வணக்கம்டா மாப்ளே தேனில இருந்து.. கவர்ச்சிக் கன்னி சூர்யா.. 2019ஐ கலக்கிய டிக் டாக் டெர்ரர்கள்!
டிக்டாக் பிரபலங்கள் இந்த வருடமும் அதிகமாக மக்களால் பேசப்பட்டனர்
சென்னை: என்னதான் சொல்லுங்க.. இந்த 2019ம் ஆண்டை அதிகமாக கலக்கியது அரசியல்வாதிகளோ இல்லை சினிமாக்காரர்களோ நிச்சயமா இல்லை.. நம்ம டிக்டாக் அக்கப் போர்கள்தான் அதிக அளவில் அதகளம் செய்து விட்டனர்.
முன்பெல்லாம் ஒரு பொழுது போக்குக்காக டிக்டாக் செய்வார்கள். ஆனால் இன்று அதையே வாழ்வாக்கி, அடிமையாகி பைத்தியம் பிடித்தவர்கள் பலர் அதிலேயே கிடக்கின்றனர். குடும்பத்தை, வாழ்க்கையை இழந்து கிடப்பவர்கள்தான் இதில் அதிகம்.
இந்த 2019ம் ஆண்டில் டிக் டாக் மூலமாக பெரும் பரபரப்பை, தாக்கத்தை அலையை ஏற்படுத்தியவர்கள் என்று ஒரு லிஸ்ட் போட்டோம்.. அடேங்கப்பா.. அதையும் நீங்க பாருங்களேன்.

வணக்கம்டா மாப்ளே தேனில இருந்து
இவரை மறக்க முடியாது டிக்டாக் அன்பர்களால். செம பேமஸ். சும்மா சொல்லக் கூடாது. தேனியிலிருந்து கலக்கலாக டிக்டாக் போஸ்ட் போடுபவர் இவர். அதுவும் டேய் டிக் டாக்கு.." அது என்னன்னு பாரு.. ஏன் இப்படி இருக்கே நீ.. உடனே சரி பண்ணு.. "என்று கமாண்ட் கொடுத்து அதிர வைப்பார். அத்தோடு நிற்காமல் அதிரடியாக அப்டேட்ஸ் போடுவதிலும் இந்த மாப்ளை செம கில்லாடிதான். இவரோட பேரு அருண் குமாராம். 2019ல் அதிகம் பேசப்பட்டவர்களில் இவரும் முக்கியமானவர்.

செத்த பயலே.. வந்தேன்னா பாத்துக்கோ
டிக்டாக்கில் அதிகம் பேசப்பட்ட இன்னொரு நபர் இந்த ஜிபி முத்து. நெல்லைக்காரர். இவர் பேசினாலே ரசாபாசமாகத்தான் இருந்தது. செத்த பயலே, வந்தேன்னா பாத்துக்கோ, செத்துப் போயிருல என்று இவர் வாய்க்கு வாய் செத்து செத்துப் பேசியதை ஒரு குரூப் ரசித்து ரசிகர்களாகவே செய்தது. பல பெண்களும் இவருக்கு தோழிகள் என்றால் பார்த்துக்கங்களேன்.

கவர்ச்சிக் கன்னி சூர்யா
இந்த சூர்யாவைப் பற்றி நிறைய சொல்ல வேண்டியதில்லை. ஊருக்கே தெரியும். ஜிபி முத்துவுடன் ஆரம்பத்தில் சண்டை.. பின்னர் மாமா மாமா என்று உரிமைக் கொஞ்சல்.. பிறகு அழுகை கண்ணீர்.. கூப்பிடுகிறார்கள் என்று புகார்.. என சகலமும் சர்ச்சையாகவே காணப்படுகிறார் சூர்யா. இவரும் இந்த ஆண்டின் டிக்டாக் பேமஸ் என்றால் அதையும் ஏற்றுத்தான் ஆக வேண்டியுள்ளது.

பட்டியல்
முன்பெல்லாம் டிசம்பர் மாத இறுதி நாட்களில் "இந்த ஆண்டின் சிறந்த அரசியல்வாதிகள், சிறந்த பட வரிசைகள், பாடல் வரிசைகள், நடிகர், நடிகைகளின் பெயர்கள் இடம்பெற்று பட்டியல் வெளியாகும். ஆனால், இந்த நிலை இந்த வருடம் மாறி டிக் டாக் பிரபலங்களும் பட்டியலில் இடம்பெற்றதுடன், முதலிடத்திலும் ஆக்கிரமித்துள்ளதை சாதனை என்று சொல்வதா.. சோதனை என்று சொல்வதா.. தெரியவில்லை!
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications