சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஆரம்பத்திலிருந்தே அவசரம்.. அலட்சியம்.. 10வது வகுப்பு தேர்வில் ஏன் இந்த முரண்டு.. ஸ்டாலின் விளாசல்

10ம் வகுப்பு பொதுத்தேர்வினை தள்ளி வைக்க ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: ஆரம்பத்துல இருந்தே அதிமுக அரசுக்கு அவசரம்.. அலட்சியம்.. அதுபோலவே 10-ம் வகுப்பு தேர்விலும் முன்னுக்கு பின் முரணான நிலைப்பாடு... பத்தாம் வகுப்பு பிள்ளைகளால் எப்படி படிச்சிட்டே இருக்க முடியும்? உலகமே கொரோனாவால் முடங்கி கிடக்கும்போது, பிள்ளைகளால் படிக்க முடியுமா? அப்படி படித்தாலும் ஆன்லைன் வகுப்புகள் எல்லா பிள்ளைகளுக்கும் கிடைப்பது சாத்தியமா?" என்று திமுக தலைவர் கேள்வி மேல் கேள்வி எழுப்பி உள்ளார்.

ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்ட 10-ம் வகுப்பு தேர்வு, பிளஸ் 1 தேர்வில் 3 தேர்வுகள் ஜூன் 1ம் தேதி முதல் நடக்கும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அறிவித்து இருந்தார்... இது பொதுமக்களுக்கு பெருத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது தமிழகத்தில் தொற்று பாதிப்பு இன்னமும் இருக்கிறது.. ஊரடங்கும் நீட்டிக்கப்பட்டுள்ளது.. இந்த நேரத்தில் தேர்வை வைத்தால், ஊரடங்கினால் வெளியூர் சென்றிருக்கும் மாணவர்களால் எழுத முடியாத சூழல் உள்ளது.. முக்கியமாக கிராம மலைப்பகுதிகளை சேர்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுத வர முடியாத சூழல் உள்ளது. அதனால், தேர்வை ஒத்தி வைக்க வேண்டும் என்று கல்வியாளர்கள், அரசியல் கட்சித்தலைவர் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.

 சூரியனில் ஏற்படும் திடீர் சூரியனில் ஏற்படும் திடீர் "லாக்டவுன்".. நிலநடுக்கம் முதல் எரிமலை வெடிப்பு வரை.. எச்சரிக்கும் நாசா!

 அறிக்கை

அறிக்கை

இதையடுத்து, பள்ளிக்கல்வித்துறையும் இது சம்பந்தமாக ஆலோசனையை இன்று நடத்துகிறது.. இந்த சமயத்தில் திமுக தலைவர் முக ஸ்டாலினும் ஒரு அறிக்கை வெளியிட்டு, இதே வேண்டுகோளை வலியுறுத்தி உள்ளார். அதில் அதிமுக அரசு எல்லா விஷயத்தை போலவே பிள்ளைகள் விஷயத்திலும் அவசரப்படுகிறது என்று பகிரங்கமாகவே குற்றஞ்சாட்டி உள்ளார். அந்த அறிக்கை இதுதான்:

 மாணவர்கள்

மாணவர்கள்

"நான்காம் கட்ட ஊரடங்கு மே 31 வரை தொடர்கிற நிலையில், ஐந்தாம் கட்ட ஊரடங்கு குறித்து உறுதியாக எதையும் இப்போது சொல்ல முடியாத சூழலில், ஜூன் 1 ஆம் நாள் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு தொடங்கும் என அறிவிக்கும் தமிழக அரசு பள்ளிக்கல்வித் துறை அமைச்சரின் பிடிவாதமான நிலைப்பாடு, மாணவர்கள் மீதான அக்கறையற்ற தன்மையையே காட்டுகிறது. தமிழ்நாட்டில் நோய்த் தொற்று எண்ணிக்கை குறித்த குளறுபடிகளும், பரிசோதனை எண்ணிக்கை குறித்த வெளிப்படையற்ற குழப்பமும் நீடிக்கின்ற நிலையிலும், நாளுக்கு நாள் நோய்த் தொற்று அதிகரித்து வருவதைத் தடுக்க முடியவில்லை.

 அலட்சியம்

அலட்சியம்

11 ஆயிரம் பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்; மகாராஷ்டிடிரா, குஜராத் மாநிலங்களுக்கு அடுத்து மூன்றாவது மாநிலம் தமிழ்நாடு என்ற மோசமான இடத்துக்கு வந்துவிட்டது. இதில் பச்சிளம் குழந்தைகளும் உண்டு என்கிற பரிதாபத்தில், பொதுத்தேர்வு எழுத வரும் மாணவர்களுக்கு நோய்த் தொற்று ஏற்படாது என்ற அடிப்படையிலேயே தேர்வுகளை நடத்துவதாகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருப்பதில் அலட்சியமும் அகங்காரமுமே தெரிகிறது.

அவசரம்

அவசரம்

பெற்றோரும் மாணவர்களும் பொதுத்தேர்வு வேண்டாம் எனச் சொல்லவில்லை. நோய்த்தொற்றும் ஊரடங்கும் நீடிக்கின்ற பதற்றம் நிறைந்த காலத்தில் அவசரப்பட்டு நடத்த வேண்டாம் என்பதைத்தான் வலியுறுத்துகிறார்கள். அரசாங்கமோ மாணவர்களுக்கு ஆன்லைன் வகுப்பு, வெளியூர் சென்ற மாணவர்கள் திரும்பி வர 'இ-பாஸ்' என நெருக்கடியை உருவாக்கி, பெற்றோரையும் மாணவரையும் அச்சுறுத்துகிறது. இதனால் அவர்கள் பெரும் மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளார்கள்.

 புரிந்து கொள்ளுங்கள்

புரிந்து கொள்ளுங்கள்

வார இதழ் ஒன்றில், பத்தாம் வகுப்பு மாணவி ஒருவரின் தாயான கே.ஏ.பத்மஜா என்பவர், தமிழ்நாட்டின் முதல்வருக்கு எழுதியுள்ள கடிதம் வெளியாகியுள்ளது. அதில், கொஞ்சம் எங்கள் மனவலியைப் புரிந்துகொள்ளுங்கள் எனும் பொருளில் அவர் எழுதியிருப்பவற்றில் முக்கியமான சிலவற்றை மட்டும் செங்கோட்டையனுக்குச் சுட்டிக்காட்டிட விரும்புகிறேன். "புதிய பாடத்திட்டம், ஆங்கிலம் முதல் தாள், இரண்டாம் தாள் எனத் தனித்தனியாய் கிடையாது. ஒரே தேர்வாக நூறு மதிப்பெண்களுக்கு இருக்கும்; கூடுதல் வகுப்பு வைக்கக்கூடாது; கேள்வித்தாள் குறித்த தெளிவற்ற அறிக்கைகள்; எந்த விதத்திலும் புரிந்துகொள்ள முடியாத வரலாற்றுப் பாடச் சொற்கள்.

குழப்பங்கள்

குழப்பங்கள்

இப்படி வருடம் முழுவதும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் பெற்றோருக்கும் கொடுத்த குழப்பங்களும் மன உளைச்சல்களுக்கும் அளவே கிடையாது. இருந்தும் எல்லாவற்றையும் நாங்கள் மவுனமாக ஏற்றுக்கொண்டோம். எங்கள் பிள்ளைகளின் பத்தாம் வகுப்புத் தேர்வு மட்டுமே எங்களுக்குக் காரணமாக இருந்தது.இப்போது நாடே, உலகமே முடங்கிக் கிடக்கும் இந்த நாட்களில் பத்தாம் வகுப்பு பிள்ளைகள் மட்டும் எப்படிப் படித்துக் கொண்டு இருப்பர்? ஆன்லைன் வகுப்புகள் எல்லாப் பிள்ளைகளுக்கும் கிடைப்பது எப்படி சாத்தியம்?

 விரும்பிய பாடம்

விரும்பிய பாடம்

பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் அவசியம் என்று மட்டும் பேசுகிறீர்கள்? ஏன், கொள்ளை நோய் காலத்தில் தேர்வின்றிக் கொடுக்கப்பட்ட சான்றிதழ் என்ற ஒன்றை நீங்கள் பிள்ளைகளுக்கு வழங்கக்கூடாது? அவசியம் இருக்குமெனில், விரும்பிய பாடம் படிக்க அந்தக் கல்வி மையமே ஒரு நுழைவுத் தேர்வு வைத்துக் கொள்ளுங்கள் என்று ஒரு சலுகை கொடுக்கலாமே? தயவுசெய்து, நீங்கள் கரோனாவில் சாவும் மனிதர்களின் உயிரைக் கவனியுங்கள். குடும்பங்களில் இருக்கும் வறுமையை முற்றும் நீக்க வழிவகையை நடைமுறைப்படுத்துங்கள். கரோனா நோய்த்தொற்று இனி இருக்காது என்ற நிலையை உருவாக்குங்கள்.

 சகஜ நிலை

சகஜ நிலை

அதற்குப் பிறகு நாங்கள் எங்கள் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புகிறோம். சகஜநிலை வந்த பிறகு ஒரு மூன்று வாரம் பாடங்களைத் திருப்புதலுக்குக் கொஞ்சம் அவகாசம் கொடுங்கள். அதற்குப் பிறகு தேர்வு வையுங்கள்" எனத் தெரிவித்திருக்கிறார். ஒரு தாயின் தவிப்பாகவும் உள்ளக்குமுறலாகவும், பெற்றோரின் அக்கறையாகவும் ஆதங்கமாகவும் உள்ள இந்தக் கடிதத்தின் வரிகள்தான், பத்தாம் வகுப்பு படிக்கும் தமிழக மாணவ மாணவியருடைய பெற்றோரின் மனநிலையாக உள்ளது. அதனைப் பற்றிச் சிறிதும் கவலைப்படாமல், ஜூன் 1-ம் தேதி தேர்வு நடத்தப்படும் என்றும், ஆசிரியர்களுக்குப் பாதுகாப்புக் கருவிகள் வழங்கப்படும் என்றும் பள்ளிக்கல்வி அமைச்சர் அழிச்சாட்டியமாக அறிவித்துக் கொண்டே இருக்கிறார்.

 எதிர்கால நலன்

எதிர்கால நலன்

தமிழகத்தில் உள்ள கல்வியாளர்கள் பலரும், ஊரடங்கு காலம் நிறைவடைந்த பிறகு, நோய்த்தொற்று கட்டுப்படுத்தப்பட்ட பின்னர், பள்ளிகள் திறக்கப்பட்டு, இரண்டு அல்லது மூன்று வாரங்கள் வழக்கமான முறையில் வகுப்புகள் நடைபெற்று, அதற்குப்பின் பொதுத்தேர்வு நடத்துவதே மாணவர்களின் மன, உடல்நலனுக்கும் எதிர்கால நலனுக்கும் உகந்தது என்பதைத் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். கரோனா நோய்த்தொற்று பரவலைத் தடுப்பதில் ஆரம்பத்திலிருந்தே அலட்சியம் காட்டி வருவதுடன், முன்னுக்குப் பின் முரணான நிலைப்பாடுகளையும், அறிவியலுக்குப் புறம்பான ஆரூடங்களையும் தெரிவித்து வருகிறது அதிமுக அரசு.

 அவசரகதி

அவசரகதி

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவதில் காட்டும் அவசரகதியும் அதுபோலத்தான் உள்ளது. மாணவர்களின் உயிருடன் விளையாடும் விபரீத மனப்போக்கைக் கைவிட்டு, பொதுத்தேர்வைத் தள்ளி வைத்து, பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு, உரிய கால அவகாசத்துடன் தேர்வினை நடத்துமாறு மீண்டும் வலியுறுத்துகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

English summary
4.0 lockdown: dmk leader mk stalin urges to postpone 10th public examination
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X