Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

என்னாது 2036இல் தமிழ்நாட்டில் பாஜக ஆட்சியா? திமுகவின் வடக்கு, தெற்கு யுத்தம் என்னவாகும்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: 2024 மக்களவைத் தேர்தல் களம் வடக்கு, தெற்கு என இரண்டாகப் பிரியும் எனக் கூறப்படும் கருத்தில் உண்மை இல்லை என்கிறார் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே.

இந்தியா கூட்டணி என்று காங்கிரஸ் தலைமையின் கீழ் பாஜகவுக்கு எதிராக 26 கட்சிகள் மேல் ஒன்றிணைந்தன. எனவே 2024 மக்களவைத் தேர்தல் மிக வலிமையான போட்டியாக இருக்கும் என்று அரசியல் வியூகர்கள் கருத்து தெரிவித்தனர்.

2024 Lok Sabha Elections: Will India Divide into North and South?

ஆனால், தேர்தல் நெருங்க நெருங்க மழை வெள்ளத்தில் இடிந்து விழும் மண் சுவர் போல் 'இந்தியா' கூட்டணி கரைந்து வருகிறது. அதைக் கண்கூடாகப் பார்க்க முடிகிறது.

'இந்தியா' கூட்டணிக்கு அட்சரம் போட்ட நிதிஷ்குமார் வெளியேறிவிட்டார். அவர் ஒன்று பெரிய வலுவாகக் கட்சியின் தேசிய தலைவர் இல்லை. அவரைக் காப்பாற்றிக் கொள்ள அவரது சொந்த மாநிலத்திலேயே அவர் தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறார்.

அடுத்து மம்தா பானர்ஜி. அவரது கட்சி மேற்கு வங்கத்தில் ஆளும் கட்சியாக உள்ளது. அவரும் இந்தியாவே ஏற்றுக் கொள்ளக் கூடிய தேசிய தலைவர் இல்லை. இந்த இருவரையும் தாண்டி சொன்னால் ஆம் ஆத்மி கட்சி. அதன் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால். இந்தக் கட்சிக்கு டெல்லியிலும் அதையொட்டி உள்ள பஞ்சாப் மாநிலத்திலும் செல்வாக்கு உள்ளது. கூடவே ஆளும் கட்சியாக உள்ளது.

2024 Lok Sabha Elections: Will India Divide into North and South?

ஆனால், இவரும் தேசிய அளவிலான தலைவர் இல்லை. இந்தியா கூட்டணியில் உள்ள மார்க்சிஸ்ட் கட்சி கேரளாவில் ஆளும் கட்சியாக உள்ளது. அதன் தலைவர்கள் யாரும் தேசிய அளவில் பொதுமக்களால் ஏற்றுக் கொள்ளப்படும் முகமாக இல்லை.

இன்னும் அழுத்திச் சொன்னால் 150 ஆண்டுகள் பழமையான காங்கிரஸ் கட்சியில் கூட இன்றைக்கு இந்தியா முழுமைக்கும் சேர்ந்து முன்வைக்கக் கூடிய ஒரு முகம் இல்லை.

'பாரத் ஜோடோ' அல்லது பாரத் ஜோடோ நியாய யாத்ரா என இந்தியா முழுமைக்கு ராகுல் காந்தி கால் கடுக்க நடைப்பயணம் மேற்கொண்டாலும் மோடியுடன் மோதக் கூடிய அளவுக்குச் செல்வாக்கு மிக்க தலைவராக அவரும் இல்லை.

இதைத்தாண்டி தமிழ்நாட்டில் உள்ள திமுக 'இந்தியா' கூட்டணியில் உள்ளது. அந்த ஒரு கட்சி மட்டும் தான் காங்கிரசுக்குப் பக்கபலமாக உள்ளது. ஆக, இந்தக் கூட்டணிக்கு வெளியே உள்ள ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, ஒடிசா முதல்வர் நவின் பட்நாயக் ஆகிய தலைவர்களின் ஆதரவையும் பாஜக திரட்டும் முயற்சியில் இறங்கி உள்ளது.

2024 Lok Sabha Elections: Will India Divide into North and South?

அப்படிப் பார்த்தால் இந்திய அளவில் 300 சீட்டுகளை உறுதியாக பாஜக வெல்லும் என்கிறார்கள். பாஜகவின் இலக்கு 400 ஆக உள்ளது.

இதனிடையே பாஜகவுக்கு எதிராகத் தென் இந்திய அளவில் ஆளும் கட்சி முதல்வர்கள் ஒன்று சேர்ந்துள்ளனர். South tax movement என்ற பதாகையின் கீழ் ஒருங்கிணைந்துள்ளனர்.

ஆக, இந்தத் தேர்தல் வடக்கு தெற்கு என இரண்டு திசைகளில் பயணிக்கும் என்று சொல்கிறார்கள். ஆனாலும் பாஜகதான் ஆளும் கட்சியாக மீண்டும் வரும் என்கிறார்கள்.

தேர்தல் வியூக வகுப்பாளரான பிரசாந்த் கிஷோர் பாஜகவுக்கு எதிரான இந்தியாவில் இன்றைக்கு வலிமையான கட்சி வேறு இல்லை என்கிறார். காங்கிரசை முற்றாகப் புனரமைக்க வேண்டும் என்கிறார்.

2024 Lok Sabha Elections: Will India Divide into North and South?

உண்மையில் வடக்கு, தெற்கு யுத்தம் இந்தத் தேர்தலில் பிரதிபலிக்குமா? என்றால் அது ஒரு மாயத் தோற்றம் என்கிறார் பத்திரிகையாளர் ரங்கராஜ் பாண்டே.

"புதுச்சேரியில் பாஜக கூட்டணிதான் ஆட்சியில் உள்ளது. கர்நாடகாவில் கடந்த 5 மாதங்கள் முன்பு வரை ஆட்சியில் பாஜக இருந்தது. தெலங்கானாவில் 14% வாக்குகளை பாஜக வாங்கி உள்ளது.

2024இல் பாஜக இதே தென் மாநிலங்களில் வாங்கப் போகிற வாக்கு சதவீதத்தை பொறுத்திருந்து பாருங்கள். அதன்பின்னர் வடமாநிலம், தென் மாநிலம் என்று பிரிந்து உள்ளது என்ற தோற்றம் எவ்வளவு தவறானது என்பது உங்களுக்கே புரியவரும்" என்கிறார் அவர்.

2024 Lok Sabha Elections: Will India Divide into North and South?

"இதற்கு முன்புகூட கேரளாவில் பாஜக இருந்தது இல்லை. தமிழ்நாட்டில் பாஜக இருந்ததில்லை. தெலங்கானா மற்றும் கர்நாடகாவில் வளர்ந்துள்ளது. இன்னும் சொல்லப் போனால் 2014இல் பாஜகவுக்குத் தமிழ்நாட்டில் 3 எம்.பிகள் இருந்துள்ளார்கள்.

ஏறக்குறைய 18% வாக்குகளை அந்தத் தேர்தலில் பாஜக பெற்றுள்ளது. இதைக் கருணாநிதி, ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் இருந்த காலகட்டத்தில் பாஜக பெற்றுள்ளது.

2001இல் பாஜகவுக்குத் தமிழ்நாட்டில் 4 எம்.எல்.ஏக்கள். 2014 மக்களவைத் தேர்தலில் திமுகவுக்கு ஒரு சீட்டு கூட கிடைக்கவில்லை. அதிமுக 37 இடங்களை வென்றது. அப்போது பாஜக ஒரு தொகுதியில் வென்றது. பாமக ஒரு தொகுதியில் வென்றது.

2024 Lok Sabha Elections: Will India Divide into North and South?

அன்புமணி ராமதாஸ் தர்மபுரியில் வென்றார். கன்னியாகுமரியில் பொன் ராதாகிருஷ்ணன் வென்றார். அப்போது திமுகவுக்கு ஒரு தொகுதிகூட கிடைக்க வில்லை. காங்கிரசுக்கு ஒரு சீட்டும் கிடைக்கவில்லை. ஆனால், பாஜக வென்றது.

அதே 2019இல் திமுக 24 இடங்களில் வென்றது. காங்கிரஸ் 9 இடங்களில் வென்றது. அதிமுக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வென்றது. ஆக, மாநிலக் கட்சிகளான அதிமுகவும் திமுகவும்தான் மாறி மாறி கீழே விழுந்து விழுந்து எழுந்துள்ளன. பாஜக தமிழ்நாட்டில் கால் பதிக்கவே இல்லை. அது இங்கு ஆளும் கட்சியாகவே இல்லை.

2024 Lok Sabha Elections: Will India Divide into North and South?

ஆனால், அதன் வளர்ச்சி முன்பைவிட பெரிய அளவில் உள்ளது. தமிழ்நாட்டைப் பொறுத்தளவில் பாஜகவுக்கு எது வந்தாலும் லாபம் தான். ஆகவே குஜராத் பாஜகவையும் உத்தரப் பிரதேச பாஜகவையும் தமிழ்நாட்டுடன் ஒப்பிடக்கூடாது.

2001இல் பாஜகவுக்கு 4 எம்.எல்.ஏக்கள். அதற்கு முன்னால் 96இல் பாஜகவுக்குத் தனி எம்.எல்.ஏ. இன்னும் பாஜக தமிழ்நாட்டில் வளரவே இல்லை என்று பேசிக்கொண்டிருந்தால் எப்படிச் சரியாக இருக்கும்?

400 சீட்டுகளைத் தாண்ட வேண்டும் என்பது பாஜகவின் இலக்காக உள்ளது. 10 கோடி உறுப்பினர்களைக் கொண்ட கட்சி என்கிறார்கள். உலகத்தில் மிகப் பெரிய கட்சி என்று பாஜக சொல்கிறது.

2024 Lok Sabha Elections: Will India Divide into North and South?

மூன்றாவது முறையாக வெற்றி பெற்று நேருவின் சாதனையை இந்திராகாந்தியின் சாதனையை முறியடிக்க முயற்சி செய்து வருகிறார்கள். அது பாஜகவின் விருப்பம். அதை நாம் குறை சொல்ல முடியாது.

தமிழ்நாட்டில் 2036இல் பாஜகதான் ஆட்சி அமைக்கப்போகிறது" என்று அடித்துக் கூறுகிறார்

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+