இழுத்து போர்த்தி கொண்டு வந்த வளர்மதி.. 21 வயசுதான்.. சிக்கிய பிறகு அம்பலமான கதை.. ஷாக்!
சிறைக்குள் கஞ்சா கொண்டு வந்த 21 வயது பெண் கைதானார்
சென்னை: இழுத்து போர்த்திக் கொண்டு, ஜெயிலுக்கு வந்த 21 வயது வளர்மதியை பார்த்தவுடன் யாருக்கும் எந்தவித சந்தேகமும் வரவில்லை.. அதற்கு பிறகு வசமாக போலீசில் சிக்கி கொண்டார்.
சென்னை பூவிருந்தவல்லி அடுத்த கரையான்சாவடியில் தனி சப் ஜெயில் அமைந்துள்ளது... சென்னை மட்டுமல்லாமல், பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற குற்றசம்பவங்களில் கைது செய்யப்பட்டவர்கள் இந்த ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

அந்த வகையில், கார்த்திக் என்பவரும் அடைக்கப்பட்டுள்ளார்.. அவர் எண்ணூரை சேர்ந்த ரவுடி ஆவார்.. கொலை வழக்கு சம்பந்தமாக கைதாகி ஜெயிலில் இருக்கிறார்.. இவரை பார்ப்பதற்காக வளர்மதி என்ற 21 வயது பெண் ஜெயிலுக்கு வந்தார்.. இவர் கார்த்திக்கின் உறவுகார பெண் என்று கூறப்படுகிறது.
கைதியை பார்ப்பதற்காக வளர்மதி, பிஸ்கட், பழம் என ஒரு பையில் போட்டு கொண்டு வந்திருந்தார்.. வழக்கமாக போலீசார் எந்த பொருட்களை சிறைக்குள் கொண்டு சென்றாலும் அதை பரிசோதித்த பின்னரே உள்ளே அனுப்புவது வழக்கம்.
அந்த வகையில் யதார்த்தமாகத்தான் வளர்மதியின் கூடையை செக் செய்தனர்.. அப்போது, அவர் கொண்டு வந்திருந்த பிஸ்கெட் பார்ப்பதற்கே வித்தியாசமாக இருந்தது.. அப்போதுதான் அதை உற்று பார்த்தபோது, ஒரு ஓட்டை தெரிந்தது.. அந்த ஓட்டைக்குள் பார்த்தால் கஞ்சாவை செருகி வைத்து எடுத்து வந்துள்ளார் வளர்மதி..
எப்படியும் மேலோட்டமாக பொருட்களை பார்த்துவிட்டு, உள்ளே அனுப்பிவிடுவார்கள் என்று நம்பிக் கொண்டிருந்த வளர்மதிக்கு, தூக்கி வாரிப்போட்டது. பிறகு வசமாக சிக்கி கொண்ட வளர்மதியை ஜெயில் போலீசார் பூவிருந்தவல்லி போலீசாரிடம் ஒப்படைத்தனர். அப்போது வளர்மதியிடம் அதிரடியாக விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
கஞ்சாவை கார்த்திக்கு தருவதற்காகத்தான் அவ்வாறு செய்ததாகவும், கொண்டு வந்தது 50 கிராம் கஞ்சா என்றும் கூறினார். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.. ஜெயில் கைதியை பார்க்க வந்த இளம்பெண்ணும் கைதாகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications