ஆம்னி பஸ்சே தோற்கும்.. எஸ்இடிசி இயக்கும் மல்டி ஆக்சில் பேருந்துகள்! எப்போது முதல்? வந்த அப்டேட்
சென்னை: தனியார் ஆம்னி பேருந்துகளை மிஞ்சும் வகையில், தமிழக அரசு போக்குவரத்து விரைவுக் கழகம் 20 வோல்வோ மல்டி ஆக்சில் பேருந்துகளை இயக்க முடிவு செய்துள்ளது. இந்த பேருந்துகளின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகின்றன. எப்போது முதல் பயணிகள் பயன்பாட்டுக்கு வரும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் எஸ்.இ.டி.சி. எனப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழகத்தின் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னை, கோவை உள்ளிட்ட நகரங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கும் இந்த பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. சென்னையிலிருந்து நெல்லை, நாகர்கோவில், மதுரை, திருச்சி, திண்டுக்கல் என பல்வேறு ஊர்களுக்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

செமி ஸ்லீப்பர், ஏசி வசதியுடன்
தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு இணையாக சொகுசு வசதியுடன் ஸ்லீப்பர், செமி ஸ்லீப்பர், ஏசி வசதியுடன் பேருந்துகளை எஸ்.இ.டி.சி. இயக்கி வருகிறது. பயணிகளின் வசதியை கருத்தில் கொண்டு பேருந்துகளை அரசு போக்குவரத்து கழகம் புதிய நவீன வசதிகளுடன் இயக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக 2025-26ஆம் ஆண்டுக்கு 130 புதிய பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதில் 110 பேருந்துகள் ஏசி வசதியில்லா இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்டவை.
எஞ்சிய 20 பேருந்துகளும் இருக்கை வசதி கொண்ட 'மல்டி ஆக்சில்' சொகுசு பேருந்துகள் ஆகும். தனியார் ஆம்னி பேருந்துகளுக்கு நிகராக அரசு போக்குவரத்து சேவையை உயர்த்தும் நடவடிக்கையாக இந்த 20 'மல்டி ஆக்சில்' பேருந்துகளும் போக்குவரத்து கழகத்தில் இணைக்கப்பட உள்ளன. இந்த வோல்வோ மல்டி ஆக்சில் பேருந்துகள் பெங்களூரில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
எப்போது பயன்பாட்டுக்கு வரும்?
இந்த மாத இறுதிக்குள் அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திடம் ஒப்படைக்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மல்டி ஆக்சில் பேருந்துகள் அடுத்த மாதம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்று அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறினர்.
அதேபோல், ஏசி வசதியில்லா இருக்கை மற்றும் ஸ்லீப்பர் வசதி கொண்ட 110 பேருந்துகளில் 2 பேருந்துகளுக்கான சேஸ்ஸிகள் வந்துள்ளதாகவும், அவை பெங்களூரில் கூண்டு கட்டப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. இந்த பேருந்துகள் கூண்டு கட்டப்பட்டு முடிக்கப்பட்ட பின்னர் அவற்றை ஆய்வு செய்து ஒப்புதல் அளித்ததும், எஞ்சிய பேருந்துகள் விரைவாக கூண்டு கட்டப்பட்டு அந்த பேருந்துகளும் பொங்கல் பண்டிகைக்கு முன் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்துவிடும் என்றும் அதிகாரிகள் கூறினர்.
சமூக வலைத்தளத்தில் பரவும் வீடியோ
அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்திற்காக வடிவமைக்கப்பட்டுள்ள 'மல்டி ஆக்சில்' பேருந்துகளின் வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றன. தனியார் ஆம்னி பேருந்துகளை மிஞ்சும் வகையில் இந்த பேருந்துகள் உள்ளன. தனியார் பேருந்துகளில் இதுபோன்ற சொகுசு பேருந்துகளில் பயணிக்க சென்னையிலிருந்து நெல்லைக்கு செல்வதாக இருந்தால், சாதாரண நாட்களில் குறைந்தது ₹1,500ம், வார இறுதி நாட்களில் ₹2,500வரையிலும் கட்டணமாக வசூலிக்கிறார்கள். பண்டிகை காலம் என்றால் சொல்லவே வேண்டியது இல்லை.
கட்டணம் எவ்வளவு இருக்கும்?
எனவே, அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் இயக்கப்பட உள்ள இந்த மல்டி ஆக்சில் பேருந்துகளில், தனியார் பேருந்துகளை விட கட்டணம் குறைவாக இருக்கும் என்பதால் நடுத்தர வசதி கொண்ட பயணிகளும் விரும்பி பயணிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது அரசு விரைவு பேருந்துகளில் சென்னையிலிருந்து நெல்லைக்கு ஏசி படுக்கை வசதி பேருந்தில் ரூ.1,078 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எனவே இதே அளவிலான கட்டணமே மல்டி ஆக்சில் பேருந்துகளிலும் இருக்கும் என பயணிகள் எதிர்பார்க்கிறார்கள்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications