ஓடும் பஸ்ஸில் பாலியல் சேட்டை.. சிம்பிள் ஆயுதத்தால் கும்மாங்குத்து குத்திய பெண் அட்வகேட்.. வீடியோ
சென்னை: மதுரவாயலில் அரசு பேருந்தில் பெண் வழக்கறிஞரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக புகாரின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டார். இந்த பாலியல் சீண்டல் வீடியோ சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டு வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
வேலூர் மாவட்டம், காவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த 28 வயதுடைய பெண், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். நேற்று வேலூருக்கு கோயம்பேடு பஸ் நிலையத்தில் இருந்து அரசு பஸ்சில் தனது தாயுடன் சென்று கொண்டு இருந்தார்.
அப்போது பின் சீட்டில் அமர்ந்திருந்த ராகவன் (40), என்பவர் அந்த பெண்ணிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாக கூறியதைடுத்து வானகரம் அருகே அரசு பஸ் நிறுத்தப்பட்டு மதுரவாயல் போலீஸாசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

பின் சீட்டிலிருந்து
இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீஸார் அந்த நபரை கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் அந்த நபர் பின் சீட்டிலிருந்து பெண் வக்கீலிடம் தவறாக நடக்க முயலும் போது சட்டை ஊக்கை வைத்து அந்த நபரின் கையில் குத்தி விட்ட காட்சிகள் பதிவாகின. ஊக்கில் குத்தும் போது கையை எடுப்பதும், பின்னர் கையை விடுவதும் என அந்த நபர் இருந்தார்.

பெண் வழக்கறிஞர்
இதையடுத்து அந்த பெண் வழக்கறிஞர் போலீஸாரிடம் வீடியோ ஆதாரத்துடன் புகார் செய்தார். இதையடுத்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக ராகவன் என்பவரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். பாலியல் சீண்டலுக்குள்ளான பெண் துணிச்சலாக இந்த பிரச்சினையை அணுகிய விதத்திற்கு நெட்டிசன்கள் பாராட்டி வருகிறார்கள்.

பாலியல் குற்றங்கள்
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தற்போது அதிகரித்து வரும் நிலையில் எல்லா பெண்களும் இது போன்று துணிச்சலாக தங்களுக்கு எதிரான குற்றத்தை அணுக வேண்டும். குடும்ப மானம், கோர்ட், கேஸுனு அலை வேண்டியிருக்கும் என்ற சாக்கு போக்குகளை புறந்தள்ளிவிட்டு பெண்கள் தைரியலட்சுமியாக இருக்க வேண்டும் என்கிறார்கள்.

பாலியல் புகார்கள்
ரயில்களிலும் இது போன்ற பாலியல் புகார்கள் அதிகரித்துவிட்டன. இதனால் ரயில்களிலும் இரவு நேர பேருந்துகளிலும் பாதுகாப்புக்கு ஒரு போலீஸார் வலம் வர வேண்டும் என்பது பெண்களின் கோரிக்கையாக இருக்கிறது. மேலும் இவ்வாறு பிடித்துக் கொடுக்கப்படும் நபர்களுக்கு கடுமையான தண்டனையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
-
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ் -
சாய்பாபா காலனி பிரச்சனை ஓவர்.. சிங்காநல்லூருக்கும் விடிவு காலம்.. தவெக ஆட்சியில் பிறந்த நம்பிக்கை -
மனித மூளையை உலுக்கக்கூடிய ஒரு விஷயம்.. ஏஐ குறித்து சத்ய நாதெல்லா பதிவு.. கமல் பதில் -
ஸ்டாலின் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா நோட்டீஸ் -
தமிழ்நாடுக்கு போட்டியாக கிளம்பிய குஜராத்.. விஜய்-க்கு நேரடி சவால்! -
நீலாங்கரை வீட்டிற்குள் நுழைந்த மாஸ் பிரபலம்! அண்ணன் விஜய்யை கண்டதுமே கட்டிப்பிடித்து உருகிய சிம்பு -
குத்துவிளக்கு ஏற்ற சொன்னா இப்படியா செய்வது? Narcissistic Behaviour ப்ரோ! விஜய்யை வறுத்த அதிமுக












Click it and Unblock the Notifications