சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ராத்திரி 12 மணி.. ஹைவேஸில் 130 கிமீ வேகத்தில் வந்த கார்.. பறந்து போய் விழுந்த 2 பெண்கள்.. சென்னையில்

: சென்னையில் கார் விபத்தில் 2 இளம்பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துவிட்டனர்

Google Oneindia Tamil News

சென்னை: சென்னை அருகே ஐடி பெண் ஊழியர்கள் 2 பேரும் கார் மோதி உயிரிழந்துள்ள நிலையில், அதுகுறித்த கூடுதல் விவரங்களும் வெளியாகி உள்ளன

2 நாட்களுக்கு முன்பு சென்னை அருகே நடந்த ஒரு விபத்தின் பரபரப்பு இன்னமும் அடங்கவே இல்லை.. இந்த அளவுக்குகூட காரை வேகமாக இயக்க முடியுமா? என்ற அதிர்ச்சி கேள்வி சென்னைவாசிகளை கலங்க வைத்து வருகிறது.

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம், அக்காததாரா பகுதியை சேர்ந்தவர் ரவி மணி... இவரது மகள் ஸ்ரீலட்சுமி 23 வயதாகிறது.. இவரும் லாவண்யா என்பவரும் நெருங்கிய தோழிகள்.

8 வருஷமா.. சொந்த மகளிடம் அத்துமீறிய தந்தை! கொடுமைக்கு அம்மாவே உடந்தையாம்! தலைசுற்றிப் போன சென்னை! 8 வருஷமா.. சொந்த மகளிடம் அத்துமீறிய தந்தை! கொடுமைக்கு அம்மாவே உடந்தையாம்! தலைசுற்றிப் போன சென்னை!

 ஐடி கம்பெனி

ஐடி கம்பெனி

லாவண்யா ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம், ரெட்டிகாரப்பள்ளி பகுதியை சேர்ந்தவர்.. இவருக்கும் 23 வயதாகிறது.. சென்னை ஓ.எம்.ஆர். சாலை, நாவலூரில் உள்ள எச்சிஎல் நிறுவனத்தில் இருவருமே சாப்ட்வேர் என்ஜினியர்களாக வேலை பார்த்து வந்தனர். இவர்கள் இருவரும் கடந்த 14ம் தேதி நைட் டியூட்டி முடித்துவிட்டு தாங்கள் தங்கியிருந்த ரூமுக்கு இரவு 12 மணியளவில் நடந்து சென்று கொண்டிருந்தனர்.. அப்போது கேளம்பாக்கத்தில் இருந்து சோழிங்கநல்லூர் நோக்கி வேகமாக சென்ற ஹோண்டா சிட்டி சொகுசு கார் இவர்கள் மீது வேகமாக பலமாக மோதிவிட்டது... இதில் ஸ்ரீலட்சுமி, லாவண்யா ஆகிய 2 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.

 ஆம்புலன்ஸ்

ஆம்புலன்ஸ்

இந்த விபத்தை நேரில் பார்த்த ஓஎம்ஆர் சாலையில் சென்றவர்கள் பதறிப்போய் ஆம்புலன்சுக்கு போன் செய்தார்கள்.. உயிருக்கு போராடி கொண்டிருந்த 2 பேரையும் உடனடியாக சென்னை ராயப்பேட்டை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்... ஆனால், அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், ஸ்ரீலட்சுமி ஏற்கனவே இறந்து விட்டதாக சொன்னார்கள்.. இதைத்தொடர்ந்து லாவண்யாவுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலனின்றி லாவண்யாவும் இறந்துவிட்டார்.

 ஹோட்டல் ஓனர்

ஹோட்டல் ஓனர்

இதனிடையே, சம்பவ இடத்தில் விபத்தை ஏற்படுத்திய காரையும், காரில் இருந்த இளைஞரையும் பொதுமக்கள் வசமாக பிடித்து வைத்து கொண்டனர்.. பிறகு போலீசுக்கு தகவல் அளித்த நிலையில், உடனடியாக பள்ளிக்கரணை போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.. அந்த இளைஞரிடம் விசாரணை நடத்தப்பட்டது.. சோழிங்கநல்லூரை சேர்ந்த பிரபல ஹோட்டல் அதிபர் பூபாலகுமாரின் மகன் மோத்தீஸ்குமார் மகன்தான் வண்டியை ஓட்டி வந்துள்ளார் என்பது தெரியவந்தது.. 20 வயதான இவர், நண்பர்களுடன் பார்ட்டிக்கு சென்றுவிட்டு, போதையில் காரை வேகமாக ஓட்டி வந்துள்ளார்..

 ஓவர் ஸ்பீடு

ஓவர் ஸ்பீடு

ஓவர் ஸ்பீடில் காரை இயக்கியதால்தான் இந்த விபத்து நடந்துள்ளதாக போலீஸார் தரப்பில் கூறப்பட்டுள்ளது.. அத்துடன் மோத்தீஸ்குமார் மது அருந்தியிருப்பதும் உறுதியானது.. இதையடுத்து பள்ளிக்கரணை போலீசார் மோத்தீஸ்குமாரை கைது செய்தனர்... மணிக்கு 130 கிமீ ஸ்பீடில் காரை ஓட்டிவந்துள்ளார் மோத்தீஸ்குமார்.. அவ்வளவு வேகமாக காரை இயக்கியும், பின்பக்கமாக வந்து சத்தமில்லாமல் மோதியிருப்பது அதிர்ச்சியை தந்துள்ளது..

சிக்னல்

சிக்னல்

அதுமட்டுமல்ல, ஏராளமான தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் பெரிய குடியிருப்பு பகுதியை இந்த பகுதியில் ஒரே ஒரு செக்போஸ்ட் மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது.. பாதசாரிகள் சாலையை கடப்பதற்கு போதுமான வசதிகள் செய்துதரப்படவில்லை, அதனாலேயே இந்த பகுதியில் நிறைய விபத்துக்கள் நடப்பதாகவும் பொதுமக்கள் புகார்கள் தெரிவிக்கிறார்கள்.. நெடுஞ்சாலைத்துறையின் மெத்தன போக்குதான் இதற்கெல்லாம் காரணம் என்பதுடன், சிக்னல் பாதுகாப்பை வழங்க வேண்டும், அல்லது பாதசாரிகளுக்கு மேம்பாலங்கள் அமைக்க வேண்டும் அல்லது தடுப்புகளையாவது அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகளும் வெடித்து கிளம்பி உள்ளன.

English summary
2 Women Techies In Chennai Killed By Driver Going 130 Km Per Hour
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X