திமுக தேர்தல் அறிக்கைக்கு போட்டி.. 2021 இடைக்கால பட்ஜெட்.. சலுகைகளை அள்ளிவீசும் திட்டத்தில் அதிமுக.!
சென்னை: தமிழக அரசு தாக்கல் செய்யவுள்ள அடுத்தாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டில் ஏராளமான சலுகைகளை அள்ளி வீச திட்டம் தயாராகி வருகிறது.
சட்டமன்றத் தேர்தலை கருத்தில் கொண்டு இடைக்கால பட்ஜெட் அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
திமுக தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு அமைத்துள்ள நிலையில் இடைக்கால பட்ஜெட்டை தயாரிக்க இ.பி.எஸ். தீவிரம் காட்டி வருகிறார்.

தனிக்குழு நியமனம்
தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக டி.ஆர்.பாலு எம்.பி. தலைமையில் திமுக குழு அமைத்துள்ளது. அந்தக் குழுவின் முதற்கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டு வருகிறது.

மருத்துவம்
வழக்கமான தேர்தல் அறிக்கையாக இல்லாமல் இந்த முறை கல்வி மற்றும் மருத்துவத் துறைகளில் ஏராளமான அறிவிப்புகளும், வாக்குறுதிகளும் திமுக அளிக்கக்கூடும் எனத் தெரிகிறது. இதனை ஸ்மெல் செய்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தேர்தலுக்கு முன் தாக்கல் செய்யப்படும் இடைக்கால பட்ஜெட்டில் திமுகவுக்கு போட்டியாக எண்ணற்ற அறிவிப்புகளை வெளியிடும் திட்டத்தில் இருக்கிறார்.

அதிமுக ஆலோசனை
இதற்காக இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய விவகாரங்கள் குறித்து விரைவில் ஆலோசனைக் கூட்டங்களையும் நடத்த இருக்கிறார். சட்டமன்றத் தேர்தலில் இளைஞர்களின் வாக்குகளை ஈர்க்கும் வகையில் அவர்களை முன்னிறுத்தி இடைக்கால பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகள் வெளியிடவும் அதிமுக தரப்பில் ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

நிதி ஆதாரம்
இதனிடையே கூடுதல் நிதி கோருவதற்காக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் விரைவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை நேரில் சந்திப்பார் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும், டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் அதிமுக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு பற்றிய அறிவிப்பு வெளியாகும் எனத் தெரிகிறது.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications