Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலையில் 100% நிரம்பிய 247 ஏரிகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கனமழை காரணமாக காஞ்சிபுரம் செங்கல்பட்டு திருவண்ணாமலையில் 247 ஏரிகள் 100% நிரம்பியுள்ளன.

கனமழை காரணமாக, திருவண்ணாமலை காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள ஏரிகள் உள்ளிட்ட நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

247 lakes in Kanchipuram Chengalpattu and Thiruvannamalai are 100% full

அந்த வகையில், காஞ்சிபுரத்தில் உள்ள 129 ஏரிகளும், செங்கல்பட்டில் உள்ள 75 ஏரிகளும் திருவண்ணாமலை மாவட்டத்தில் 43 ஏரிகளும் அதன் முழு கொள்ளவை எட்டி நிரம்பியுள்ளன.

ஏரிகள் கொள்ளளவு விபரம்
பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகளின் நீர்மட்டம் நிலவரத்தை இப்போது பார்ப்போம்.

காஞ்சிபுரம் மாவட்டம் - 129 ஏரிகள் 100 சதவிகிதமும், 84 ஏரிகள் 75 சதவிகிதமும், 61 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன
செங்கல்பட்டு மாவட்டம - 75 ஏரிகள் 100 சதவிகிதமும், 6
72 ஏரிகள் 75 சதவிகிதமும்,116 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன.

திருவண்ணாமலை மாவட்டம - 43 ஏரிகள் 100 சதவிகிதமும், 11 ஏரிகள் 75 சதவிகிதமும்,22 ஏரிகள் 50 சதவிகிதமும் நிரம்பியுள்ளன. திருவண்ணாமலை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் 247 ஏரிகள் 100 சதவிகிதமும், 175 ஏரிகள் 75 சதவிகிதமும், 211 ஏரிகள் 50 சதவிகிதமும் மீதமுள்ள 236 ஏரிகள் 25சதவிகிதத்துக்கும் குறைவாக நிரம்பியுள்ளன. இந்த மொத்த ஏரிகளின் எண்ணிக்கை 1022 ஆகும்.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் செம்பரம்பாக்கம் ஏரிகளில் நீர்மட்டம் கிட்டத்தட்ட முழு அளவை எட்டும் நிலை உள்ளது. புழல் ஏரியில் இருந்து 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

புழல் ஏரியின் மொத்த நீர் மட்டம்: 21.20 அடி. இதில் தற்போது 19.30 அடியாக தண்ணீர் உயர்ந்துள்ளது. தற்போது விநாடிக்கு 500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது
ஏரி கரையோரப் பகுதி மக்கள் மேடான இடத்திற்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய நீர் ஆதாரங்களில் ஒன்றான செம்பரம்பாக்கம் ஏரியின் முழு கொள்ளளவான 3645 மில்லியன் கன அடியில் தற்போது 2935 மில்லியன் கன அடியை எட்டியுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரிக்கு வினாடிக்கு 600 கனஅடி வீதம் மழைநீர் பிடிப்பு பகுதியில் இருந்து நீர்வரத்து வருகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+