சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

ஓ மைகாட்.. சாந்தியை பார்த்தீங்களா.. 52 வயசாகுது.. குன்றத்தூர் டூ தி.நகர்.. போலீஸே ஆடிப்போயிட்டாங்களே

சென்னையில் திருட்டு சம்பவம் ஒன்றில் 52 வயது பெண் கைது செய்யப்பட்டுள்ளார்

Google Oneindia Tamil News

சென்னை: சாந்திக்கு 52 வயசாகுது.. ஆனால் செய்யும் காரியம் பூராவுமே தில்லாலங்கடி வேலைதான்.. இப்போது இவர் ஜெயிலில் உள்ளார். இவருடன் சேர்த்து மேலும் 2 பேர் கைதாகி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

வழக்கமாக, பண்டிகை காலங்களில் திருட்டு சம்பவங்கள் நடப்பது இயல்பு.. இதற்காக போலீசார் நகரின் எல்லா கடைவீதிகளிலும் கூட்ட நெரிசல் நிரம்பி வழியும்..

இந்த நெரிசலை பயன்படுத்தி திருட்டு சம்பவங்கள் வழக்கமாக நடக்கும் எனினும், எல்லா இடங்களிலும் கண்ணும் கருத்துமாக போலீசார் கண்காணித்து வருகின்றனர்.. தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

 டிரஸ்ஸுக்குள்ளே

டிரஸ்ஸுக்குள்ளே

அவசர எண்களை ஆங்காங்கே வைத்து, விழிப்புணர்வு வாசகங்களையும் எழுதி மாட்டி வைத்தும், கவனமுடன் இருக்கும்படி, அறிவுரைகளையும் பொதுமக்களுக்கு சொல்லி கொண்டே இருந்தும், சில பெண்கள் தைரியமாக கைவரிசையை காட்டி விடுகின்றனர். அப்படித்தான், சில மாதங்களுக்கு முன்பு வண்ணாரப்பேட்டையில் சிக்கினார் நிர்மலா.. அங்குள்ள ஒரு துணிக்கடையில் முண்டியடித்து கூட்டம் பரபரப்புடன் இங்குமங்கும் நடமாடிக் கொண்டிருந்தது.. நைஸாக உள்ளே புகுந்துவிட்டார்.. ஆனால், அந்த கடையில் இருந்த சிசிடிவி கேமிராவை கடை ஊழியர்கள் கண்காணித்து கொண்டிருந்தனர்..

 காஸ்ட்லி சேலை

காஸ்ட்லி சேலை

அந்த நேரம் பார்த்து, காஸ்ட்லி புடவை ஒன்றை எடுத்து, தன்னுடைய சேலைக்குள் மறைத்து திணித்து கொண்டார் நிர்மலா.. இவரை ஊழியர்கள் சுற்றி வளைத்து பிடித்தபோதுதான், ஏற்கனவே நிர்மலாவின் புடவைக்குள் வேறு சில புடவைகள் திருடி சுருட்டி வைத்திருந்தது தெரியவந்தது. அதேபோலதான் தற்போது சாந்தி சிக்கி உள்ளார்.. ஆவட கோவிந்தராஜபுரத்தை சேர்ந்தவர் பரந்தாமன்.. இவர் தன்னுடைய மனைவி, மற்றும் குழந்தைகளுடன் தி.நகர், ரங்கநாதன் தெருவில் உள்ள ஒரு துணிக்கடைக்கு வந்தார்.. அங்குள்ள பெண்கள் பிரிவில் புடவை எடுத்துக் கொண்டிருந்தார். அந்த கடையிலும் கூட்டம் அதிகமாகவே இருந்தது..

சாகசம்

சாகசம்

பிறகு திடீரென பரந்தாமனின் பர்ஸை காணவில்லை.. கடைக்குள் தேடி தேடி பார்த்தும் கிடைக்காததால், மாம்பலம் போலீசுக்கு ஓடினார்.. போலீசாரும் துணிக்கடைக்கு வந்து அங்குள்ள சிசிடிவி பதிவுகளை ஆய்வு செய்தபோது, சாந்தியின் சாகசம் தெரியவந்தது.. பரந்தாமனின் மணிபர்சை நாசூக்காக திருடியதை அதில் பதிவாகி இருந்தது.. பிறகு ஸ்டேஷனுக்கு சாந்தியை அழைத்து சென்றனர்.. இவர் குன்றத்தூர் பகுதியை சேர்ந்தவராம்-. 52 வயதாகிறது.. திருடுவதற்காகவே குன்றத்தூரில் இருந்து தி.நகர் தினமும் வந்து போவாராம்..

ஹைலைட்

ஹைலைட்

பிறகு 3 வழக்குகள் இவர்மீது பதிவு செய்யப்பட்டதுடன், அவரிடமிருந்த பணம் ரூ.9,200 அடங்கிய மணிபர்ஸ் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.. இவருக்கு தில் சாந்தி என்று இன்னொரு பெயரும் உள்ளது.. இதில் ஹைலைட் என்னவென்றால், பரந்தாமனின் பர்சை, திருடிக்கொண்டு வெளியே வந்து, அதே தி.நகர் பகுதியில் மேலும் 2 இடங்களில் 2 நபர்களின் செல்போனை ஆட்டைய போட்டுள்ளார்.. தொழிலில் அவ்வளவு ஷார்ப்பாக இருக்கிறார் போலும்..

 தில் சாந்தி

தில் சாந்தி

இவருக்கு வேறு சில திருட்டு கும்பலுடன் தொடர்பு உள்ளதாக கூறப்படுகிறது.. தி.நகர் ஏரியாவில் இவருக்கு சில ஏஜெண்ட்கள் இருக்கிறார்களாம்.. அவர்கள்தான் கூட்ட நெரிசல் உள்ள கடைகள் குறித்து துப்பு தருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து அவர்களுக்கும் போலீசார் வலையை விரித்துள்ளனர்.. இந்த விசாரணையின்போதுதான் இன்னொரு தகவல் வெளியானது.. சாந்தி மீது பல்லாவரம் போலீஸ் ஸ்டேஷனில் சரித்திர பதிவேடு குற்றவாளியாம்.. இவர் மீது பல்லாவரம், குரோம்பேட்டை, மாம்பலம் உள்ளிட்ட பல காவல் நிலையங்களில் திருட்டு வழக்குகள் இன்னமும் நிலுவையில் இருக்கிறது.. அதே மாம்பலம் ஏரியாவில் கைவரிசையை காட்ட வந்துள்ளார் என்றால், இவர் நிஜமாகவே தில் சாந்திதான்.. இப்போது சாந்தி ஜெயிலுக்குள் கம்பி எண்ணி கொண்டிருக்கிறார்.

English summary
52+ and How Did T Nagar Police arrest accust Shanthi, and what happened
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X