சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஸ்டாலின் அறிவித்த 5 திட்டங்கள்: பொற்கால ஆட்சி என்று வைகோ வாழ்த்து - ப.சிதம்பரம் மகிழ்ச்சி

முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ள ஐந்து அறிவிப்புகளும், மக்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று இருக்கின்றது. பொற்கால ஆட்சி தொடங்கி விட்டது என்ற நம்பிக்கையை விதைத்து இருக்கின்றது.

Google Oneindia Tamil News

சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கின்ற ஐந்து அறிவிப்புகளும், மக்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. பொற்கால ஆட்சி தொடங்கி விட்டது என்ற நம்பிக்கையை விதைத்து இருக்கிறது என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறியுள்ளார். பதவியேற்ற நாளிலேயே 5 திட்டங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மதிமுக பொதுச் செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கை : இன்று காலையில், தமிழ்நாட்டின் முதல்வராகப் பொறுப்பு ஏற்ற பிறகு மு.க.ஸ்டாலின் அறிவித்து இருக்கின்ற ஐந்து அறிவிப்புகளும், மக்களிடம் மாபெரும் வரவேற்பைப் பெற்று இருக்கின்றது. பொற்கால ஆட்சி தொடங்கி விட்டது என்ற நம்பிக்கையை விதைத்து இருக்கின்றது.

5 projects announced by Stalin: Vaiko,P. Chidambaram congratulates

கொரோனா பாதிப்புகளை ஈடுகட்ட உதவியாக, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ 4000 தருவதாக உறுதிமொழி கூறியபடி, முதல் தவணையாக, இந்த மாதமே ரூ 2000 வழங்குவதாக அறிவித்து இருக்கின்றார். ஆவின் பால் விலை, லிட்டருக்கு மூன்று ரூபாய் குறைத்து இருப்பது, குழந்தைகள் வயிற்றில் பால் வார்த்து இருக்கின்றது.

நாளை முதல், அனைத்து மகளிரும், சாதாரண கட்டணப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம்; தனியார் மருத்துவமனைகளில் கொரோனா மருத்துவம் பெறுவோருக்கு ஆகின்ற செலவுகளை, முதல் அமைச்சரின் காப்பு ஈட்டுத் திட்டத்தின் கீழ், தமிழக அரசே செலுத்தும்.

மக்கள் தெரிவிக்கின்ற குறைகளின் மீது உடனடி நடவடிக்கை எடுத்துச் சீர் செய்திட, 'உங்கள் தொகுதியில் முதல் அமைச்சர்' என்ற திட்டம் தொடங்கப்படுகின்றது; அதற்குப் பொறுப்பாளராக ஒரு ஐஏஎஸ் அதிகாரி செயல்படுவார் என்ற ஐந்து அறிவிப்புகளின் மூலம், எடுத்த எடுப்பிலேயே நடுநிலையாளர்களின் மனதைக் கவர்ந்து கொண்டார். எதிரிகள் வட்டாரம் திடுக்கிட்டுப் போயிருக்கின்றது.

தமிழ்நாட்டில் ஐந்து என்பதற்கு ஒரு சிறப்பு உண்டு. நிலம், நீர், காற்று நெருப்பு, வெளி இவற்றையே இயற்கையின் அமைப்பாக வகுத்து இருக்கின்றனர். தமிழ் இலக்கியங்களில், ஐம்பெருங் காப்பியங்கள் தனிச்சிறப்பு பெற்றவை.

அறிஞர் அண்ணா மறைந்தபிறகு, திருச்சியில் நடைபெற்ற மாநாட்டில், தி.மு.கழகத்தின் அடிப்படைக் கொள்கைகள் என, ஐந்து முழக்கங்களைக் கலைஞர் எழுப்பினார். அந்த வரிசையில், இன்றைய ஐந்து அறிவிப்புகளும் இடம் பெறுகின்றன. இனி ஐந்து ஆண்டுகளும் பொற்கால ஆட்சியாக இருக்கும் என்பதற்கு அடையாளம் இது. முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், அனைவருடைய எதிர் பார்ப்புகளையும் விஞ்சி, ஆட்சி புரிந்து புகழ் பெறுவார் என்று வைகோ பாராட்டியுள்ளார்.

ப. சிதம்பரம் வாழ்த்து

பதவியேற்ற நாளிலேயே 5 திட்டங்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது என்று ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். தமிழகத்தின் நிதி நிலைமையை சமாளிக்க சிறிது காலமாகும் என்று அவர் கருத்து தெரிவித்தார். தமிழக அரசின் நிதி நிலைமை சீராக இல்லை என்பதை முதல்வர் ஸ்டாலின் உணர்ந்திருப்பார் என்று நம்புகிறேன் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார்.

நிதிநிலைமையை சீரமைக்கும் நடவடிக்கைகளை உடனடியாக தொடங்க வேண்டும். நிதி நிலைமை சீராகும் போது தான் இன்னும் சில மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்த முடியும் எனவும் ப.சிதம்பரம் குறிப்பிட்டுள்ளார்.

English summary
The five announcements made by Chief Minister MK Stalin have been well received by the people. Secretary-General of the Presidency, Vaiko, has said that it is sowing hope that the golden rule has begun. P. Chidambaram said that he was very happy that Chief Minister MK Stalin announced 5 plans on the day of his inauguration.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X