2021ம் ஆண்டில் தமிழகத்தில் 23 அரசு விடுமுறை தினங்கள்! பெரும்பாலும் சன்டேயில் வரலை.. ஜாலிதான்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தில் அடுத்த ஆண்டு, அதாவது 2021ம் ஆண்டு 23 பொது விடுமுறை நாட்கள் என்று அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

மத்திய அரசின் உள்துறை விவகாரங்கள் அமைச்சகத்தின் 1957ஆம் ஆண்டு அறிக்கையின் படி, 1881 ஆம் ஆண்டு செலவாணி முறிச் சட்டத்தின் 25 ஆம் பிரிவில், விளக்கம் என்பதன் கீழ் பொது விடுமுறை நாட்களாக குறிப்பிடப்பட்ட ஞாயிற்றுக்கிழமைகளுடன், பின்வரும் நாட்களும் 2021 ஆம் ஆண்டிற்கான பொது விடுமுறை நாட்களாக கொள்ளப்படும்.
- ஜனவரி 1ம் தேதி வெள்ளிக்கிழமை, ஆங்கில புத்தாண்டு
- ஜனவரி 14ஆம் தேதி வியாழக்கிழமை, பொங்கல்
- ஜனவரி 15ஆம் தேதி வெள்ளிக்கிழமை, திருவள்ளுவர் தினம்
- ஜனவரி 16ஆம் தேதி சனிக்கிழமை, உழவர் திருநாள்
- ஜனவரி 26ம் தேதி செவ்வாய்க்கிழமை, குடியரசு தினம்
- ஏப்ரல் ஒன்றாம் தேதி, வியாழக்கிழமை, வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு
- ஏப்ரல் 2ஆம் தேதி வெள்ளிக்கிழமை, புனித வெள்ளி
- ஏப்ரல் 13-ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, தெலுங்கு வருட பிறப்பு
- ஏப்ரல் 14ஆம் தேதி புதன்கிழமை, தமிழ் புத்தாண்டு மற்றும் டாக்டர் அம்பேத்கர் பிறந்த தினம்
- ஏப்ரல் 25 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, மகாவீரர் ஜெயந்தி
- மே 1ம் தேதி சனிக்கிழமை மே தினம்
- மே 14-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, ரம்ஜான்
- ஜூலை 21 ஆம் தேதி புதன்கிழமை பக்ரீத்
- ஆகஸ்ட் 15ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை, சுதந்திர தினம்
- ஆகஸ்ட் 20-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, மொகரம்
- ஆகஸ்ட் 30-ஆம் தேதி திங்கட்கிழமை, கிருஷ்ண ஜெயந்தி
- செப்டம்பர் 10-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, விநாயகர் சதுர்த்தி
- அக்டோபர் 2ம் தேதி சனிக்கிழமை, காந்தி ஜெயந்தி
- அக்டோபர் 14ஆம் தேதி வியாழக்கிழமை, ஆயுத பூஜை
- அக்டோபர் 15-ஆம் தேதி வெள்ளிக்கிழமை, விஜயதசமி
- அக்டோபர் 19ஆம் தேதி செவ்வாய்க்கிழமை, மிலாதுநபி
- நவம்பர் 4 ஆம் தேதி வியாழக்கிழமை, தீபாவளி
- டிசம்பர் 25ஆம் தேதி, சனிக்கிழமை கிறிஸ்துமஸ்.

இதில் ஏப்ரல் 1ம் தேதி வங்கிகள் ஆண்டு கணக்கு முடிவு என்பது தமிழ்நாட்டில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும். இவ்வாறு தலைமைச் செயலாளர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
More From
-
இப்போ தெரிஞ்சு போயிரும்.. இன்னொரு எலக்சனுக்கு தயாராகும் தமிழகம்! சுறுசுறுப்பாய் தொடங்கிய ஏற்பாடுகள்! -
“வேதம் புதிது படத்தை இன்றைக்கு எடுத்தால் வர விடுவார்களா?” - பாரதிராஜா குறித்து நெகிழ்ந்த வன்னியரசு -
கிழிந்த நைட்டி.. குளிக்க வைத்தபோது கதறிய மகள்.. 93 வயது பாட்டி வரை தொடரும் காம மிருகங்களின் வக்கிரம் -
கப்பு முக்கியம் பிகிலு.. நேரா கொரியாவுக்கே சென்ற கீர்த்தனா.. HD Hyundai தூத்துக்குடிக்கு வருவது கன்பார்ம்! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
Joseph Vijay: கோட்டையில் முதல்வர் விஜய்யின் daily routine இதுதான்! சிலாகிக்கும் அமைச்சர்கள் -
Chennai Rain: இன்றும் இடி, மின்னலோடு கொட்டப் போகுது! சென்னையில் இருந்து குமரி வரைக்கும் மழை வெளுக்கும்! வானிலை அலர்ட் -
இருளில் தமிழகம்! வெளிச்சத்தில் கார்ப்பரேட்டுகளா? மின்வெட்டா? மின் திருட்டா? தவாக வேல்முருகன் கேள்வி -
உங்களுக்கு பெண் குழந்தை இருக்கா? செல்வமகள் சேமிப்பு திட்டத்தில் ரூ 71 லட்சம் வரை பெற என்ன வழி? -
இயக்குநர் இமயம் சரிந்தது.. பாரதிராஜாவின் 50 ஆண்டுகால திரைப்பயணத்தில் குவித்த விருதுகளின் முழு விவரம் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications