2024 நாடாளுமன்ற தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி? சட்டென வந்து விழுந்த கேள்வி.. ராமதாஸ் சொன்ன பதில்!
சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாமக யாருடன் கூட்டணி அமைக்கும் என பத்திரிகையாளர் கேட்ட கேள்விக்கு பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பதில் அளித்தார்.
சென்னை சேப்பாக்கத்தில் உள்ள பத்திகையாளர் மன்றத்தில் தமிழ்நாடு விஸ்வகர்மா சமுதாய மேம்பாட்டு ஆர்வலர்கள் சார்பில் தன்மான நாள் விழா நடைபெற்றது. இதில் சதுப்பேரி பண்டித மார்க்சகாய ஆச்சாரியார் குறித்து சீனந்தல் அடிகளார் -வே ஆனைமுத்து இருவரின் உரைத் தொகுப்பு நூல் வெளியிடப்பட்டது.
இந்த நூலை பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டார். அதன்பிறகு ராமதாஸ் நிகழ்ச்சியில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

சமூக நீதியற்ற தமிழகம்
சமநிலையற்ற, சமூக நீதியற்ற தமிழகத்தில் நாம் வாழ்ந்து வருகிறோம். சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகளுக்கு பிறகும் விஸ்வகர்மா சமுதாயத்துக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்ற அவலநிலை தான் உள்ளது. விஸ்கர்மா சமுதாயத்துக்கு இடஒதுக்கீட்டை அரசு வழங்க வேண்டும். அதற்கு நான் துணை நிற்பேன். அருந்ததியர்களுக்கு போராடி இடஒதுக்கீடு பெற்று தந்தவன் நான். இஸ்லாமிய சமுதாயத்துக்கும் 7 மாநாடு நடத்தி இடஒதுக்கீடு பெற்று கொடுத்தேன். இடஒதுக்கீடு வழங்காவிட்டால் போராட்டம் நடத்துவேன் என கூறியதால் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி இடஒதுக்கீடு வழங்கினார்'' என்றார்.

சாதிவாரி கணக்கெடுப்பு
இதையடுத்து பத்திரிகையாளர் சந்திப்பு நடந்தது. இதில் ராமதாஸ் கூறியதாவது: சாதிவாரி கணக்கெடுப்பை அரசு நடத்த வேண்டும். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்துவேன். சாதிவாரியான கணக்கெடுப்பு நடத்தி எல்லாருக்கும் தேவையானதை கொடுக்க வேண்டும். இதில் பிரச்சனை எதுவும் இருக்காது.

அநியாயத்திலும் அநியாயம்
தமிழக அரசு மாண்டஸ் புயலை நன்றாக கையாண்டார்கள். ஆன்லைன் ரம்மியை நான் தொடர்ந்து எதிர்த்து வருகிறேன். ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட சூதாட்ட தடை சட்ட மசோதாவுக்கு ஆளுநர் ஆர்என் ரவி கையெழுத்திடாதது என்பது அநியாயத்திலும் அநியாயம். '' என்றார்.

நாடாளுமன்ற கூட்டணி
இந்த வேளையில் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி தற்போதைய கூட்டணியில் தொடருமா? தனித்து போட்டியிடுமா? என பத்திரிகையாளர் கேள்வி எழுப்பினார். இதற்கு ராமதாஸ், ‛‛இது இப்போது கேட்கப்பட வேண்டிய கேள்வி இல்லை. தேர்தலுக்கு 3 அல்லது 4 மாதங்கள் இருக்கும்போது கேட்கப்பட வேண்டிய கேள்வி'' என்றார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications