மிஸ் பண்ணிடாதீங்க.. ரூ.1000 உரிமைத் தொகை வேண்டுமா? இதான் லாஸ்ட் சான்ஸ் - இன்று முதல் 2ம் கட்ட முகாம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் தமிழ்நாட்டில் தொடங்கப்படும் ரூ.1000 மகளிர் உரிமைத் தொகை திட்டத்துக்கான 2 ஆம் கட்ட முகாம் இன்று தொடங்குகிறது.

தமிழ்நாடு அரசின் மகளிர் உரிமைத் தொகை முகாம் அண்ணா பிறந்தநாளான செப்டம்பர் 15 முதல் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு கடந்த மாதம் இதனை பெற தகுதியுடைய பெண்கள் யார், தகுதியற்றவர்கள் யார் என அறிவித்து முகாம்களை நடத்தியது.

2nd phase of the Rs.1000 Magalir Urimai thogai scheme camp to be launched today

முதல் கட்ட முகாம்கள் நேற்றுடன் நிறைவடைந்தது, இதில் 80 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவை இணையத்திலும் பதிவேற்றம் செய்யப்பட்டன. இந்த நிலையில் இன்று 14 ஆயிரத்துக்கும் அதிகமான இடங்களில் 2 ஆம் கட்ட முகாம் நடைபெற உள்ளது. குறிப்பாக நகர்புறங்களை மையமாக வைத்து இந்த முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளன.

தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பின்படி, குடும்பத்தில் 21 வயது நிரம்பிய பெண், ரூ.2.5 லட்சத்திற்குக் கீழ் வருமானம் ஈட்டும் குடும்பங்கள், 5 ஏக்கருக்குக் குறைவாக நன்செய் நிலம் அல்லது 10 ஏக்கருக்குக் குறைவாக புன்செய் நிலம் வைத்துள்ள குடும்பங்களின் பெண்கள் இதற்கு தகுதி உடையவர்கள்.

2 ஆம் கட்ட முகாம்களில் விண்ணப்பிக்கும் நபர்களுக்கு டோக்கன் மற்றும் விண்ணங்கள் விநியோகம் செய்யப்பட்டு உள்ளன. நியாய விலைக் கடைகளில் விடுபட்டவர்களுக்கும் வழங்கப்படுகின்றன. இதன் மூலம் ஆகஸ்டு 16 ஆம் தேதிக்குள் ஒரு கோடிக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பதிவேற்றம் செய்யப்படும்.

குடும்ப அட்டையில் ஆண் குடும்பத் தலைவராக இருந்தால் அவரது மனைவி குடும்பத் தலைவியாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும். திருமணமாகாத பெண்கள், கைம்பெண்கள் மற்றும் திருநங்கைகள் தலைமையில் குடும்பங்கள் இருந்தால், அவர்களும் குடும்பத் தலைவிகளாக கருதப்பட்டு உரிமைத்தொகை வழங்கப்படும் என அரசு அறிவித்து உள்ளது.

ஆண்டிற்கு வீட்டு உபயோகத்துக்கு 3,600 யூனிட்டிற்கும் குறைவாக மின்சாரம் பயன்படுத்தும் குடும்பங்கள் இதை பெறலாம். ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே பயன் பெற முடியும் எனவும், ஒரு குடும்பத்தில் தகுதியுடையவர்கள், ஒருவருக்கு மேல் இருந்தால், ஒரே ஒரு பயனாளியை குடும்ப உறுப்பினர்கள் முடிவு செய்து கொள்ளலாம் என்றும் தெரிவித்து இருக்கிறது.

2nd phase of the Rs.1000 Magalir Urimai thogai scheme camp to be launched today

அதேபோல், "குடும்பத்தில் ஆண்டு வருமானம் ரூபாய் 2.5 லட்சத்துக்கு மேல் ஈட்டி வருமானவரி கணக்கு தாக்கல் செய்பவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள், மாநில, மத்திய அரசு ஊழியர்கள், பொதுத்துறை நிறுவனங்கள், வங்கிகளின் ஊழியர்கள், வாரியங்கள், உள்ளாட்சி அமைப்புகள், கூட்டுறவு அமைப்புகளின் ஊழியர்கள்" இந்த உரிமைத் தொகையை பெற முடியாது.

ஊராட்சி வார்டு கவுன்சிலர்கள் தவிர்த்த உள்ளாட்சி பிரதிநிதிகள், சொந்த பயன்பாட்டுக்கு கார், ஜீப், டிராக்டர், கனரக வாகனம் போன்ற நான்கு சக்கர வாகனங்கள் வைத்துள்ளவர்கள், ஆண்டுக்கு 50 லட்சத்திற்கும் மேல் ஆண்டு விற்பனை செய்து ஜிஎஸ்டி செலுத்தும் தொழில் நிறுவன உரிமையாளர்கள், ஏற்கனவே முதியோர் ஓய்வூதியம் (OAP), விதவை ஓய்வூதியம், அமைப்பு சாராத் தொழிலாளர் நலவாரிய ஓய்வூதியம் போன்ற சமூகப் பாதுகாப்புத் திட்ட ஓய்வூதியம் மற்றும் அரசிடமிருந்து ஓய்வூதியம் பெறும் குடும்பங்கள் இதனை பெற முடியாது என அரசு அறிவித்தது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+