ரயிலில் தூங்கிய மாணவி.. சீட் ஓரமாக கையை விட்டு சில்மிஷம்.. இளைஞருக்கு 5 வருஷம் ஜெயில்!
சென்னை: ரயிலில் தூங்கி கொண்டிருந்த மாணவிக்கு, சீட் ஓரத்தின் வழியாக கையை விட்டு பாலியல் தொந்தரவு செய்த இளைஞருக்கு 5 வருட ஜெயில் தண்டனை விதித்துள்ளார் கோவை கோர்ட்டு நீதிபதி ராதிகா!
கேரள மாநிலத்தை சேர்ந்த சிறுமி.. 11-ம் வகுப்பு படிக்கிறாள்.. தன் குடும்பத்தினருடன் சென்னை சென்றுவிட்டு, கடந்த 2016, ஜூலை மாதம் 11-ந் தேதி இரவு நேரம்.. ரயிலில் ஊர் திரும்பி கொண்டிருந்தார்.

ரிசர்வேஷன் செய்யப்பட்டது என்பதால், பர்த்தில் ஏறி சிறுமி படுத்து கொண்டாள். சிறுமி படுத்திருந்த மேல் படுக்கைக்கு கீழுள்ள படுக்கையில், மேற்கு வங்கத்தை சேர்ந்த 21 வயது இளைஞர் படுத்திருந்தார். அவர் பெயர் கோலாம் மோர்ட்டோஜா.
திருப்பூர் - கோவை இடையே ரயில் வந்து கொண்டிருந்தது. பெட்டியில் லைட் ஆப் பண்ணியதுமே இருக்கையின் ஓரத்தின் வழியாக கையை விட்டு மாணவிக்கு பாலியல் தொந்தரவு செய்ய ஆரம்பித்தார். பயந்து போன சிறுமி, இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ஆனாலும் அந்த இளைஞர் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார்.
அதனால் அந்த மாணவி கேரள ரெயில்வே போலீசில் புகார் செய்தார். ஆனால், இது திருப்பூருக்கும்- கோவைக்கும் இடையே சம்பவம் நடந்ததால் போத்தனூர் ரெயில்வே போலீசுக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, இளைஞர் கோலாம் மோர்ட்டோஜா போக்சோவில் கைதானார்.
இது தொடர்பான வழக்கு கோவை மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தநிலையில் தற்போது தீர்ப்பு சொல்லப்பட்டுள்ளது. அதில், கோலாம் மோர்ட்டோஜாவுக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1000 அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. ஒருவேளை அபராத தொகையை கட்டத்தவறினால் இன்னும் 6 மாதம் கடுங்காவல் தண்டனை விதிக்கப்படும் என்று நீதிபதி ராதிகா தீர்ப்பு சொன்னார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications