"சிங்கப்பெண்ணே”.. வரலாற்றிலேயே முதல்முறை! எல்லையில் பெண் ராணுவ அதிகாரிகள் -புள்ளி வைத்தது சென்னைதான்
சென்னை: எல்லைப் பகுதியில் பணியாற்றும் பெண் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி சென்னை பரங்கிமலையில் அமைந்து இருக்கும் ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையத்தில் நிறைவடைந்ததை தொடர்ந்து அவர்கள் லெப்டினண்டாக பதவியேற்றுக்கொண்டதை அடுத்து வரலாற்றிலேயே முதல்முறையாக எல்லைப் பகுதியில் பெண் ராணுவத்தினர் பணியாற்ற உள்ளனர்.
Recommended Video
சென்னை பரங்கிமலையில் இந்திய ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி மையம் அமைந்து உள்ளது. இதில் ஏராளமான வீரர்களுக்கு முப்படைகளுக்கான பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்திய ராணுவ பணிக்கான வீரர்கள் மட்டுமின்றி பிற நட்பு நாடுகளை சேர்ந்த வீரர்களுக்கும் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று ராணுவ பயிற்சி மையத்தில் 11 மாத பயிற்சி பெற்ற அதிகாரிகளுக்கான நிறைவு அணிவகுப்பு நடைபெற்றது. இந்த நிகழ்வில் லெப்டினண்டாக 186 பேர் பதவியேற்றுக்கொண்டனர். இதில் இந்திய ராணுவத்துக்காக 121 ஆண் அதிகாரிகளும் 36 பெண் அதிகாரிகளுடம் நட்பு நாடுகளை சேர்ந்த 24 பெண் அதிகாரிகளும் 5 ஆண் அதிகாரிகளும் பயிற்சியை நிறைவு செய்தனர்.
பரங்கிமலையில் நடைபெற்ற இந்த நிறைவு அணிவகுப்பு நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வங்கதேசத்தின் தலைமை ராணுவ தளபதி சபியுத்தீன் ஹமீது வருகை தந்து பயிற்சி பெற்று பதவியேற்ற அதிகாரிகளுக்கு வாழ்த்தை தெரிவித்துக்கொண்டார். இந்த பயிற்சியை நிறைவு செய்த இந்தியாவின் பெண் ராணுவ அதிகாரிகளில், 5 அதிகாரிகள் இந்திய எல்லை பகுதிகளில் பணியாற்ற இருக்கிறார்கள். இவர்களுக்கு பீரங்கி படையில் பணி ஒதுக்கப்பட்டு உள்ளது.
இந்திய முப்படைகளில் பெண்கள் இருந்தாலும், எல்லை பகுதியில் பெண்கள் இதுவரை பணிபுரிந்தது இல்லை. இந்த நிலையில் தற்போது இந்திய ராணுவ வரலாற்றிலேயே முதல் முறையாக 5 பெண்கள் இந்திய எல்லையோர ராணுவ பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கின்றனர். இந்த பயிற்சியில் சிறப்பாக செயல்பட்டதற்காக அஜய் சிங் கில் என்ற அதிகாரிகளுக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டது. அவருக்கு அடுத்த இடம்பிடித்த அஜய் குமாருக்கு வெள்ளியும், அடுத்த இடத்தில் இருந்த மெஹக் சைனிக்கு வெண்கலமும் வழங்கப்பட்டது.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications