நீங்கல்லாம் பூமர் அங்கிள்.. டிடிஎப் வாசன் எங்க கிங்.. உறுமும் 2கே கிட்ஸ்! அது என்ன பூமர் தெரியுமா?
சென்னை : பைக் ரைடர் மற்றும் யூட்யூப் பிரபலமான டிடிஎஃப் வாசன் குறித்த விவாதங்கள் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களை ஆக்கிரமித்துள்ள நிலையில் அவருக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில், அவரை விமர்சிக்கும் 90'ஸ் கிட்ஸ்களை சரிங்க பூமர் அங்கிள் என 2கே கிட்ஸ்கள் கலாய்த்து வருகின்றனர்.
Recommended Video
கோவையைச் சேர்ந்த பிரபல பைக் ஆர்வலரும் யூட்யூபருமான டிடிஎஃப் வாசல் நடத்திய ரசிகர்கள் சந்திப்பு குறித்த பேச்சு தான் தற்போது சமூக வலைதளங்கள் மட்டுமல்லாது அனைத்து ஊடகங்களையும் ஆக்கிரமித்துள்ளது.
நடிகர்களை விட சாதாரண ஒரு பைக் ரைடருக்கு ஏன் இவ்வளவு கூட்டம் என்பது குறித்தான விவாதங்கள் எழுந்துள்ளது. எதற்காக இளைஞர்கள் குறிப்பாக 15 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட மாணவர்கள் உள்ளிட்ட பலரும் அவருக்கு ஆதரவாக இருப்பதற்கு காரணம் என்ன என்பது குறித்தும் விவாதிக்கப்பட்டு வருகிறது.

டிடிஎஃப் வாசன்
இந்நிலையில் சமூக வலைதளங்களில் டிடிஎஃப் வாசனுக்கு எதிராக கருத்துப் பதிவிடுபவர்களை குறி வைத்து ஒரு சில சமூக வலைதளவாசிகள் மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். அவ்வளவு வெறித்தனமான பற்றுதலா என்று யோசிக்க வைக்கும் அளவுக்கு அவர்களது வலைதள தாக்குதல் இருக்கிறது குறிப்பாக டிடிஎஃப் வாசனுக்கு எதிராக கமெண்ட் செய்யும் பலரையும் பூமர் அங்கிள் என விமர்சிக்கின்றனர். தற்போது மட்டுமல்ல கடந்த சில நாட்களாகவே 1990களில் பிறந்த 90ஸ் கிட்ஸ்களை பூமர் அங்கிள் என கூறி வருகின்றனர்.

நீங்க பூமர் அங்கிளா?
கடந்த சில நாட்களுக்கு முன்பு இளம் தலைமுறையினரை புள்ளிங்கோ என விமர்சித்த போது அவர்கள் திடீரென பயன்படுத்திய வார்த்தை தான் பூமர் அங்கிள் பூமர் அங்கிள் என்றால் என்ன அதன் சுவாரஸ்ய பின்னணி என்ன என்பது குறித்து பார்க்கலாம். வாசன் ஆதரவாளர்களை பொருத்தவரை அவர்களுக்கு மட்டுமே அனைத்தும் தெரியும் மற்றவர்கள் எல்லாம் கற்காலத்தில் வந்தது போலவே நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். யார் எது சொன்னாலும் நீங்கள் பூமர் அங்கிளா?, ஓகே பூமர், ஓகே பூமர் அங்கிள் என்ற வார்த்தைகளை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். உண்மையில் பூமர் அங்கிள் என்ற சொல் எங்கிருந்து வந்தது

காரணம் என்ன?
இதற்கெல்லாம் மூல காரணம் பரிதாபங்கள் கோபி சுதாகர் தான். தமிழகத்தில் முதல் முறையாக இந்த சொல்லை அவர்கள் தான் பிரபலப்படுத்தினர். தங்களது youtube சேனல் வெளியிட்ட வீடியோ ஒன்றில் பூமர் அங்கிள் என்ற வார்த்தையை அடிக்கடி பயன்படுத்தியதைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் மீம்ஸ், ட்ரோல் என அனைத்திலும் இந்த பூமர் அங்கிள் என்ற வார்த்தை அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து 1983ம் ஆண்டு முதல் 1996 வரை பிறந்த 90ஸ் கிட்ஸ்களை கலாய்க்கும் வகையில், 1997க்கு பிறகு பிறந்த "புள்ளிங்கோ" என்று செல்லமாக அழைக்கப்படும் 2கே கிட்ஸ் இந்த வார்த்தையை பயன்படுத்தத் தொடங்கினர்.

பின்னணி என்ன?
நாங்களெல்லாம் அந்த காலத்தில எப்படி இருந்தோம் தெரியுமா? என்று பழமை பேசி திரிபவர்களை தான் பூமர் அங்கிள் என சொல்வார்கள். அவர்கள் 50 முதல் 70க்கு வயதுக்குட்பட்ட தாத்தாவாக இருக்கலாம், 30 முதல் 40 வயது உட்பட்ட சித்தப்பாவாக இருக்கலாம், அல்லது 1990ல் பிறந்த அண்ணனாக கூட இருக்கலாம் அவர்கள் அனைவரையும் ஐயோ ஆரம்பிச்சுட்டார் என ஓடி ஒளியும் இன்றைய தலைமுறைதான் இந்த வார்த்தையை பயன்படுத்தி வருகின்றனர். இது வெளிநாடுகளில் ஏற்கனவே பிரபலமான வார்த்தைதான். சமீபகாலமாகத்தான் தமிழகத்தில் அது பிரபலமாகியுள்ளது.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications