Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒரே நாளில்.. அரசு ஊழியர்களின் மனதை குளிர்வித்த முதல்வர் ஸ்டாலின்.. இவ்வளவு கோடியா? சூப்பர்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று தமிழ்நாட்டை சேர்ந்த பெரும்பாலான அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அளிக்கப்பட்டன.

தமிழ்நாட்டில் சமீபத்தில்தான் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டது. 38 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் பணவீக்கம் உயர்ந்து கொண்டே இருக்கும். பணவீக்கம் காரணமாக பொருட்களின் விலை உயரும். இந்த விலை உயர்வை சமாளிக்க மத்திய, மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்படும்.

340 transport workers of South Tamil Nadu districts got Rs. 111 crore worth of retirement benefits

இதைத்தான் அகவிலைப்படி உயர்வு என்பார்கள். வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும். ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும். இந்த அகவிலைப்படி பொதுவாக 3 - 6 சதவிகிதம் உயர்த்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த அதிரடி: இந்த நிலையில் நேற்று தென் தமிழ்நாட்டை சேர்ந்த பெரும்பாலான அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் அளிக்கப்பட்டன. திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு இந்த பலன்கள் அளிக்கப்பட்டது.

340 போக்குவரத்துத் தொழிலாளர்களுக்கு ரூ. 111 கோடி மதிப்புள்ள ஓய்வூதிய பலன்கள் நேற்று வழங்கப்பட்டது. திருநெல்வேலியில் 98 ஊழியர்கள் 18 வாரிசுகள், தூத்துக்குடியில் 40 ஊழியர்கள், 8 வாரிசுகள், நாகர்கோவிலில் 159 ஊழியர்கள், 17 வாரிசுகளுக்கு ரூ. 111 கோடி மதிப்புள்ள ஓய்வூதிய பலன்கள் நேற்று வழங்கப்பட்டது

பழைய ஓய்வூதிய திட்டம்: அரசு ஊழியர்களை இந்த அறிவிப்பு மகிழ்ச்சியில் உள்ளாக்கிய நிலையில், பழைய ஓய்வூதிய திட்டமும் அமலுக்கு வருமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. கடந்த ஆண்டு நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் திமுக கொடுத்த பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றி உள்ளது. உதாரணமாக பெண்களுக்கு இலவச பேருந்து பயணம், பால் விலை குறைப்பு நிறைவேற்றப்பட்டுவிட்டது.

இன்னொரு பக்கம் குடும்ப தலைவிக்கு மாதம் ரூபாய் 1000 கொடுக்கும் திட்டம் கொண்டு வரப்பட உள்ளது. பெண்களுக்கு மாதம் ரூ1,000 உரிமைத் தொகை வழங்கும் திட்டம் செப்டம்பர் 15-ந் தேதி அண்ணா பிறந்த நாள் முதல் வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து உள்ளது.

அதே சமயம் இன்னும் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. உதாரணமாக பெட்ரோல் விலை குறைப்பு, பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட வாக்குறுதிகள் இன்னும் நிறைவேற்றப்படவில்லை

அரசு ஊழியர்கள் இடையே பழைய ஓய்வூதிய திட்டம் மிக முக்கிய கோரிக்கையாக இருந்து வந்தது. ஆனால் இதை செயல்படுத்த முடியாது என்று முன்பு நிதி அமைச்சராக இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சட்டசபையிலேயே தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில்தான் புது நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ்நாட்டில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்று பல்வேறு தொழிற் சங்கங்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றன

340 transport workers of South Tamil Nadu districts got Rs. 111 crore worth of retirement benefits

பழைய ஓய்வூதிய திட்டம் பற்றி தி இந்து ஊடகத்திற்கு அவர் அளித்த பேட்டியில், இது தொடர்பாக மத்திய அரசு குழு அமைத்துள்ளது. அரசு ஊழியர்களின் நலனில் மாநில அரசு எப்போதும் கவனமாக இருக்கும்.இது தொடர்பாக பலர் எங்களிடம் கோரிக்கை வைத்து வருகின்றனர். தேவையான நடவடிக்கையை நாங்கள் விரைவில் எடுப்போம் என்று தங்கம் தென்னரசு கூறி உள்ளார்.

அமைச்சர் பிடிஆர் போல பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வர மாட்டோம் என்று மறுக்காமல் தங்கம் தென்னரசு அளித்த பதிலால், நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை கொண்டு வருகிறாரோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+