தமிழகத்தில் 4 லட்சம் பேருக்கு மிஸ்ஸிங்கா? மத்திய அரசு தரப்போகும் 2000 உதவி தொகை!
சென்னை: பிரதமரின் விவசாய உதவித்தொகை திட்ட பயனாளிகளுக்கு ஐந்து மாநில தேர்தலுக்கு முன்பாக 2000 உதவித்தொகையை மத்திய அரசு விடுவிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதில் தமிழகத்தில் பயன்பெற வேண்டியவர்கள் 24 லட்சம் பேர் என்றும், ஆவணங்களுடன் விண்ணப்பிக்காததால் சுமார் 4 லட்சம் பேருக்கு கிடைக்காமல் போய்விட்டதாகவும் சொல்லப்படுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு சாகுபடி நேரத்தில் உதவும் வகையில் பிரதமரின் விவசாய உதவித் தொகை திட்டம் ஒன்றை அறிவித்தது. இந்த திட்டம் கடந்த 2018-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் முதலாக செயல்படுத்தப்பட்டது. அப்போது முதல் இத்திட்டத்தின் கீழ் 3 தவணையாக தலா 2000 வீதம் ஆண்டுக்கு 6 ஆயிரம் ரூபாயை மத்திய அரசு விவசாயிகளுக்கு வழங்கி வருகிறது.

ஐந்து ஏக்கருக்கு கீழ் நிலம் வைத்துள்ள சிறு, குறு விவசாயிகள், இத்திட்டத்தில் பயன்பெற முடியும். தமிழகத்தில் கொரோனா காலத்தில், 41 லட்சம் பேர் இத்திட்டத்தின் கீழ் உதவித்தொகை பெற்றனர். ஆனால் இணையதளத்தின் ரகசிய குறியீட்டை தவறாக பயன்படுத்தி விவசாயிகள் அல்லாத பலர் முறைகேடாக உதவித்தொகை பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது.
தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதுமே இப்படியான முறைகேடுகள் நடந்தது.இதனால விவசாயிகள் உதவி தொகை விவகாரத்தில் கடும் கட்டுப்பாடுகளை விதித்தது. இதற்கென தனி இணைய தளத்தை உருவாக்கிய மத்திய அரசு, முறையான ஆவணங்களு டன் விண்ணப்பிப்பவர்களுக்கு மட்டுமே உதவித்தொகை நேரடியாக வங்கி கணக்கில் விடுவித்து வருகிறது.
தமிழகத்தில் 13-வது தவணையில் மொத்தம் 48.9 லட்சம் விவசாயிகள் உதவித்தொகை கேட்டு பதிவு செய்திருந்த நிலையில் 20.29 லட்சம் விவசாயிகளுக்கு மட்டும் உதவித்தொகை கிடைத்தது. ஆதார், வங்கி கணக்கு உள்ளிட்ட ஆவணங்களை முறையாக பதிவேற்றம் செய்யாததால் தகுதியுள்ள விவசாயிகளுக்கு கிடைக்காமல் இருந்தது.

இந்த நிலையில் 14-வது தவணை உதவித்தொகையில் தமிழகத்தை சேர்ந்த 63,233 விவசாயிகள் கூடுதலாக சேர்க்கப்பட்டனவர். 14 வது தவணை உதவி தொகை கடந்த ஜூலை மாதம் விடுவிக்கப்பட்டது.இந்நிலையில் விரைவில் ஐந்து மாநில தேர்தல் நடைபெற உள்ளதால், அதற்கு முன்பாக 15வது தவணை உதவி தொகை கிடைக்க போகிறது.
இந்த சூழலில் தமிழகத்தில் 24.6 லட்சம் பேர் தகுதியுள்ளவர்கள் பிரதமரின் விவசாய உதவித் தொகை திட்டம் பெற தகுதி உள்ளவர்கள் என்றும் ஆனால் சுமார் 20.30 லட்சம் பேர் மட்டுமே உதவி தொகை பெறுவதாகவும் , முறையான ஆவணங்களை இணைத்திருந்தால் சுமார் 4 லட்சம் விவசாயிகளுக்கு கூடுதல் உதவி தொகை கிடைத்திருக்கும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications