரச்சாரத்தின் மூலம் கொள்கைகளை மக்கள் மத்தியில் ஓயாமல் கொண்டு சென்றார் பெரியார்.. இந்து மதத்தையும், இந்து கடவுள்களையும் முரட்டுத்தனமாக விமர்சித்தார்.. தன் கடைசி மூச்சு வரை கடவுள் மறுப்பு கொள்கையை அவர் கைவிடவே இல்லை.. படிப்பறிவில்லாத பாமர மக்களிடம், பகுத்தறிவு கருத்துக்களை தன் வாழ்நாளெல்லாம் கொண்டு விதைத்ததால்தான், பெரியாரின் கருத்துக்கள் இன்னமும் உயிர்ப்புடன் இருந்து கொண்டிருக்கிறது.. அவைகள் உயிர்ப்புடன் இருப்பதால்தான், இன்றும்கூட பெரியார் சிலைகள் உடைத்தெறியப்படுகின்றன..!

போர்க்கோலம்
பெரியாரின் பின்னால் லட்சக்கணக்கான இளைஞர்கள் திரண்டார்கள்.. பூச்சி புழுவை போல புரண்டு நெளிந்து கொண்டிருந்த பாமர மக்கள் போர்க்கோலம் பூண்டார்கள்.. புரட்சியை அரங்கேற்றும் புதிய பூமியாக தமிழகம் மாறியது.. பகுத்தறிவு பூமியாக சீர்திருத்தங்களின் விளைநிலமாக தமிழகம் திகழ தொடங்கியது.. மூட நம்பிக்கைகளுக்கும், பழமைவாதத்திற்கும், தீண்டாமைக்கும், ஜாதிவெறிக்கும் எதிராக மக்களே கொந்தளித்தெழுந்தார்கள்.. அதுமட்டுமல்ல, இந்தியாவின் முதல் பொதுத்தேர்தல் வந்தபோது, முக்கிய முடிவுகளை எடுக்க வேண்டிய கட்டத்திற்கு தள்ளப்பட்டது திராவிடர் கழகம் என்றால் அது மிகையல்ல.

நாகம்மை
இரண்டாவதாக பெண்ணுரிமைக்காக பெரியார் மேற்கொண்ட முயற்சிகள் ஏராளம்.. ஏராளம்.. பெண்களுக்கு முக்கியத்துவம் தருவதில் முதன்மையான தலைவர் பெரியார்.. இன்னும் சொல்லப்போனால், பெண்ணுரிமை முழுமையான ஆதரவை முதன்முதலாக அளித்தது பெரியார்தான்.. பெண்களுக்கு ஆதரவாக இவரை போல எழுதியவர்கள் இல்லை. பெண்களுக்கு ஆதரவாக இவரை போல் பேசியவர்கள் யாருமே இல்லை.. தந்தை பெரியார் அன்னை நாகம்மையை பெரிதும் நேசித்தவர்.. அவருக்கு சம உரிமை வழங்கியவர்.. ஒரு நிகழ்ச்சிக்கு தலைமை வகித்த நாகம்மை, "இப்போது தோழர் ஈவெரா உரையாற்றுவார்" என்று அறிவித்த அளவிற்கு அவரை காத்தவர்.. பெண்கள் நடத்திய மாநாட்டில் ஈவெ ராமசாமியை "தந்தை பெரியார்" என்று புகழாரம் சூட்டப்பட்டது என்றால், அந்த அளவுக்கு பெண்களிடம் கண்ணியமாகவும், தரமாகவும் நடந்து கொண்டவர் பெரியார் ஆவார்

தாலி ஏன்?
'கற்புக்கரசி' போல 'கற்புக்கரசன்' என்ற வார்த்தை ஏன் இல்லை?, ஆண்களும், பெண்களும் சமம் என்று கருதுகிற சமூகத்தில் பெண்களுக்கு மட்டும் ஏன் ஆண்கள் தாலி அணிவிக்க வேண்டும்? பெண்களும் ஆண்களுக்கு தாலி அணிவிப்பதில் குற்றமில்லையே? திருமணம் ஆனவர், ஆகாதவர் என்ற வேறுபாட்டைத் தாலி எடுத்துக்காட்டுவதாக இருந்தால் ஆண்களுக்கு உள்ள அடையாளம் என்ன? என்று அடுக்கடுக்காக கேள்விகளை எழுப்பிய பெரியாரை, வியந்துபோய் பார்த்தது இந்த சமூகம்.. இன்னும் ஒருபடிமேலேபோய், பெண்களும் ஆண்களுக்குத் தாலி கட்டுவதே நியாயம் என்று வாதிட்டபோது, விக்கித்து மலைத்து போய்விட்டது தமிழகம்.

கன்ட்ரோல்
பெண்கள் விளையாட்டுகளில் பங்கேற்க வேண்டும், காரணம் உடல் ரீதியாக மட்டுமல்ல, அறிவு ரீதியாவும் பெண்கள் பயிற்சி பெற்றவர்களாக இருக்க வேண்டும் என்று பெரியார் விரும்பினார்.. காரணம், இந்த பெண்கள் வளர்ந்து திருமணம் செய்யும்போது அவர்களே தேர்வுசெய்த ஆணை திருமணம் செய்வது சிறந்தது என்றும், குழந்தை பிறப்பை கட்டுப்படுத்த அவர்களுக்கு தெரிந்திருக்க வேண்டும் என்றும் விரும்பினார்.. குழந்தை பிறப்பை கட்டுப்படுத்துவது என்பது, மக்கள் தொகையை கட்டுப்படுத்துவதற்காக பெரியார் சொல்லவில்லை..

33% ரிசர்வேஷன்
பெண்களின் உடலமைப்பு, பாலியல் நடவடிக்கைகள் போன்றவை வாழ்வின் பிற அம்சங்களிலும் எப்படி எதிரொலிக்கும் என்பதை அடிப்படையாக வைத்து, பெரியார் சொல்லப்பட்ட நுட்பமான கருத்துக்கள் இவையாகும். கற்பு என்பது ஒரு பெண்ணை அடிமைப்படுத்தவே உருவாக்கப்பட்டது, உண்மையில் அப்படி எதுவுமே கிடையாது என்று பெரியாரின் வலியுறுத்தல்கள் அடுத்தக்கட்டத்துக்கு நகர்ந்தன.. பெரியார் என்று மட்டும் ஒருவர் இல்லையென்றால், மறுமணங்களும், சொத்துரிமையும் மட்டுமல்ல, இன்று தமிழ்நாட்டில் பெண்களுக்கான 33% இட ஒதுக்கீட்டை நாம் பெற்றிருக்கவே முடியாது என்பதையும் ஆணித்தரமாக சொல்ல வேண்டும்.

அறிவுப்பூட்டு
பெரியார் - அறிவுபூட்டின் திறவுகோல்.. அடிமை விலங்கை நொறுக்கியவர்.. சாதி சாட்டையை சுழட்டியடித்த வெண்தாடி கிழவன்.. திராவிட இயக்கத்தின் உறுதி வாய்ந்த பிரம்மாண்டமான இந்த தூணை தவிர்த்துவிட்டு தமிழக வரலாற்றை யாருமே எழுத முடியாது.. பல யுகங்கள் கழிந்தாலும்சரி, இந்த பூமிப்பந்து சுழன்று சுழன்று காலத்தை உருட்டினாலும்சரி, பெரியாரின் புகழும் அப்போதும் சேர்ந்தே பயணிக்கும் என்பதுதான் நிஜம்..!
-
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications