கொரோனா.. தமிழ்நாட்டில் இன்று 3367 பேர் பாதிப்பு.. சென்னையில் தினசரி பாதிப்பு 200க்கும் கீழ் சென்றது
சென்னை: தமிழ்நாட்டில் இன்று 3367 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையில் தினசரி பாதிப்பு 200க்கும் கீழ் சென்றுள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த 2 வாரமாக கொரோனா கேஸ்கள் வேகமாக குறைந்து வருகிறது. ஒருநாள் பாதிப்பு கடந்த 4 நாட்களாக தொடர்ச்சியாக 4 ஆயிரத்திற்கும் கீழ்தான் பதிவாகி வருகிறது.
அதேபோல் இன்னொரு பக்கம் தினசரி பலி எண்ணிக்கையும் 100க்கும் கீழ்தான் கடந்த ஒரு வாரமாக பதிவாகி வருகிறது. இரண்டாம் அலை பாதிப்பு தமிழ்நாட்டில் பெரிய அளவில் சரிந்துள்ளது.

கொரோனா
தமிழ்நாட்டில் இன்று 3367 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று கொரோனா காரணமாக 64 பேர் பலியாகி உள்ளனர்.தமிழ்நாட்டில் இதுவரை 33196 பேர் கொரோனா காரணமாக பலியாகி உள்ளனர்.

குணம்
தமிழ்நாட்டில் இன்று 3704 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் இதுவரை 24,39,576 பேர் கொரோனாவில் இருந்து குணமாகி உள்ளனர். தமிழ்நாட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளின் எண்ணிக்கை 34,076 ஆக உள்ளது.

சென்னை
சென்னையில் இன்று 196 கொரோனா கேஸ்கள் பதிவாகி உள்ளது. 1654 பேர் சென்னையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். கோவையில் 385 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 3651 பேர் கோவையில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர். ஈரோட்டில் 288 பேருக்கு இன்று கொரோனா ஏற்பட்டுள்ளது. 3647 பேர் ஈரோட்டில் சிகிச்சை பெறும் நோயாளிகளாக உள்ளனர்.

டெஸ்ட்
தமிழ்நாட்டில் மொத்தமாக இதுவரை 25,06,848 பேருக்கு கொரோனா ஏற்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,51,844 மாதிரிகள் கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இன்று 1,50,609 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை 3,30,89,776 பேருக்கு கொரோனா சோதனை செய்யப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications