கண்ணில் மண்ணை தூவி.. ஓட முயன்ற பல்லடம் கொலையாளி.. காலில் சுட்டு பிடித்த போலீஸ்.. என்ன நடந்தது?
சென்னை: பல்லடம் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் போலீசார் மூலம் காலில் சுட்டு பிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
பல்லடத்தில் நடந்த கொலை சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கி உள்ளது. ஒரு குடும்பத்தையே ஒரு கும்பல் கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு கிராமத்தைச் சேர்ந்தவர் செந்தில் குமார் (47). இவரின் குடும்பம்தான் மொத்தமாக வெட்டி கொலை செய்யப்பட்டு உள்ளது. 4 பேர் வீட்டில் இருந்த போது துரத்தி துரத்தி கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

செந்தில் குமார் தவிடு புண்ணாக்கு வியாபாரம் செய்து வந்தார். இந்த நிலையில் நேற்று முதல்நாள் இரவு இவரது வீட்டின் அருகே 3 பேர் கொண்ட கும்பல் மது அருந்திக் கொண்டிருந்ததாக தெரிகிறது. இதனை செந்தில் குமார் தட்டிக் கேட்டுள்ளார். அப்போது ஆத்திரமடைந்த அந்த கும்பல் செந்தில் குமாரை முதலில் அரிவாளால் வெட்டி கொன்றது என்று செய்திகள் வந்தன.
இதை தடுக்க சென்ற அவருடைய தம்பி மோகன்ராஜையும் அவருடைய தாய் புஷ்பவதி, சிச்தி ரத்தினாம்பாள் ஆகியோரையும் அந்த கும்பல் வெட்டியுள்ளனர். ஆனால் உண்மையில் இவர்களுக்கு இடையில் முன்விரோதம் இருப்பதாக கூறப்படுகிறது. இவர்கள் இரண்டு தரப்பும் எதிர் எதிரே கடைகள் வைத்துள்ளனர். அப்போது ஏற்பட்ட மோதலே இந்த கொலைக்கு காரணம் என்கிறார்கள்.
சுட்டு பிடித்தனர்: இந்த நிலையில்தான் பல்லடம் கொலை வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி வெங்கடேஷுக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். 2 கால்களிலும் காயம் ஏற்பட்ட நிலையில், அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போலீசார் அவருக்கு மருத்துவ பரிசோதனை செய்தனர். இந்த காயத்திற்கான காரணம் தற்போது வெளியாகி உள்ளது
வெங்கடேஷ், சோன முத்தையா ஆகிய இருவர் திருப்பூர் மாவட்ட வடக்கு காவல் நிலையத்தில் நேற்று சரணடைந்தனர். இதில் வெங்கடேஷை விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்றுள்ளனர். அதன்பின் அவரை ஆயுதங்களை ஒளித்து வைத்த இடத்திற்கும் கொண்டு சென்றுள்ளனர்.
அப்போது போலீசார் கண்ணில் மண்ணை தூவி விட்டு அவர் தப்பி ஓட முயன்று உள்ளார். அப்போது போலீசார் அவரை காலில் சுட்டு பிடித்தனர். இதையடுத்து இவர் தற்போது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்

தப்பி ஓட முயற்சி: நேற்றும் இதில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ஒருவர் தப்பி ஓட முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. கொலைக்கு பயன்படுத்திய கத்திகளை எடுத்து தருவதாக கைதான செல்லமுத்து விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு உள்ளார். போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்ட போது செல்லமுத்து தப்ப முயற்சி செய்துள்ளார்.
மாடியிலிருந்து குதித்து தப்பியோடிய போது, கால் எலும்பு முறிந்து செல்லமுத்துவுக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. தனிப்படை போலீசார் சிகிச்சைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
நிதியுதவி: இவர்களின் குடும்பத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். அதில், திருப்பூர் மாவட்டம், பல்லடம் வட்டம், மாதப்பூர் கிராமம், மஜரா கள்ளக்கிணர் அருகில் குரைதோட்டம் என்ற இடத்தில் நேற்று (3-9-2023) இரவு அடையாளம் தெரியாத மூன்று நபர்கள் மது அருந்திவிட்டு புஷ்பவதி, க/பெ.பழனிசாமி (வயது 69), ரத்தினாம்பாள், க/பெ. சுப்பிரமணியம் (வயது 58), செந்தில்குமார், த/பெ.சண்முகம் (வயது 48) மற்றும் மோகன்ராஜ், த/பெ.பழனிசாமி (வயது 45) ஆகியோரை அரிவாளால் வெட்டியதில் அனைவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற அதிர்ச்சியான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.
இக்குற்றச் சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவரை பிடித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் ஏனைய குற்றவாளிகளையும் விரைவில் கைது செய்ய உத்திரவிட்டுள்ளேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும், அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா இரண்டு இலட்சம் ரூபாய் முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன், என்று கூறியுள்ளார்.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications