Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

புத்தாண்டு பரிசு' தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.. முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி வழங்கப்படுவதகாக முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதன்படி 34 சதவீதத்தில் இருந்து 38 சதவிகிதமாக அகவிலைப்படி உயர்த்த்தப்படுகிறது.

தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி இன்று முதல் உயர்த்தப்படுவதாக முதல்வர் மு.கஸ்டாலின் அறிவித்துள்ளார்.

34 சதவிகிதம் ஆக இருந்த அகவிலைப்படி 38 சதவிகிதம் ஆக உயர்த்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டுள்ளது.

38 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது

38 சதவிகிதமாக உயர்த்தப்படுகிறது

சமவேலைக்கு சம ஊதியம் கோரி போராடி வரும் இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்படும் என்று முதல்வர் மு.கஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- அரசின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பெரும் பணியில் தங்களை அர்ப்பணித்து செயல்படும் அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்கினை முழுமையாக உணர்ந்துள்ள இந்த அரசு, அவர்களின் நலனை தொடர்ந்து பாதுகாத்து வருகின்றது.

கடும் நிதி நெருக்கடி

கடும் நிதி நெருக்கடி

முந்தைய அரசு விட்டுச் சென்ற கடும் நிதி நெருக்கடி மற்றும் கடன் சுமைக்கு இடையேயும், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்ற முனைப்புடன் இந்த அரசு செயல்பட்டு வருகின்றது. இந்த வகையில், அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கோரிக்கையான அகவிலைப்படி உயர்வு குறித்து கனிவுடன் பரிசீலித்து, இந்த உயர்வினை 1.1.2023 முதல் செயல்படுத்திட இந்த அரசு முடிவு எடுத்துள்ளது. இதன்படி, தற்போது 34 சதவீதமாக உள்ள அகவிலைப்படி 1.1.2023 முதல் 38 சதவீதமாக உயர்த்தப்படும்.

16 லட்சம் அரசு அலுவலர்கள்

16 லட்சம் அரசு அலுவலர்கள்

இதனால் சுமார் 16 லட்சம் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவார்கள். இந்த உயர்வால் ஆண்டு ஒன்றுக்கு அரசுக்கு 2359 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் ஏற்படுமெனினும், அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களின் நலன் கருதி இந்த நிதிச் சுமையை அரசு ஏற்றுள்ளது.

 ஆய்வு செய்யக் குழு

ஆய்வு செய்யக் குழு

மேலும் சமவேலை, சம ஊதியம் என்ற கோரிக்கை தொடர்பாக வலியுறுத்தி போராடி வரும் ஆசிரியர்களின் கோரிக்கைகள் குறித்து ஆய்வு செய்து தகுந்த பரிந்துரைகளை அளிப்பதற்காக நிதித்துறை செயலாளர் - செலவினம் அவர்களின் தலைமையில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் மற்றும் தொடக்க கல்வி இயக்குனர் ஆகியோர் உறுப்பினர்களாக கொண்ட குழு ஒன்று அமைக்கப்படும். இந்தக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து இந்த கோரிக்கை தொடர்பான நடவடிக்கைகளைமேற்கொள்வதற்கு அரசு முடிவு செய்துள்ளது

புத்தாண்டு பரிசு

புத்தாண்டு பரிசு

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு புத்தாண்டு பரிசாக அறிவிக்கப்பட்டுள்ள இந்த அறிவிப்பினை ஏற்று, 2023 ஆம் ஆண்டின் தொடக்கத்தினை உவகையுடன் கொண்டாடி மக்கள் வாழ்வை வளம் பெற செய்வதற்கான பெரும் பணியில் அரசுடன் ஒத்துழைத்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.

அகவிலைப்படி என்றால் என்ன?

அகவிலைப்படி என்றால் என்ன?

பணவீக்கம் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே இருக்கும். பணவீக்கம் காரணமாக விலைவாசி உயரும். இந்த விலை வாசி உயர்வை சமாளிக்க மாநில அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி உயர்த்தப்படும். இதைத்தான் அகவிலைப்படி உயர்வு என்பார்கள். வருடத்திற்கு இரண்டு முறை இப்படி அகவிலைப்படி உயர்த்தப்படும். ஜனவரி - ஜூன் மற்றும் ஜூலை - டிசம்பர் என்று இரண்டு கட்டமாக இந்த உயர்வு செய்யப்படும்.

4 சதவிகிதம் உயர்த்தி..

4 சதவிகிதம் உயர்த்தி..

இந்த அகவிலைப்படியை பொருத்தவரை பொதுவாக 3 சதவிகிதம் முதல் 6 சதவிகிதம் உயர்த்தப்படும். இந்த வருடம் ஜனவரி மாதத்திற்கு பின் அகவிலைப்படி உயர்வு எவ்வளவு இருக்கும் என்று அரசு ஊழியர்கள் எதிர்பார்த்து காத்து இருந்தனர். இந்த நிலையில் தான் அகவிலைப்படி உயர்வை 4 சதவீதம் உயர்த்தி தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+