சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தமிழகத்தில் இன்று 580 பேருக்கு கொரோனா.. மொத்த பாதிப்பு 5 ஆயிரத்தை தாண்டியது.. சென்னை டாப்

Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் இன்று புதிதாக 580 பேருக்கு கொரோனா நோய் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை ஐந்தாயிரத்தை தாண்டியுள்ளது.

தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 5409 ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக, சென்னையில் 316 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இன்று 2 பேர் உயிரிழந்துள்ளனர்.

சென்னையின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,644 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில், குணமடைந்தோர் 1547 பேராகும். உயிரிழப்பு 37 என்று அரசு அறிக்கை தெரிவிக்கிறது.

கொரோனாவுக்கு மருந்தாக கங்கை நீரை பயன்படுத்தி ஆய்வு செய்யப்படுமா? ஐசிஎம்ஆர் அளித்த விளக்கம்கொரோனாவுக்கு மருந்தாக கங்கை நீரை பயன்படுத்தி ஆய்வு செய்யப்படுமா? ஐசிஎம்ஆர் அளித்த விளக்கம்

சிகிச்சை

சிகிச்சை

தமிழகத்தில் தற்போது சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 3,822 பேராகும். இன்றைய பாதிப்பில் ஆண்கள் 410 பேர். பெண்கள் 170 பேராகும். 24 மணி நேரத்தில் பலியான 2 பேரில் ஒருவர் பெண், ஒருவர் ஆண் ஆகும். 48 வயதாகும் பெண், ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.

பரிசோதனை அதிகம்

பரிசோதனை அதிகம்

இன்று ஒரே நாளில், தமிழகத்தில் மிக அதிகமாக 14,102 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. எனவே, இதுவரை தமிழகத்தில் பரிசோதனை செய்யப்பட்டோர் எண்ணிக்கை என்பது, 1 லட்சத்து 92 ஆயிரத்து 574 என்ற அளவுக்கு அதிகரித்துள்ளது. தென் மாநிலங்களிலேயே, தமிழகத்தில்தான், மிக அதிக அளவுக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்பது இதில் ஒரு நல்ல விஷயமாகும்.

அரசு தகவல்

அரசு தகவல்

தமிழகத்தில் 52 பரிசோதனை மையங்கள் இயங்கி வருவதாகவும், அதில் 36 அரசு பரிசோதனை மையங்களாகும். 16 தனியார் பரிசோதனை மையங்களாகும். இன்று மட்டும் 31 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். ஆக மொத்தம், 1547 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டங்களின் நிலை

மாவட்டங்களின் நிலை

தமிழகத்தில் சென்னைக்கு அடுத்தபடியாக அதிகம் பாதித்த மாவட்டம், திருவள்ளூர் ஆகும். திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், பெரம்பலூர் மற்றும் அரியலூர் ஆகிய வட தமிழக மாவட்டங்களின் பாதிப்பு அதிகரித்துள்ளது. திருவள்ளூரில் 63, விழுப்புரத்தில், 45, பெரம்பலூர் 33, கடலூர் 32, அரியலூரில் 24 பாதிப்பு பதிவாகியுள்ளது.

மாவட்டங்கள்

மாவட்டங்கள்

திருவண்ணாமலை 17, செங்கல்பட்டு 13, ராணிப்பேட்டை 7, திருச்சி 5, கிருஷ்ணகிரி 4, தேனி, நெல்லை 3, காஞ்சிபுரம், கரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருப்பத்தூர் 2 எண்பது எண்ணிக்கையாகும். நேற்றையைவிட இன்று, மொத்த பாதிப்பு குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

English summary
580 new coronavirus cases in Tamil Nadu on Thursday. State's tally crosses 5000-mark. Chennai has 316 cases. Tiruvallur has 63 cases, Two more deaths, 31 discharged today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X